கூட்டு வங்கியியல் மற்றும் கடல் கடந்த வங்கியியல்

கூட்டு வங்கியியல் மற்றும் கடல் கடந்த வங்கியியல்

நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஒதுக்கீடுகளை கட்டமைக்க உங்களுக்கு உதவுகின்றது.

தொழிற்பாடு மூலதனம் / வியாபார நிதிச்சேவை வசதிகள்

தொழிற்பாடு மூலதனம் / வியாபார நிதிச்சேவை வசதிகள்

மேலதிகப் பற்றுகள் 

 • எமது மேலதிகப்பற்று வசதிகள், சிறியதொரு அறிவித்தல் ஒன்றின் உதவியோடு உங்களது பல்வேறுபட்ட மூலதன தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான மூலதனத்தை எப்பொழுதும் நீங்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கின்றன. 
 • மேலதிகப் பற்றுகளை நீங்கள் காசோலைகளின் வழங்கல், வேண்டுகோள் கடிதங்கள் அல்லது டிஜிட்டல் முறைகளான இணைய வங்கிச்சேவை அல்லது DFCC iConnect ஐ பயன்படுத்தி பெற முடியும். இவ்வசதி இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டொலர்களில் கிடைக்கிறது.  

பணச்சந்தை வசதிகள் 

 • எமது பணச்சந்தை வசதிகள், குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்கான (1 வாரம் முதல் 3 மாதங்களுக்கு இடையில்) தொழிற்பாட்டு மூலதன தேவைகளுக்கான நிதியை பெற்றுக்கொள்ள மிகவும் உகந்தவை. இவ் வசதிகளுக்கான வட்டி வீதங்கள்  வழமையான பணச்சந்தை வீதங்கள் மற்றும் தளம்பலின் அடிப்படையில் அமைந்தவை. அதாவது அவை நாளுக்கு நாள் வேறுபடலாம். 

இறக்குமதி /ஏற்றுமதி நிதிச்சேவை 

 • எமது விரிவான இறக்குமதி / ஏற்றுமதி நிதிச்சேவை வசதிகள், உங்களது வணிகம் கடினமான உலகளாவிய சந்தையில் தாக்குப்பிடித்து இயங்குவதற்கு தேவையான ஆற்றலை உறுதி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 
 • நாம் வணிகங்களுக்கு வழங்கும் வசதிகளில், உடனடி மற்றும் பிற்போடல் நிபந்தனைகள் என இரு முறைகள் தொடர்பாகவும் கடன் ஆவணங்களை உருவாக்குதல், ஏற்பு வசதிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கடன்கள், மூன்றாம் தரப்பு உத்தரவாத வசதிகள், இடம் மாற்றல் உத்தரவாதங்கள், ஏற்றுமதி கட்டணப் பட்டியல் கொள்வனவு / விலைக்கழிவு மற்றும் சுங்க கொடுப்பனவுகள் / வரிகள் போன்ற உள்நாட்டு கொள்வனவுகள் என்பன உள்ளடங்கும். 

உத்தரவாத வசதிகள் 

 • எமது உத்தரவாத வசதிகள் உங்களது வணிகத்தின் ஒருங்கிணைப்புக்கான ஒரு சாசனமாக தொழிற்படுகின்றன. நாம் உத்தரவாதங்களை பிணை முறிகள், வெளிப்படுத்துகை பிணைகள் மற்றும் கடன் உத்தரவாதங்கள் என்பவற்றுக்கு உள்நாட்டிலும் (இலங்கை நாணம் மற்றும் வெளிநாட்டு நாணயம்) மற்றும் சர்வதேச ரீதியிலும் வழங்குகின்றோம் (வெளிநாட்டு நாணயம் மாத்திரம்). 

