அவசர சேமிப்பு நிதியை எவ்வாறு உருவாக்குவது
October 7, 2019
வாழ்க்கையில், ஒவ்வொரு நேரத்திலும் எதிர்பாராத விதமான நிதித்தேவைகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் அவசரமாகவே தேவைப்படுவதோடு, இதற்கு, நிதி அடிப்படையில் நீங்கள் முகம்கொடுப்பதற்குத் தயாராகவே இருக்கவேண்டும். அதாவது, நீங்கள் அவசர சேமிப்பு நிதியை உருவாக்கவேண்டும் என்பதோடு, அதை தொடர்ந்து பராமரித்து வரவேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு கடினமாக இருந்தாலும், சிறிய திட்டங்கள் மற்றும் ஒழுக்கமுறைகளின் மூலம், இந்தச் செயற்பாட்டை முன்னடுக்க முடியும்.
அவசர சேமிப்பு நிதி; என்ன, ஏன் மற்றும் எவ்வளவு?
நல்ல உயர்ந்த வட்டிவீதங்களை வழங்கும் சேமிப்புக் கணக்குகளைத் தெரிவு செய்யுங்கள். DFCCஇல், நீங்கள் தெரிவு செய்வதற்கென்று பல தெரிவுகள் உள்ளன. மருத்துவத் தேவைகள், திடீரென வீட்டிலோ வாகனத்திலோ ஏற்படும் திருத்த வேலைகள், வேலையில்லாமற் போதல் போன்ற எதிர்பாராத செலவீனங்களுக்காக, இந்தக் கணக்குகளில், ஒரு தொகையை நீங்கள் ஒதுக்கி வைப்பீர்கள்.
அவசர தேவைகளின் போது தேவைப்படும் நிதியை, இலகுவாகவும் உடனடியாகவும் பெற்றுக்கொள்வது மிக முக்கியமானதாகும். இவ்வாறான அவசரத் தேவைகளின் போது, கடன்களுக்குள் சென்று சிக்கிக்கொள்வதை நீங்கள் தவிர்க்கவேண்டும். ஏனெனில், ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து மீண்டும் வெளியே வருவதற்கு, உங்களுக்கு சில காலம் தேவை.
அவசர நிதியானது, கேள்விக்கு ஏற்றவகையில் தேவைப்படும் என்பதோடு, ஒரே நேரத்தில் தேவைப்படும் என்பதால், நிலையான வைப்பு அல்லது முதலீடுகளில் பணத்தைச் சேமித்து வைக்காமல், நல்ல வட்டி வீதங்கள் வழங்கும் சேமிப்புக் கணக்குகளில் பணத்தைச் சேமிப்பதே சிறந்தது. DFCCஇன் வின்னர் சேமிப்புக் கணக்கானது, 2,500 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகைக்கு, 7% வட்டியை வழங்குகின்றது.
6 மாத காலத்துக்குக்கு, உங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய வகையிலேயே, நீங்கள் இந்த நிதியைச் சேமிக்க வேண்டும். உங்களது தொழிலை நீங்கள் இழக்க நேரிட்டாலும், அடுத்தவொரு தொழிலில் நீங்கள் இணையும் வரை, இந்த நிதியை வைத்து, உங்களது செலவீனங்களை பார்த்துக்கொள்ளலாம்.
இந்தச் சேமிப்பை எவ்வாறு செய்வது
மாதாந்த இலக்கொன்றை வைக்கவும் – உங்களது அவசர தேவை நிதிக்கென்று, உங்களது ஒவ்வொரு மாதாந்தச் சம்பளத்திலும் ஒரு தொகையை ஒதுக்குங்கள். இது சரியான முறையில் நடைபெறுவதற்கு, உங்களது சம்பளக் கணக்கிலிருந்து, வங்கி ஆணையொன்றை செயற்படுத்தி வைப்பதே சிறந்த முறையாகும்.
மிகுதி இருப்பதைப் பயன்படுத்துங்கள் – ஒவ்வொரு சம்பளகால முடிவிலும், உங்களது கணக்கை பரிசோதியுங்கள். அவ்வாறு எவ்வளவு தொகையாவது மிகுதியாக இருந்தால், அதையும் அடுத்த மாத சம்பளம் வருவதற்கு முன்னர் அவசர நிதிக் கணக்கில் வைப்பிலிடுங்கள். அவ்வாறு எந்தவொரு பணமும் உங்களது கணக்கில் மிகுதியாக இருக்கவில்லை என்றால், உங்களது செலவீனங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள். எப்படியும், ஏதாவது ஒரு செலவீனத்தைக் குறைத்து, அதை அவசர நிதிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கான வாய்ப்பு இருக்கும். DFCC கடனட்டை நீங்கள் ஒவ்வொரு முறை செலவு செய்யும் செய்யும்போது, 1% பண மீள்செலுத்துகையை மீள்செலுத்தி, சேமிப்புக்கு உதவி செய்கிறது. DFCC கடனட்டைகளை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள்.
புதிய வருவாய் ஒன்றை உருவாக்குங்கள்- இரண்டாவது அல்லது பகுதி நேர வேலையொன்றை செய்வதன் மூலமோ, நீங்கள் இனி பயன்படுத்தாத பொருளொன்றை விற்பனை செய்வதன் மூலமோ, பணப்புழக்கத்தை உருவாக்கும் முதலீடுகள் அல்லது சுதந்திர தொழில் மூலமோ உங்களது புதிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முயலுங்கள்.
சிறிய தொகையையும் பயன்படுத்துங்கள் – சிறிய பணத்தாள்களாக மாற்றி வைத்திருப்பவற்றை செலவழிப்பதை தவிர்த்துவிடுங்கள். அவ்வாறு இருக்கும் பணத்தையும் உங்களது அவசர நிதி சேமிப்புக் கணக்கில் வைப்பிட முடியும். இது இலகுவாக இருக்கும் என்பதோடு, உங்களது பணப் பையில் உள்ள பாரத்தையும் இல்லாமல் செய்யும்.
மேலதிக பணம் – வேறு ஏதாவது ஒரு வழியில் இருந்து நீங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றீர்கள் என்றால், அதை செலவழிப்பதை விடுத்து, அவசர நிதி சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு முயலுங்கள்.
அவசரத்துக்கு மாத்திரம்
அவசர நிதியானது, அவசரத் தேவைக்கு மாத்திரமே ஆகும். எனவே, மற்றைய செலவீனங்களுக்காக, அவசர நிதியிலிருந்து பணம் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். இந்த அவசர நிதியில், விடுமுறை, பிறந்தநாள், வேறு செலவீனங்கள் உள்ளிட்ட காப்புறுதி, வரி போன்ற எதிர்பார்த்த செலவீனங்களை உள்ளடக்குவதை தவிர்த்துவிடுங்கள்.
உங்களது அவசர நிதிக் கணக்கில், தேவையான அளவு நிதி சேர்த்த பின்னர், மேலே குறிப்பிட்டது போன்ற குறுகிய கால தேவைகளுக்கான செலவீனங்களுக்காக வேறொரு கணக்கில் சேமிக்க ஆரம்பியுங்கள்.
அவசர நிதி அல்லது மற்றைய நிதி என்று எதைச் சேமித்தாலும் அதை நீங்கள் ஒழுங்காக செய்து வருவதே சிறந்தது. குறுகிய கால தேவைகளை விட, நீண்ட கால பாதுகாப்பையே நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். பாரிய தேவை ஏற்படும்போது, நீங்களே உங்களுக்கு நன்றி கூறுவீர்கள்.