
Our Sustainability
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
சுற்றுச் சூழல்
DFCCவங்கி எமது சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு பேராதரவு வழங்குவதுடன் அதற்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகளை தவிர்க்கவும் பெருமுயற்சி எடுத்து வருகிறது. எமது மூல வணிகம் சுற்றுச் சூழல் விடயத்தில் அவ்வளவு தூரம் நேரடித் தொடர்பு கொண்டிராத அதேவேளை ஒரு நிதிச் சேவை வழங்குநர் என்ற வகையில் எமது வாடிக்கையாளர்கள்,ஊழியர்கள்,சேவை வழங்குநர்கள் ஆகியோரை சுற்றுச் சூழல் தொடர்பாக பொறுப்பான செயற்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் இயலக்கூடிய நிலையில் நாம் உள்ளோம்.
நாம் அவ்வப்போது எமது வள நுகர்வை மதிப்பீடு செய்வதோடு எரிசக்தியை சேமிக்கும் புத்தாக்க வழிமுறைகளை ஆராய்ந்து பேண்தகு முறையில் வணிக தீர்வுகளை வழங்கி வருகிறோம். reduce, reuse, recycle – (குறைத்தல்,மீள்பாவனை,சுழற்சி) எனப்படும் R எழுத்தில் ஆரம்பிக்கும் முச்செயல்களையும் வளங்களை உற்பத்தி செய்து முகாமைப் படுத்தும் போது கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு வற்புறுத்தி வருகிறோம்.
மேலும்,வங்கி,முதலீட்டு தீர்மானங்களை எடுக்கும்போதும் உள்ளக செயற்பாடுகளை முகாமைப்படுத்தும் போதும் பொருளாதார அபிவித்தி சுற்றுச் சூழலிலும் சமுதாயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நன்கு புரிந்து கொண்டு சுற்றுச் சூழல் மற்றும் சமூகதரம் பற்றிய கணிப்புக்கு உயர் முக்கியத்துவம் வழங்குகிறது. இந்த வகையாக,சுற்றுச் சூழல்/தற்போதுள்ள சமூக தாற்பரியங்கள்/உத்தேச வேலைத் திட்டங்கள் ஆகியன மதிப்பீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட சுற்றுச் சூழல் தரங்களை பேணுவதற்கான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
வங்கியின் பேண்தகு பிரிவு சூழல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு பொறுப்பாக இருக்கிறது. வங்கியின் கடன் வழங்கல் திட்டம் தொடர்பான பேண்தகு முயற்சிகள்,சூழல் முகாமைத்துவம் மற்றும் சமூக அம்சங்கள் ஆகியன இவற்றில் அடங்குகின்றன.
மேலும்,பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமையிலான முகாமைத்துவ குழு ஒன்றும் வங்கியின் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இக்குழு வங்கியின் மூல பண்புகளுக்கு ஒத்திசைவான பசுமை முயற்சிகளை இனம்காண்பதற்கு பொறுப்பாக இருக்கிறது.
சூழல் ரீதியில் சாதகமான முயற்சிகள்:
மரநடுகை இயக்கங்கள்
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் DFCCவங்கிஊழியர்களின் பிறந்த தினங்களை நினைவுகூரும் வகையில் மரநடுகை இயக்கங்களை ஆரம்பித்தது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினருடன் மர நடுகை இயக்கத்தில் கலந்துகொள்ளுமாறு கோரி அவர்களுக்கு தனிப்பட்ட அழைப்புகள் அனுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, மரம் நாட்டப்பட்ட சரியான இடத்திற்கான தொடர்பை Google Map இல் காண்பிக்கும் இலத்திரனியல்-மர-சமர்ப்பண சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதுவரை இவ்வகையாக இலங்கையின் மீள் காடு வளர்ப்பு திட்டத்துடன் இணைந்து 20000க்கும் அதிகமான மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. செஞ்சந்தனம்,வெண்சந்தனம்,பலா உட்பட பல்வகை மரங்கள் இவற்றில் அடங்கும்.
இந்த முயற்சியின் பேரில் நாட்டப்பட்ட மரங்கள் சமுதாயத்திடம் ஒப்படைக்கும் அதேவேளை நாட்டின் முக்கிய இடங்களில் மீள்மரநடுகைக்கும் உதவுகின்றன. மரங்கள் மண்ணின் தரத்தை மேம்படுத்தவும் மண்ணரிப்பை தடுப்பதற்கும் பயன்படுவதுடன் சூழலுக்கு அதிகம் தேவைப்படும் பிராணவாயுவையும்வெளிவிடுகின்றன
மீள்பாவனைக்கான பைகளை ஊக்குவித்தல்
பொலித்தீன் பைகளின் பாவனையை குறைத்து ‘உங்கள் சொந்த பைகளையே எடுத்து செல்லுங்கள்’என்ற கருத்துருவை ஊழியர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக DFCCவணிக நாமத்திலான மீள்பாவனைக்குரிய ஷொப்பிங் பைகள் சகல DFCCஊழிழயர்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. இந்த முயற்சி ஊடாக 5 மில்லியன் பொலித்தீன் பைகளின் பாவனையை குறைப்பதற்கு DFCCவங்கி திட்டமிட்டுள்ளது.
கடற்கரை சுத்திகரித்தல்
ஒழுங்கு முறையிலான கடற்கரை சுத்திகரிப்பு வேலைகள் பெரும் எண்ணிக்கையிலான DFCC ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பங்களிப்புடன் செய்யப்பட்டு வருகின்றன.
இலத்திரனியல் கழிவகற்றல் இயக்கம்
வங்கி அதன் ஊழியர்களை,குப்பை அகற்றலை இலகுவாக்க உதவும் வகையில் அவர்களது இலத்திரனியல் கழவுகளை கொண்டு வருமாறு கோரி 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலத்திரனியல் கழிவகற்றல் முயற்சியை தொடர்ந்து ஒழுங்கு முறையாக கடைப்பிடித்து வருகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் கழிவுகளை,அங்கீகரிக்கப்பட்ட கழிவு மீள்சுழற்சி கம்பனி ஒன்று சேகரித்து வருகிறது.
பிளாஸ்டிக் மீள்சுழற்சி இயக்கம்
DFCCவங்கிதலைமை அலுவலகத்தில் 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் “பிளாஸ்டிக் மீள்சுழற்சி”தினம் ஒழுங்கு செய்யப்பட்டது. வங்கி வளாகத்தில் காணப்பட்ட பல பிளாஸ்டிக் போத்தல்கள்,கொள்கலன்களை மட்டுமன்றி தங்கள் வீடுகளிலிருந்து கழித்து விடப்பட்ட பொருட்களையும் பல ஊழியர்கள் அன்று கொண்டு வந்திருந்தார்கள். அவ்வாறு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் மீள்சுழற்சி ஆலை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எமது ஊழியர்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்ககளின்பாவனையை இயன்ற அளவில் குறைப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை எமது ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் அவற்றை சூழல் சாதகமான முறையில் எவ்வாறு அகற்றுவது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்குவதுமே இந்த முயற்சியை ஒழுங்கு செய்ததற்கான பிரதான நோக்கமாகும்.