வெளிநாட்டு நாணய முன் ஒப்பந்தங்கள் 

 • எமது வெளிநாட்டு நாணய முன் ஒப்பந்தங்கள் நாணய மாற்று வீதங்களின் நிலையற்ற தன்மை மற்றும் அபாயத்திலிருந்து உங்கள் வணிகத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. வெளிநாட்டு நாணய முன் ஒப்பந்தமானது முன்பதாக முடிவு செய்யப்பட்ட வீதங்களின் கீழ் எதிர்காலத் திகதியொன்றில் வெளிநாட்டு நாணயத்தை நீங்கள் கொள்வனவு செய்யும் வசதியை வழங்குகின்றது. 

நிறுவன கிரடிட் கார்ட்கள் 

 • எமது நிறுவன கிரடிட் கார்ட்கள், உங்கள் வணிகத்தின் நியமிக்கப்பட்ட நபர்களுக்கு தமது பிரயாணம் மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளுக்கான செலவீனக் கொடுப்பனவுகளை எளிதாகப் பெற்றுத் தருவதற்கு உதவுகின்றன. அத்துடன் இவை, கோரிக்கைகள் தொடர்பான செலுத்தல்களை எளிதாக்குவதோடு, கண்காணித்தல் மற்றும் செலவீனங்களை அவதானித்தல் என்பவற்றை நிறுவனங்கள் எளிதாக மேற்கொள்ளும் வசதியையும் பெற்றுத் தருகின்றன. 

தவணை கடன்கள் 

 • நிலையான மற்றும் பேண்தகு வளர்ச்சிக்கு உதவும் தளமொன்றை உங்கள் வணிகத்துக்கு கிடைக்கச் செய்கிறது. 

தொழிற்பாடு மூலதன கடன்கள் 

 • எமது தொழிற்பாடு மூலதன கடன்கள் உங்களது வணிகத்துக்கு அவசியமான மூலதன தேவைகளுக்கு நிரந்தர நிதிச்சேவையை பெற்றுத்தரும் வகையில் அமைந்துள்ளன.  

நிறுவன கடன்கள் 

 • எமது நிறுவன கடன்கள், சிக்கலான நிறுவன நிதித் தேவைகளான ஐந்தொகைகளை மீள் கட்டமைத்தல் மற்றும் கையகப்படுத்தல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. 

செயற்திட்ட கடன்கள் 

 • உங்கள் வணிகங்கள் மூலோபாய மற்றும் புரட்சிகரமான செயற்திட்டங்களை உதாரணமாக, வெற்று நிலத்தில் முதலாவதாக மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள், கொள்ளளவு அதிகரிப்பு, பல்வகைப்படுத்தல் மற்றும் நிலையான சொத்துக்களின் கையகப்படுத்தல் என்பவற்றை மேற்கொள்ள எமது செயற்திட்ட கடன்கள் உதவும். 

வெளிநாட்டு தேவை கடன்கள் 

 • வணிகங்களை பொறுத்தவரை எல்லைகளைக் கடந்து விரிவுபடுத்துதல் ஒரு கனவு. எமது வெளிநாட்டுத் தேவை கடன்கள் அக்கனவை நிஜமாக்கும் விதமாக வெளிநாட்டு செயற்திட்டங்களுக்கு தேவையான நிதியுதவியை பெற்றுத் தருகின்றன. 

சலுகை கடன்கள் 

 • எமது சலுகை கடன்கள், கிடைக்கும் சந்தர்ப்பங்களில், மீள் நிதியுதவி / வட்டி உதவித்தொகை திட்டங்களை வழங்குவதோடு, குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கைகளை நோக்காக கொண்டுள்ளன. அவ்வாறான கடன்களுக்கான வட்டி வீதங்கள் சந்தை வீதங்களை விடவும் கணிசமானளவு குறைவாகும். 

