SMELoC – SME (ADB)

SMELoC - SME (ADB)

SMELOC - கூடுதல் நிதிவசதி III – சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கூறு மற்றும் WE-FI மானியம்

தகமையான துறைகள்

தகமையான துறைகள்

பின்வருவம் தகமைகளுடன், பதிவுசெய்யப்பட்ட சிறிய அல்லது நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்கள்

  • ஆண்டு விற்பனைப்புரள்வு ரூபா. 750 மில்லியன்
  • உற்பத்தித் துறையாக இருந்தால் 300 க்கும் குறைவான பணியாளர்கள் அல்லது சேவைத் துறையாக இருந்தால் 200 க்கும் குறைவான பணியாளர்கள்

(வர்த்தகம், குத்தகை மற்றும் வாடகைத் துறைகளில் உள்ள வணிகங்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்கப்பெறாது.)

மானியத்திற்கான தகமை - பெண் தொழில்முயற்சியாளர் நிதி முயற்சி - (We-Fi)

உரிமையாண்மையில் குறைந்தபட்சமாக 51% பெண்களால் கட்டுப்படுத்தப்படல் வேண்டும்.

அல்லது

பின்வரும் அனைத்து (3) அளவுகோல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

  • நிறுவன உரிமையாண்மையில் குறைந்தபட்சமாக 20% பெண்களால் கட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
  • ஒரு பெண் பிரதம நிறைவேற்று அதிகாரி (அதாவது, மிகவும் சிரேஷ்ட முகாமையாளர்) அல்லது பிரதம செயல்பாட்டு அதிகாரி (அதாவது, இரண்டாவது மிகவும் சிரேஷ்ட முகாமையாளர்) மற்றும்
  • பணிப்பாளர் சபை இருக்கும் பட்சத்தில் அதன் உறுப்பினர்களில் குறைந்தது 30% பெண்கள் ஆக இருத்தல்.

மானியக் கூறுகளைப் பெற்ற கடன்படுநர்களுக்கு முன்கூட்டியே கடனைத் தீர்க்க இடமளிக்கப்பட மாட்டாது.

இலக்கு வைக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறைகள்:

பெண் தலைமைத்துவம்.

  • கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே அமைந்துள்ள (கொழும்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், பிணை இல்லாத தொழிற்படு மூலதனக் கடன்களை முதன்முறையாகக் கடனாகப் பெறுபவர்களாக இருந்தால், அவர்கள் தகுதியுடையவர்கள்). மாவட்டத்தை தீர்மானிக்க வணிக இடத்தின் விபரம் கோரப்படும்.
  • நிலையான அல்லது நிதிச் சொத்துக்கள் அடகு வைக்கப்படாத தொழிற்படு மூலதனத்திற்காக கடனைப் பயன்படுத்துதல் (பிணையற்ற தொழிற்படு மூலதனம்)
  • உரிமம் பெற்ற வணிக வங்கி அல்லது உரிமம் பெற்ற விசேட வங்கியில் கடன் வாங்கிய முன் அனுபவம் இல்லை.

முன்னுரிமையளிக்கப்படும் துறைகள்

விவசாயம், விவசாய உற்பத்திகளை பதப்படுத்தல், உற்பத்தி, மீன்பிடி, சுற்றுலா, கால்நடை வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த வணிகங்கள்.

தகமையான உப-கடன்கள்

நீண்ட கால முதலீட்டு கடன்கள், பிணையற்ற தொழிற்படு மூலதனக் கடன்கள் மற்றும் கூட்டுக் கடன்கள் (முதலீடு + பிணையற்ற தொழிற்படு மூலதனம்).

அதிகபட்ச உப-கடன் தொகை

  • ரூபா. 30 மில்லியன் (மானியத்துடன்)
  • ரூபா. 50 மில்லியன் (மானியம் அல்லாதது)

உப-கடனின் காலம்

24 மாத சலுகைக் காலம் உட்பட அதிகபட்சம் 6 1/2 ஆண்டுகள்.
(முதிர்ச்சி 01.06.2030 வரை வரையறுக்கப்பட்டுள்ளது)

வட்டி வீதம்

கடன் தவணைக்காலம் மற்றும் வாடிக்கையாளர் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது*

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

01. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி கடன் வசதியைப் பெற நான் தகுதியுடையவரா?

  • உங்கள் வணிகமானது ஆண்டுக்கு ரூபா. 750 மில்லியனுக்கும் குறைவான விற்பனைப்புரள்வு கொண்ட பதிவுசெய்யப்பட்ட வணிக நிறுவனமாக இருக்க வேண்டும், மேலும் வணிகம் உற்பத்தித் துறையில் இருந்தால் 300 க்கும் குறைவாகவோ அல்லது சேவைத் துறையில் வணிகமாக இருந்தால் 200 ஊழியர்களுக்கு குறைவாகவோ இருக்க வேண்டும். உங்கள் வணிகத்தில் தாய்-துணை நிறுவன உறவு இருந்தால், இரு நிறுவனங்களின் விற்பனைப்புரள்வு மற்றும் பணியாளர் எண்ணிக்கை ஒன்றாக கணக்கிடப்படும்.
  • முன்மொழிவின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் கடன் வசதியை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
02. வணிக பதிவு இன்னும் முற்றுப்பெற்றிருக்காவிட்டால் என்ன செய்வது?

  • வாடிக்கையாளர் இதுவரை வணிகப் பதிவுச் சான்றிதழை பெற்றிருக்கவில்லை என்றால், பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் ஆதாரம், சம்பந்தப்பட்ட அதிகாரியின் கடிதம், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ரசீதுகள் போன்றவை ஏற்றுக்கொள்ளப்படலாம்.
03. நான் பிணை வழங்க வேண்டுமா?

  • பொருத்தமான பிணையை வங்கி கோரலாம்.
04. தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

பின்வருபவை உட்பட, வங்கி கோரும் ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும்:

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம்
  • வணிகப் பதிவுச் சான்றிதழின் பிரதி / விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டை
  • வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு – படிவம் 01 மற்றும்
  • பணிப்பாளர்கள், நிறுவனத்தின் முகவரி போன்ற விபரங்களுடன் தொடர்புடைய பிற படிவங்கள்.
  • நிதி கூற்றுகள் (பதிவுகள்/கணக்காய்வு செய்யப்பட்ட/சான்றுபடுத்தப்பட்ட/முகாமைத்துவம் போன்றவை)
  • வங்கிக் கணக்குக் கூற்றுக்கள் உட்பட கணக்குகளுக்கான உறுதிப்படுத்தல் ஆவணங்கள்
  • விண்ணப்பத்தினை உறுதிப்படுத்த வழங்குநர் விலைப்பட்டியல்கள்/விலைக்கோரல்கள்/சான்றுபடுத்தப்பட்ட செயல்திட்ட உத்தேச செலவு
  • பொருத்தமாகும் பட்சத்தில், செல்லுபடியாகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதி உரிமங்கள் (EPL)
  • ஒப்புதல் செயல்முறைக்கு வங்கிக்குத் தேவைப்படும் மற்ற ஆவணங்கள்
05. மேலும் தகவல் விபரங்களுக்கு நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

  • கிளையின் தொடர்பு விபரங்களைப் பார்க்கவும் அல்லது 0112350000 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தொடர்பு கொள்ளவும்.