
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
உங்களது முதல் வீட்டில் முதலீடு – தெரிந்துகொள்ள சில ஆலோசனைகள்
October 7, 2019

பலபேருக்கு, அவர்களது முதலாவது வீட்டைக் கொள்வனவு செய்வது என்பது, மிகப்பெரிய மதிப்புமிக்க முதலீடாகும். இது, உங்களுக்கான சிறிய “கோட்டை”ஆகவும் சுதந்திரமாகவும் இருக்க வழிவகுப்பதோடு, அழகிய இடத்தில் உங்களது வீட்டையும் குடும்பத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாடாகும். DFCC வங்கியின் வீட்டுக்கடன் திட்டத்தால், உங்களது கனவை நனவாக்க முடியும். ஆனால், நீங்கள் எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்?
சந்தையை ஆராய்ச்சி செய்யுங்கள்
எந்தவொரு முயற்சியாக இருந்தாலும், முதலாவதாக ஆராய்ச்சியொன்றை செய்வதே, மிகச் சிறந்தது. ஒரு வீட்டை வாங்குவதற்கு, உங்களிடம் தேவையானவை யாவை?. நீங்கள் தொடர்மாடிக் குடியிருப்பை விரும்புகின்றீர்களா அல்லது தனி வீட்டை விரும்புகின்றீர்களா?. அத்துடன், முதலீட்டு சொத்தொன்றை, எதிர்காலத்தில் கொள்வனவு செய்வதற்கான யோசனை உங்களிடம் உண்டா?. அவ்வாறாயின், எந்த இடத்தில் கொள்வனவு செய்வீர்கள்?. வேலைக்கு, பாடசாலைக்கு, இளைப்பாறுவதற்கு என அனைத்து இடங்களுக்கு அருகாமையில் இருப்பது முக்கியமா?
இவ்வாறான கேள்விகளை, உங்களுக்குள்ளேயே கேட்பதன் மூலமும் இணையதளத்தில் ஆராய்ச்சி செய்வதன் மூலமும், ஒரு வீட்டை கொள்வனவு செய்வது தொடர்பான ஒரு அடிப்படை ஆலோசனையை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், இந்த விடயங்கள் நல்ல அனுபவம் கொண்டவர்களுடன் கலந்துரையாடி, சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், சந்தையின் தற்போதைய நிலைவரத்தை உங்களால் உணர முடியும்.
எவ்வளவு கடன் பெற்றுக்கொள்ள முடியும்
உங்களது வீட்டுக்கு முதலிடுவதற்காக, வங்கியில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் கடன், உங்களது வருமானத்திலும் செலவிலுமே தங்கியுள்ளது. நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்புடன் கடன் தொகை அடிப்படையில், மாதாந்தம் எவ்வளவு உங்களால் செலுத்த முடியும் என்பதை, எமது வீட்டுக்கடன் திட்டத்துக்கான கணிப்பான் மூலம் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். உங்களால் எந்தத் தொகைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பில், தெளிவான யோசனையைப் பெற்றுக்கொள்வதன் மூலம், வேறு சொத்துகளை பார்த்து, பாதீட்டைத் தயாரித்து, நேரம் கடத்துவதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
உண்மையான செலவை புரிந்துகொள்ளுங்கள்.
சொத்தொன்றைக் கொள்வனவு செய்யும்போது, வைப்பு மற்றும் தவணைக் கட்டணச் செலவுகளையும் விட, முத்திரைக் கட்டணம், அடமானப் பாதுகாப்புக் கொள்கை, அரசாங்கத்துக்கான கட்டணங்கள் அல்லது மாநகர சபை விதிமுறைகள் என, பல்வேறான செலவுகளுக்கு நீங்கள் முகம்கொடுக்கநேரிடும். இவ்வாறானக் கட்டணங்களை, உங்களது செலவில் உள்ளடக்குவதன் மூலம், தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
அதுமாத்திரமல்லாது, காப்புறுதி, உத்தரவாதம் ஆகியவை உங்களுக்குத் தேவைப்படுகின்றதா என்பது குறித்து தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறான சில தேவைகள் ஏற்படுமாயின், எம்முடன் பேசி தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
பாதீடும் சேமிப்பும்
குடிசையாக இருந்தாலும் சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பாக இருந்தாலும், ஆரம்பத்தில் வைப்பொன்றை அல்லது ஆரம்பக் கட்டணமொன்றை செலுத்துவதற்கு, நீங்கள் பணத்தைச் சேமிக்க வேண்டும். இதற்காக, ஒரு பாதீட்டை தயாரித்து, மாதாந்தம் ஒரு தொகையை நீங்கள் ஒதுக்க வேண்டும். இதற்கென வேறாக ஒரு சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து, உங்களது சம்பளக்கணக்கில் இருந்து வங்கி ஆணையொன்றைப் பிறப்பிப்பது, சிறந்த ஒரு முறையாகும்.
கடன் வாய்ப்புகள்
சந்தையில் பல வீட்டுக்கடன் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் சிறந்தவை அல்ல. உங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தெரிவு செய்யுங்கள். DFCC வங்கிகளில் வழங்கப்படும் வீட்டுக்கடன் திட்டங்கள், உங்களது தேவைக்கு ஏற்றவகையான குறைந்த வட்டிவீதங்களுடன், 20 வருடங்களுக்கு மீள் செலுத்தக்கூடிய தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீங்கள் மாதாந்தம் செலுத்தும் வீட்டுக் கடனுக்கான தவணைக் கட்டணம், உங்களது மாதாந்த வருமானத்தின் 30 சதவீதத்தைத் தாண்டிச் செல்லாதவாறு நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். இதன்மூலம், நிதி குறைபாட்டுக்கான அழுத்தத்துக்கு உள்ளாகாமல், நாளாந்த செலவீனம் உள்ளிட்ட எதிர்பாராத செலவீனங்களை சமாளித்துக்கொண்டு, சுதந்திரமாக முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும். நிலையற்ற மற்றும் நிலையான வட்டிவீதங்கள் குறித்து நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். சந்தையின் நிலைப்பாடு மாறிக்கொண்டிருக்கும்போது, இதன்மூலம் எதிர்மறையாகவோ நேர்மறையாகவோ நீங்கள் பாதிக்கக்கூடும்.
நீங்கள் தயாரானவுடன், உங்களது சரியான வீடு எது என்று நீங்கள் தெரிவு செய்த பின்னர், எம்முடன் உங்களால் நம்பிக்கையாக உரையாட முடியும்.
சரியான சொத்தைத் தெரிவு செய்தல்
உங்களுக்கு கடன் கிடைத்ததும் மற்றைய அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தபின்னர், வீட்டுக்கான உங்களது தேடலை ஆரம்பிக்கலாம். பல இடங்களில் வீடுகளைத் தேடி, சந்தை விலைக்கு எது மதிப்பானது என்பது பற்றி ஆராயுங்கள்.
சரியான இடமொன்றை நீங்கள் கண்டால், அதை எப்படியாவது விற்பனையாகாமல் பாதுகாப்பாக வைத்து, கொள்வனவு செய்யுங்கள். இதில் உங்களுக்கு ஏதாவது ஆலோசனைகள் தேவைப்படுமாயின், உதவுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். 011 2350000 என்ற இலக்கத்துக்கு இன்றே அழைப்பை ஏற்படுத்தி, எமது விற்பனை முகவர்களுடன் தொடர்பில் இருங்கள்.