DFCC Agile Design Thinking Awards 2023 நிகழ்வில் புத்தாக்க சிந்தனையாளர்களுக்கு அங்கீகாரம்
February 20, 2023
இலங்கையின் மிகவும் பிரதிபலிப்பு மிக்க மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கிகளில் ஒன்றான DFCC வங்கி, தனது பணியாளர்கள் மத்தியில் புத்தாக்கம் மற்றும் விரைவியக்கம் ஆகியவற்றிற்கான மேம்பாட்டில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது. DFCC வங்கியில் உள்ள புத்தாக்கம் மற்றும் விரைவியக்கம் சார்ந்த மாற்றம் ஆனது DFCC விரைவியக்க புத்தாக்க மையம் (Agile Innovation Centre) மற்றும் மனிதவள துறைகளால் ஒருங்கிணைக்கப்பட்டு வழிநடத்தப்படுவதுடன், இவை இரண்டும் வங்கியின் பணியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. இந்த முயற்சியானது, சவாலான நவீன வணிக சூழலை திறமையாக கையாளும் திறனை வங்கிக்கு அளிக்கின்ற அதே சமயம், பணியாளர்கள் தலைமையிலான மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
DFCC வங்கியின் பணியாளர்களில் சிறந்த மற்றும் மிகவும் புத்தாக்க சிந்தனையாளர்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பவர்கள், சமீபத்தில் DFCC Agile design thinking Capacity Training certificate Awards 2023 என்ற நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டனர். இது DFCC Agile Innovation Centre ஆல் வடிவமைக்கப்பட்ட ஒரு விசேட விருது வழங்கல் திட்டமாகக் காணப்படுவதுடன், சிந்தனை வடிவமைப்பில் மேன்மையாக செயற்படுகின்றவர்களை அங்கீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்றது. வங்கியின் இடை நிலை மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ நிர்வாகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 45 பணியாளர்களுக்கு 2022 இல் இது தொடர்பான பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. வங்கியின் ஒத்துழைப்புடன், Innovation Quotient (IQ) அணியின் நிபுணர்களால் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல அங்கீகார பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, பயிற்சியாளர்கள் மற்றும் சக ஊழியர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் 34 பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த செயலமர்வானது தன்னியக்கமயமாக்கம், செயற்கை நுண்ணறிவின் உள்வாங்கல், பாரிய தரவு, புதிய செயல்பாட்டாளர்களின் திடீர் வளர்ச்சி மற்றும் நுகர்வோர் நடத்தையில் துரித மாற்றங்கள் ஆகியவற்றால் நவீன சந்தையில் ஏற்பட்டுள்ள சவால்களை திறன்மிக்க வழியில் நிர்வகித்து, பெறுமதி மிக்க முன்மொழிவுகள் மற்றும் தீர்வுகளை கண்டறியும் வழிமுறைகள் மற்றும் கருவிகளை சிந்தித்து, வடிவமைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட DFCC Agile innovation centre of excellence இன் ஒரு பகுதியாகும். அணுகுமுறையானது நேரடி மற்றும் இணைய பயிற்சி மையங்கள் வடிவில் இருந்ததுடன், இதில் பெறுமதி முன்மொழிவுகளைக் கண்டறிதல், அதைச் சோதித்தல், முன்மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் வணிக நடைமுறைகளைத் தயாரித்தல் மற்றும் முதலீடு மற்றும் வணிக ஒருங்கிணைப்புக்கான ஒரு திட்ட சமர்ப்பிப்பு ஆக்கத்தை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
இந்நிகழ்வில் DFCC வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு திமால் பெரேரா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “நவீன வர்த்தகத்தின் சவாலான மற்றும் ஆற்றல்மிக்க சூழலுக்கு மத்தியில், எமது பணியாளர்கள் சிந்தனைத் தலைவர்களாக வெளிப்படுவதற்கும், மாற்றம் மற்றும் உருமாற்றத்தின் தலைவர்களாக மாறுவதற்கும் தேவையான கருவிகளை அவர்களுக்கு வழங்குவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். தற்போதைய சூழலுக்கு மத்தியில் நாம் விரைவாக எம்மை மாற்றியமைத்து விரைவியக்கத்துடன் இருக்க வேண்டும். மேலும், நாம் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, பணியாளர்கள் சார்ந்த வங்கியாக இருப்பதால், இந்த விரைவியக்கம் நமது கலாச்சாரம் மற்றும் பணியாளர்களின் ஒரு பாகமாக மாற வேண்டும். எங்கள் பணியாளர்கள் எப்போதும் ஒரு படி மேலே இருக்கவும், எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கவனித்து, அவர்களின் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கவும், எமது மக்கள் மீது நாம் முதலீடு செய்வதில் இது மற்றொரு வழி. பங்கேற்பாளர்கள் மற்றும் விருதுகளில் அங்கீகாரம் பெற்ற அனைவரையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் பாராட்டுவதுடன், எப்பொழுதும் வழமைக்கு மாறாக புதுமையாக சிந்திக்கவும், புதிய கண்ணோட்டத்தில் விடயங்களைப் பார்க்கவும் எமது பணியாளர்களை நான் ஊக்குவிக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலை பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.