DFCC Chatz

DFCC Chatz

DFCC Chatz எனப்படும் தொடர்பாடலை புரட்சிமயப்படுத்துகின்ற, இடைத்தொடர்பாடல் மற்றும் பல்லின ஊடக Chatbot இற்கு வரவேற்கின்றோம். தங்குதடையற்ற வாடிக்கையாளர் அனுபவம் DFCC வங்கிக்கு மிக முக்கியமானது. வடிவமைக்கப்பட்ட செயல்முறைகள் ஊடாக அன்புடனும் வினயமுடனும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காகவும், பயன்படுத்துனர்கள் தெரிவு செய்யும் மொழியிலேயே அவர்களின் விசாரணைகளுக்கான பதில்களைப் பெறுவதற்கும் DFCC Chatz வசதியளிக்கின்றது. DFCC வங்கியின் இணையத்தளம், Facebook, Messenger, Viber மற்றும் WhatsApp உள்ளிட்ட பல்வேறு தளங்களில் DFCC Chatz அணுகக்கூடியதாக இருக்கும் அதேவேளை, சிக்கலான விசாரணைகளுக்காக 24 மணித்தியாலமும் பதிலளிக்கும் நேரடி முகவருடன் தொடர்பு கொள்ள முடியும்.

DFCC Chatz இன் பயன்கள்

DFCC Chatz இன் பயன்கள்

இந்தத் தீர்வையைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் எங்கிருந்தும் எவ்வேளையிலும் DFCC வங்கியுடன் மிகவும் சௌகரியமாக இணைந்துகொள்ள முடியும்.

  • 24 மணித்தியாலமும் கிடைக்கக்கூடியதாக இருக்கும்
  • விசாரணைகளுக்கு உடனடியாக பதில் வழங்கப்படும்
  • பல்லின ஊடகங்களில் கிடைக்கும்
  • விரும்பினால் நேரடி முகவருடன் தொடர்பு கொள்ள முடியும்
  • மும்மொழிகளிலும் கிடைக்கும் – வாடிக்கையாளர்கள் தாம் விரும்பும் மொழியில் chatbot உடன் தொடர்பு கொள்ள முடியும்

DFCC Chatz சேவையை பின்வரும் டிஜிட்டல் ஊடகங்களினூடாக அணுக முடியும்

  • DFCC வங்கி இணையத்தளம்
  • Facebook மற்றும் Messenger
  • Viber
  • Whatsapp

DFCC Chatz ஐ எவ்வாறு ஆரம்பிப்பது?

  • வாடிக்கையாளர்கள் எமது இணையத்தளம், Messenger அல்லது Viber ஊடாக “Hi” என ஒரு செய்தியை அனுப்பவும்.
  • DFCC WhatsApp Chatz இலக்கத்தை (077 023 5000) தங்கள் தொலைபேசியில் பதிவு செய்து “Hi” என ஒரு செய்தியை அனுப்பவும்.

DFCC Chatz சேவைகளை வழங்குவது:

  • புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  1. 01. DFCC Chatz என்றால் என்ன?
      • DFCC Chatz என்பது வாடிக்கையாளர்களின் சிக்கலற்ற கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் ஓர் இடைத்தொடர்பாடல் மற்றும் பல்லின ஊடக உhயவடிழவ.
  2. 02. DFCC Chatz சேவையை வழங்கும் ஊடகங்கள் என்ன?
      • DFCC வங்கி இணையத்தளம்
      • Messenger
      • Viber
      • Whatsapp
  3. 03. DFCC Chatz சேவையின் மொழித் தேர்வுகள் என்ன?
      • ஆங்கிலம்
      • சிங்களம்
      • தமிழ்
  4. 04. DFCC Chatz வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்ன?
      • DFCC Chatz வாடிக்கையாளர்களுக்கு DFCC வங்கி பற்றிய அடிப்படைத் தகவல்களையும் DFCC வங்கியில் உள்ள சேவைகள் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது. மேலும், ஏதேனும் சிக்கலான விசாரணைகளுக்கு நேரடியாக எமது முகவருடன் தொடர்பு கொள்ள முடியும்.
  5. 05. DFCC Chatz மூலம் உங்கள் கணக்கு நிலுவைகளை அல்லது கடன் நிலுவைகளை பெற முடியுமா?
      • இல்லை.
  6. 06. DFCC Chatz ஐப் பயன்படுத்தி நான் எவ்வாறான செயல்களை மேற்கொள்ள முடியும்?
      • DFCC வங்கியின் சேவைகள் பற்றிய தகவல்களை உள்ளிட்ட எவ்விதமான தகவல்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.