லீசிங் 

 • விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்தல்

நிறுவன லீசிங் தீர்வுகள்

 • எமது நிறுவன லீசிங் தீர்வுகள், நிலையான சொத்து கையகப்படுத்தல்கள் தொடர்பாக துரிதமானதும் செயற்திறன் மிக்கதுமான நிதிச்சேவை தீர்வாகும். அவை மோட்டார் வாகனங்களின் சுவீகரிப்பு தொடர்பாக மிகவும் பொருத்தமானவை என்பதோடு வழமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

சேமிப்புகள் மற்றும் வைப்புகள்

நடைறைக் கணக்குகள் 

 • எமது நடைமுறைக் கணக்குகள் உங்களது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களை செயலாக்குவதற்கு மிகவும் பொருத்தமானவை. காசு மற்றும் காசோலை வைப்புகளைப் பெறுவதற்கும் மற்றும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம். நடைமுறைக் கணக்குகள் பல்வேறு வழிமுறைகளின் ஊடாக அதாவது காசோலைகளின் வழங்கல், வேண்டுகோள் கடிதங்கள் அல்லது இணைய வங்கிச்சேவை /  DFCC iConnect  என்பவற்றால் செயற்படுத்தப்படலாம்.  
 • கணக்குகளை இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டொலரில் பெற முடியும். 

சேமிப்பு கணக்குகள் 

 • எமது சேமிப்புக் கணக்குகள் உங்களது கணக்கின் நாளாந்த மிகுதியின் அடிப்படையில் வட்டியை பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகின்றன. குறுகியதொரு காலம் மாத்திரமே கணக்கில் இருக்கும் நிதிக்கு பயனுள்ள பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள இக் கணக்குகள் மிகவும் சிறப்பானவை.
 • எமது Vardhana Xtreme Saver கணக்கு, இலங்கை ரூபாவிலான மிகுதிகளுக்கு 9% வரையும், அமெரிக்க டொலர்களிலான மிகுதிகளுக்கு 4 % வரையும் வட்டி வீதங்களை வழங்குகின்றது. இதன்போது பண மீளப்பெறல்களின் எண்ணிக்கை கருதப்படுவதில்லை. 
 • எமது சேமிப்புக் கணக்குகள் AUD, JPY மற்றும் EUR  போன்ற நாணயங்களில் கிடைப்பதோடு, காசோலைகளின் வழங்கல், வேண்டுகோள் கடிதங்கள் அல்லது இணைய வங்கிச்சேவை /  DFCC iconnect  போன்ற பலதரப்பட்ட வழிமுறைகளினால் இயக்கப்படலாம்.

நிலையான வைப்புகள் 

 • வணிகங்கள் தமது நிதியை ஒரு குறிப்பிட்ட காலம் கிடப்பில் வைத்திருப்பதற்கும், குறித்த நிதி தொடர்பாக அதியுயர் வட்டி வீதத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் எமது நிலையான வைப்புகள் மிகச் சிறந்த ஒரு வழிமுறையாகும். 
 • நாம் நிலையான வைப்புகளை 1, 2, 3 மற்றும் 6 மாதங்கள் அல்லது 1, 2,3, 4, 5 மற்றும் 10 வருடங்கள் போன்ற காலப்பகுதிகளுக்குப் பெற்றுத் தருகின்றோம். 

அழைப்பு வைப்புகள் 

 • ஒரு வணிகம் தனது நிதியை சிறியதொரு காலப்பகுதிக்கு கிடப்பில் வைப்பதற்கும் அந்த நிதி தொடர்பாக சிறந்ததொரு பலனைப் பெற்றுக்கொள்வதற்கும் எமது அழைப்பு வைப்புகள் மிகவும் பொருத்தமானவை. அழைப்பு வைப்புக்கான வழமையான காலப்பகுதி 7 நாட்கள் ஆகும். 

மீள்கொள்வனவு வைப்புக்கள் 

 • எமது மீள்கொள்வனவு வைப்புகளை கட்டணப் பட்டியல்கள் / பிணைகள் அத்துடன் நிறுவன கடன் பத்திரங்களுக்கு எதிராக பெற்றுக்கொள்ளலாம்.