ஏற்றுமதி சேவைகள்

ஏற்றுமதி சேவைகள்

எங்களுடைய அர்ப்பணிப்புமிக்க போட்டி கரமான அனுபவமிக்க சர்வதேச வர்த்தக குழாம் ஏற்றுமதிக்கான நிலையான அல்லது சிக்கலான பரிவர்த்தனைகளாக இருப்பினும் கால தாமதம் இல்லாமல் சிறந்த திறமையான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

  • கடன் பத்திர அறிவுறுத்தல்

கடன் பத்திரமானது ஏற்றுமதியாளர் சார்பாக உலகினை சூழவுள்ள வழங்கும் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அறிவுறுத்தல்.

  • மாற்றத்தக்க கடன் பத்திரங்களை கையாளுதல் 

முதல் நன்மையாளர் சார்பாக வழங்குனர் அல்லது ஏற்றுமதியாளர் /விற்பனையாளர் சார்பாக இரண்டாவது நன்மையாளர் (கள்) மாற்றத்தக்க கடன் பத்திரங்களை பெற்றுக்கொள்ளல் .

  • கடன் பத்திரங்களை உறுதிப்படுத்தல்

கடன் பத்திரத்திற்கு எங்களது உறுதிப்படுத்தளை வழங்குவதுடன் கடன் இணக்க ஆவணங்களுக்கு எதிராக கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.

  • LC இன் கீழ் உள்ள ஏற்றுமதி ஆவணங்களின் பேரம்பேசல்

வாடிக்கையாளரினால்(ஏற்றுமதியாளர்/விநியோகஸ்தர்) வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை பெறுதல் மற்றும் முரண்பாடுகளை தவிர்க்க LC ஆவணங்களை கூர்ந்து ஆராய்தல் போன்ற ஏற்றுமதி கடன் பத்திரத்திற்கு தேவையான ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான உதவிகளை வாடிக்கையாளர்களுக்கு புரிதல்.

  • சேகரிப்புக்கள் மீது ஏற்றுமதி உண்டியல்களை கையாளுதல்

DP/DA விதிமுறைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி உண்டியல்களை செயற்படுத்தல் ஏற்றுமதியாளர்கள் அவர்களது வாங்குனர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வருவாயை பெற்றுக்கொள்ள உதவுகிறது.

  • கொள்வனவு/ஏற்றுமதி உண்டியல்களின் விலைக்கழிவு

காசுப் பாய்ச்சலை மேம்படுத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் கடன் பத்திரம் மற்றும் உண்டியல்களுக்கு கீழ் உள்ள தவணை உண்டியல்களுக்கு விலைக்கழிவு வழங்கல் 

  • கப்பலில் ஏற்றுவதற்கு முன்னான நிதியிடல்

மூலப்பொருட்களை வாங்குவதற்கும் உற்பத்தி செயன்முறைகளை முன்னெடுப்பதற்கும் ஏற்றுமதியாளர்களின் குறுகிய கால நிதித் தேவைகளை பூர்த்தி செய்தல்.