SMELoC – TEA (ADB)

SMELoC - TEA (ADB)

SMELOC - கூடுதல் நிதி வசதி III - தேயிலை முன்னோடிக் கூறு மற்றும் JFPR மானியம்

தகமையான துறைகள்

தகமையான துறைகள்

சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்கள்

  • சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் (TSHDA) பரிந்துரை கடிதத்துடன் 10 ஏக்கருக்கு மேற்படாமல் நிலத்தைக் கொண்டுள்ளவர்கள்
  • இலங்கை தேயிலை சபையின் (SLTB) பரிந்துரை கடிதத்துடன் 10 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரையான நிலத்தைக் கொண்டுள்ளவர்கள்

மானியத்திற்கான தகமை - வறுமைக் குறைப்பிற்கான ஜப்பான் நிதியம் - (JFPR)

  • 10 ஏக்கருக்கு மேற்படாத நிலம் கொண்ட சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்கள்.

மற்றும்

திட்ட நோக்கம் பின்வருவனவற்றுக்கு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்,

  • புதிய நடுகை
  • மீண்டும் நடுகை செய்தல்
  • அதிகபட்ச கடன் தொகை ரூபா. 5 மில்லியன்

மற்றும்

  • நிதி அறிவு பயிற்சியை முடித்த உப-கடன் வாங்குபவர்கள் மற்றும் பதிவேடு வைத்திருக்கும் நடைமுறையை நிரூபித்தவர்கள்.

மானியக் கூறுகளைப் பெற்ற கடன்படுநர்களுக்கு முன்கூட்டியே கடனைத் தீர்க்க இடமளிக்கப்பட மாட்டாது.

தகமையான உப-திட்டங்கள்

பின்வருவற்றைப் போன்ற சிறந்த விவசாய நடைமுறைகள் மூலம் கொழுந்து உற்பத்தியை அதிகரிக்கும் அனைத்து வகையான திட்டங்களுக்கும் உப-கடன்கள்.

  • புதிய நடுகை
  • மீண்டும் நடுகை செய்தல்
  • நிரப்புதல்
  • நாற்று வளர்ப்பு
  • நீர்ப்பாசனம்
  • நீர் மற்றும் மண் முகாமைத்துவம்
  • இயந்திரமயமாக்கல்

முன்னுரிமையளிக்கப்படும் துறைகள்

புதிய நடுகை மற்றும் மீள் நடுகை செய்வதற்கு சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் (TSHDA) பரிந்துரைக் கடிதத்துடன் 10 ஏக்கருக்கு மேற்படாமல் நிலம் வைத்திருப்பவர்கள்.

தகமையான உப-கடன்கள்

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் புதிய நடுகை, மீள் நடுகை, நிரப்புதல், நாற்று வளர்ப்பு, நீர்ப்பாசனம், நீர் மற்றும் மண் முகாமைத்துவம் மற்றும் இயந்திரமயமாக்கல் ஆகியவற்றிற்கான மூலதன முதலீடுகள்.

அதிகபட்ச உப-கடன் தொகை

  • ரூபா. 5 மில்லியன் (JFPR மானியத்துடன்)
  • ரூபா. 30 மில்லியன் (மானியம் அல்லாதது)

உப-கடனின் காலம்

  • அதிகபட்சம் 10 ஆண்டுகள்
  • மீள் நடுகை மற்றும் புதிய நடுகைக்கான சலுகை காலம் – குறைந்தபட்சம் 24 மாதங்கள்
  • மீள் நடுகை மற்றும் புதிய நடுகை தவிர மற்ற மூலதன முதலீடுகளுக்கான சலுகை காலம் – அதிகபட்சம் 12 மாதங்கள்
  • இயந்திரங்கள் என்றால் – ஆயுட்காலம் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு உட்பட்டது

வட்டி வீதம்

கடன் தவணைக்காலம் மற்றும் வாடிக்கையாளர் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது*

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

01. TEA முன்னோடி உபகரண வசதியைப் பெற நான் தகமை உடையவரா?

  • நீங்கள் TSHDA பரிந்துரைக் கடிதத்துடன் 10 ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளராகவும் அல்லது SLTB யின் பரிந்துரைக் கடிதத்துடன் 10 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை நிலத்தை வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.
02. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் JFPR மானியக் கூறுக்கு நீங்கள் தகமை பெறுவது எவ்வாறு?

  • 10 ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்துள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தகமையான மூலதனச் செலவு புதிய நடுகை அல்லது மீள் நடுகை செய்ய வேண்டும். சிறு தேயிலைத் தோட்டம் செய்பவர்களுக்கு நிதி அறிவுப் பயிற்சியை முடித்து பதிவு செய்யும் நடைமுறையை நிரூபித்தவர்களுக்கு கூடுதல் மானியத் தொகை கிடைக்கிறது.
  • முன்மொழிவின் தகமை மற்றும் TSHDA பரிந்துரையின் அடிப்படையில் மானியத்தை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்படும்.
03. நான் பிணை வழங்க வேண்டுமா?

  • பொருத்தமான பிணையை வங்கி கோரலாம்.
04. தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

பின்வருபவை உட்பட, வங்கி கோரும் ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும்:

  • TSHDA அல்லது SLTB இலிருந்து பரிந்துரை கடித
  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம்
  • விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதி/தொழில் பதிவுச் சான்றிதழ் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்;
  • நிதி கூற்றுகள் (பதிவுகள்/கணக்காய்வு செய்யப்பட்ட சான்றுபடுத்தப்பட்ட/முகாமைத்துவம் போன்றவை)
  • வங்கிக் கணக்குக் கூற்றுக்கள் உட்பட கணக்குகளுக்கான உறுதிப்படுத்தல் ஆவணங்கள்
  • பொருத்தமாகும் பட்சத்தில், செல்லுபடியாகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதி உரிமங்கள் (EPL)
  • ஒப்புதல் செயல்முறைக்கு வங்கிக்குத் தேவைப்படும் மற்ற ஆவணங்கள்.
05. மேலும் தகவல் விபரங்களுக்கு நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

  • கிளையின் தொடர்பு விபரங்களைப் பார்க்கவும் அல்லது 0112350000 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தொடர்பு கொள்ளவும்.