DFCC Leasing என்ற குத்தகை வசதியுடன் பாரிய மாற்றத்தை அனுபவியுங்கள் – சந்தையில் கிடைக்கும் மிகவும் கட்டுபடியான தெரிவை மேற்கொள்ளுங்கள்
November 21, 2023
தலைசிறந்த வாடிக்கையாளர் பெறுமதியை வழங்குவதில் அதன் அர்ப்பணிப்புக்குப் பெயர்பெற்ற DFCC Leasing, மிகவும் கட்டுபடியான மாதாந்த குத்தகை வாடகைகளை அறிமுகப்படுத்தி, தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுக்கின்றது. பரந்துபட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, கட்டுபடி என்பதற்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, இலங்கையில் தனிப்பட்ட வாகனத்தை சொந்தமாகக் கொண்டிருக்கும் அணுகலுடன், சந்தையில் மிகவும் குறைந்த குத்தகை வாடகைகளை “DFCC Leasing” வழங்குகின்றது.
இதற்கமைவாக, DFCC Leasing இன் புதிய சலுகையின் கீழ், ரூபா 100,000/- தொகைக்கு வெறும் ரூபா 1,799/- என்ற தொகை முதற்கொண்டு, மிகவும் குறைந்த குத்தகை வாடகைகளை அனுவிப்பதுடன், தனிப்பட்ட வாகனத்தை சொந்தமாகக் கொண்டிருப்பதில் இது சந்தையில் புதியதொரு தரஒப்பீட்டு நியமத்தை நிலைநாட்டியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் மிகவும் குறைந்த குத்தகை வாடகைகள், DFCC Leasing வாடிக்கையாளர்களின் கட்டுபடியாகும் தன்மையை நீட்டித்து, அவர்களுடைய தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு நேர்த்தியாக அமையும் சிறந்த வாகனத்தை தெரிவு செய்ய இடமளிக்கின்றன.
DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளுக்கான சிரேஷ்ட உப தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் வாடிக்கையாளரை மையப்படுத்திய புத்தாக்கத்தின் மீது வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி கருத்து வெளியிடுகையில், “கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். தரம் மற்றும் அபிலாஷைகளில் எவ்விதமான விட்டுக்கொடுப்புமின்றி, சொந்தமாக வாகனத்தைக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் அனுபவிப்பதை DFCC Leasing உறுதி செய்கின்றது. அந்த வகையில், இலங்கையின் மிகச் சிறந்த குத்தகை வாடகை வீதங்களை வழங்குவதில் நாம் பெருமை கொள்வதுடன், அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற எமது நன்மதிப்பைக் கட்டிக்காத்து, எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நிகரற்ற பெறுமதியை வழங்குவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
“DFCC Leasing” மூலமாக கட்டுபடி மற்றும் ஆடம்பரத்தின் புதிய யுகமொன்றை அனுபவியுங்கள். அனைத்தையும் முற்றாக மாற்றியமைக்கும் இந்த குத்தகை பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள உங்களுக்கு அருகாமையிலுள்ள DFCC வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது DFCC Leasing இன் மூலமாக இணையத்தளத்தைப் பாருங்கள். மாற்று ஏற்பாடாக, 011 2 350 000 என்ற 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை இலக்கத்தின் மூலமாக DFCC வங்கியைத் தொடர்பு கொண்டு, கட்டுபடியான வழியில் வாகனத்தை சொந்தமாக்கும் உங்கள் பயணத்தை ஆரம்பியுங்கள்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030 இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல் மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான நெகிழ்திறனுக்கு பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ மற்றும் Euromoney இன் ‘Market leader in Cash Management 2021’ உட்பட பல பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், DFCC வங்கியானது Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின் தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka) தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund – GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.