
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC Junior – ஆக்கத்திறனை வெளிக்கொணரும் உண்டியல் போட்டி சிறுவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்து சேமிப்பை ஒரு பயனுள்ள பழக்கமாக ஊக்குவிக்கிறது
June 1, 2023

DFCC வங்கி அண்மையில் தனது Junior ஆக்கத்திறன் உண்டியல் போட்டியை நடத்தியுள்ளதுடன், இது சிறுவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் அதே வேளையில் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போட்டியில் பங்கேற்ற திறமைமிக்க சிறுவர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சில தனித்துவமான மற்றும் ஆக்கபூர்வமான உண்டியல்கள் இங்கே காணப்படுகின்றன. DFCC Junior சிறுவர் சேமிப்புக் கணக்கு, DFCC வங்கியின் முதன்மையான சிறுவர் சேமிப்புக் கணக்காகும் என்பதுடன், இது சிறுவர்கள் சேமிப்பதன் மூலமாக உற்சாகமடைய உதவும் வகையில் ஏராளமான வெகுமதிகளையும், செயல்பாடுகளையும் அவர்களுக்கு வழங்குகிறது. DFCC வங்கி, இலங்கையின் எதிர்கால சந்ததியினரிடையே சேமிப்புப் பழக்கம் மற்றும் நிதியியல் பொறுப்பை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது!