இணையவழி வங்கிச்சேவை ஊடாக அரசாங்க
நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகளை
மேற்கொள்ளுதல்

எந்தவொரு வேளையிலும் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இப்போது DFCC இணையவழி வங்கிச்சேவை ஊடாக குறிப்பிட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

இணையவழி வங்கிச்சேவை ஊடாக அரசாங்க நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதல்

இணையவழி வங்கிச்சேவை ஊடாக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய கொடுப்பனவு வகைகள்


உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கான கொடுப்பனவுகள்


இணைய வழி வங்கிச்சேவை ஊடாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்தக்கூடிய வரிகளின் வகைகள்


  • CGT – மூலதன ஈட்டுகை வரி
  • CIT – கூட்டாண்மை வருமான வரி
  • பங்கிடக்கூடிய இலாபம்
  • பங்கிலாபம்
  • ESC – பொருளாதார சேவைக் கட்டணம்
  • IIT – தனிநபர் வருமான வரி
  • NBT – நாட்டைக் கட்டியெழுப்பும் வரி
  • PAYE – உழைக்கும் போது செலுத்தும் வரி
  • PIT – தனிப்பட்ட வருமான வரி
  • அனுப்பீடு
  • முத்திரைத் தீர்வை
  • VAT – பெறுமதி சேர் வரி
  • VAT – FS – நிதிச் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி
  • வைப்புகளின் வட்டிகளுக்கான நிறுத்திவைத்தல் வரி
  • குறிப்பிட்ட மற்றும் ஏனைய கொடுக்கல் வாங்கல்களுக்கான நிறுத்திவைத்தல் வரி

இலங்கை சுங்கத்துக்கான கொடுப்பனவுகள்


ஊழியர் சேம நிதியத்திற்கான கொடுப்பனவுகள்


இலங்கை சுங்கம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏதேனும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், கீழே விபரிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமான விடயங்கள் மீது தங்கள் கவனத்தைச் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஏதேனும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் துல்லியமானதும் பூரணமானதுமான தகவல்களை உறுதிப்படுத்துதல் கட்டாயமாகும்:


ஊழியர் சேமலாப நிதியம் – PZNCD (வலயக் குறியீடு), PEMNO (ஊழியர் இலக்கம்), PCNPR (பங்களிப்புக் காலப்பகுதி), PSQNO (சமர்ப்பித்தல் இலக்கம்)


இலங்கை சுங்கம் – Cusdec குறிப்பிலக்கம், அலுவலகக் குறியீடு, ஆண்டு, தொடரிலக்கம், பதிவு இலக்கம், கம்பனிக் குறியீடு


இணையவழி வங்கிச்சேவை ஊடாக அரசாங்க நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் முறை


  • எமது இணையவழி வங்கிச்சேவை விபரத்தொகுப்பிற்குச் செல்லவும்.
  • “கொடுப்பனவு அடையாளத்தை” கிளிக் செய்யவும்.
  • “அரசாங்கக் கொடுப்பனவுப் பிரிவுக்குச்” செல்லவும்.
  • ‘கணக்கிலிருந்து/பற்றுக்கணக்கு’ (“from/debit account”) என்பதைத் தெரிவு செய்து கொடுப்பனவு வகையையும் தெரிவு செய்யவும் (இலங்கை சுங்கம், ஊழியர் சேமலாப நிதியம் அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்)
  • குறுஞ்செய்தி (SMS) அல்லது மின்னஞ்சல் ஊடாகக் கிடைக்கப்பெறும் ஒரு தடவை மட்டும் பயன்படுத்துவதற்கான கடவுச்சொல்லை (OTP) பதிவு செய்யவும்.
  • OTP உறுதிசெய்யப்பட்டவுடன், கொடுப்பனவு வகையின் அடிப்படையில் அரசாங்க முனையம் (Portal) ஒன்றுக்கு நீங்கள் மீண்டும் இட்டுச்செல்லப்படுவீர்கள்.

நீங்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கொடுப்பனவு ஒன்றை மேற்கொள்வதாயின்,


  • உங்கள் OTP உறுதிசெய்யப்பட்டவுடன், வரிக் கொடுப்பனவை மேற்கொள்வதைத் தொடர்வதற்காக குறிப்பு முனையம் (comment portal) ஒன்றுக்கு நீங்கள் மீண்டும் இட்டுச்செல்லப்படுவீர்கள்.
  • உங்கள் வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN) பதிவுசெய்தவுடன் – நீங்கள் வரியின் வகையை தெரிவுசெய்தல் வேண்டும்.
  • மதிப்பீட்டு வகையைத் தெரிவு செய்யவும்.
  • வரி செலுத்த வேண்டிய காலப்பகுதியைஃவருடத்தைத் தெரிவுசெய்யவும்.
  • தொடர்வதற்கு ‘சமர்ப்பிக்கவும்’ (Submit) என்பதை கிளிக் செய்யவும்.

  • தயவு செய்து அவதானிக்கவும் – *சரியான விபரங்களைத் தெரிவு செய்வதை உறுதிப்படுத்தவும்;. உங்களால் மேலும் தொடர முடியாதிருப்பின் நீங்கள் தனித்தொடர்புத் தொலைபேசியில் 1944 என்னும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். நீங்கள் இணையவழி சேவைகளுக்கு பதிவுசெய்திருப்பின், உங்கள் TIN இலக்கம் செலுத்த வேண்டிய வரியின் தன்மையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

  • கொடுப்பனவை மேற்கொண்டவுடன்

    – நீங்கள் மற்றுமொரு பக்கத்துக்கு இட்டுச்செல்லப்படுவீர்கள். நீங்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்கள இணையவழி சேவைகளுடன் பதிவுசெய்திருப்பின், உங்கள் சம்பந்தப்பட்ட வரிக்கொடுப்பனவை உறுதிப்படுத்தும் ஒரு குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். கொடுப்பனவு வெற்றிகரமான மேற்கொள்ளப்பட்டவுடன், தகவல் சேவைகளுக்காக நீங்கள் பதிவுசெய்துள்ள கையடக்கத் தொலைபேசிக்கு வங்கி ஒரு பற்று குறுஞ்செய்தியை அனுப்பும்.மேலதிக விபரங்களுக்கு பெறுவதற்கு நீங்கள் 1944 என்னும் தனித்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

  • கொடுப்பனவை மேற்கொண்டவுடன், இணையவழி வங்கிச்சேவை Tab ற்கு திரும்பிச்சென்று, ‘தொடர்க’ என்பதை கிளிக் செய்யவும். ‘கொடுப்பனவு முன்னெடுப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது’ என்னும் குறுஞ்செய்தி உங்களுக்குக் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் வரலாறு பிரிவில் கொடுப்பனவு நிலைமையை சரிபார்க்கவும்.
  • பற்றுச்சீட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது: “கொடுக்கல் வாங்கல் பிரிவை” கிளிக் செய்த பின்னர், பற்றுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலை கிளிக் செய்யவும். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் LPOPP இடைமுகத்தின் ‘உங்கள் பற்றுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான பக்கத்துக்கு’ நீங்கள் மீண்டும் இட்டுச்செல்லப்படுவீர்கள்.

நீங்கள் ஊழியர் சேம நிதியத்திற்கு கொடுப்பனவு ஒன்றை மேற்கொள்வதாயின்,


  • கொடுப்பனவு வகையாக “ஊழியர் சேம நிதியம்” தெரிவுசெய்து, OTPயை பதிவுசெய்தவுடன், அரசாங்க முனையம் (Government Portal) ஒன்றுக்கு நீங்கள் மீண்டும் இட்டுச்செல்லப்படுவீர்கள்.
  • தேவையான தகவல்களை நிரப்பி ‘சமர்ப்பிக்கவும்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • விபரங்களைச் சரிபார்த்து கொடுப்பனவை தொடர்ந்து மேற்கொள்ளவும்.
  • சம்பந்தப்பட்ட தளப் பக்கத்தில் வெற்றிகரமான கொடுக்கல் வாங்கலுக்குப் பிந்திய சமர்ப்பித்தல்; “கொடுக்கல் வாங்கல் அதிகாரம் அளித்தலுக்காக முடிவு பெறாத நிலையிலுள்ளது, தயவு செய்து வங்கியுடன் தொடர்பு கொள்ளவும்” என தங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
  • கொடுப்பனவை உறுதிப்படுத்துவதற்கும் பற்றுச்சீட்டைத் தயார்செய்வதற்கும் “கொடுக்கல் வாங்கல் வரலாறு” என்பதை கிளிக் செய்யவும். பின்னர், “பற்றுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்க” என்பதை கிளிக் செய்வதன் மூலம் பற்றுச்சீட்டைத் தயார்செய்வதற்காக கொடுக்கல் வாங்கலைத் தெரிவு செய்யவும்.


நீங்கள் இலங்கை சுங்கத்திற்கு கொடுப்பனவு ஒன்றை மேற்கொள்வதாயின்,


  • கொடுப்பனவு வகையாக “இலங்கை சுங்கத்தை” தெரிவுசெய்து, OTPயை பதிவுசெய்தவுடன், அரசாங்க முனையம் (Government Portal) ஒன்றுக்கு நீங்கள் மீண்டும் இட்டுச்செல்லப்படுவீர்கள்.
  • தேவையான தகவல்களையும் (Cusdec குறிப்பிலக்கம், அலுவலகக் குறியீடு, ஆண்டு, தொடரிலக்கம், பதிவு இலக்கம், கம்பனிக் குறியீடு) செலுத்தவேண்டிய தொகையையும் நிரப்பவும்.
  • விபரங்களைச் சரிபார்த்து கொடுப்பனவை தொடர்ந்து மேற்கொள்ளவும்.
  • சம்பந்தப்பட்ட தளப் பக்கத்தில் வெற்றிகரமான கொடுக்கல் வாங்கலுக்குப் பிந்திய சமர்ப்பித்தல் “கொடுக்கல் வாங்கல் அதிகாரம் அளித்தலுக்காக முடிவு பெறாத நிலையிலுள்ளது, தயவு செய்து வங்கியுடன் தொடர்பு கொள்ளவும்” என தங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
  • கொடுப்பனவை உறுதிப்படுத்துவதற்கும் பற்றுச்சீட்டைத் தயார்செய்வதற்கும் “கொடுக்கல் வாங்கல் வரலாறு” என்பதை கிளிக் செய்யவும். பின்னர், “பற்றுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்க” என்பதை கிளிக் செய்வதன் மூலம் பற்றுச்சீட்டைத் தயார்செய்வதற்காக கொடுக்கல் வாங்கலைத் தெரிவு செய்யவும்.


LPOPP தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


  1. இவ்வகையான கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏதேனும் அறவீடுகள் அல்லது கட்டணங்கள் செலுத்த வேண்டுமா?
    ஆம், ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் ரூபா 50/- கட்டணம் செலுத்த வேண்டும்.

  2. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கொடுப்பனவை மேற்கொள்ளும்போது நான் ஏதேனும் பிரச்சினைகளை அல்லது தடங்கல்களை எதிர்நோக்கினால் என்ன செய்ய வேண்டும்?
    உங்கள் வரிகள் அல்லது கொடுப்பனவுகள் தொடர்பாக ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின், நீங்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தனித்தொலைபேசி இலக்கம் 1944 இற்கு அழைக்க முடியும்.

  3. கொடுப்பனவுகளுக்கான பற்றுச்சீட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
    நீங்கள் ‘கொடுக்கல் வாங்கல் வரலாறு” என்னும் பகுதிக்குச் சென்று உங்களுடைய கொடுக்கல் வாங்கலை கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின்னர், ‘பற்றுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்தல்” கிளிக் செய்து உங்கள் பற்றுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

Skip to content
page-default-temp.php