கூட்டாண்மை அட்டைகள்

- DFCC கூட்டு கடன் அட்டைகள் நிறுவனங்களுக்கு சௌகரியமான முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ள எண்ணிலடங்கா தீர்வுகளை வழங்குகின்றது
- இவ் அட்டையானது நிறுவனத்தின் செலவினங்களிலிருந்து ஊழியர்களின் தனிப்பட்ட செலவினங்களை வேறுபடுத்திக்கொள்ள வழிவகுப்பதோடு நிறுவனத்திற்கு முகாமைத்துவ செயற்பாட்டு செலவினங்களை சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
தகைமைக்கான எல்லை:
கூட்டாண்மை வங்கியியல், வணிக வங்கியியல் பிரிவு கொடுப்பனவுகள் மற்றும் பண முகாமைத்துவம் அல்லது குறைந்தபட்ச கம்பனி Risk rating அல்லது அதற்கு மேல் உள்ள கிளைகள் ஆகியவற்றுடன் சிறந்த உறவுமுறைகளை பாராமரிக்கும் DFCCகூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு கூட்டாண்மை கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
DFCC கடன் அட்டைகளின் சிறப்பியல்புகளும் நன்மைகளும்
DFCC iConnect உடன் இணக்கமான ஒருங்கிணைப்பு
DFCC iConnect ஊடாக கூட்டாண்மை கடன் அட்டையுடன் முழுவதுமான வியாபார கொடுப்பனவுகள் மற்றும் பண முகாமைத்துவ தீர்வுகள்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு
சகல DFCC வீசா கூட்டு பிளட்டினம் கடன் அட்டைகள் EMV சிப் உடன் செயற்படுத்தப்பட்டுள்ளன. குறித்த கூட்டு நிறுவன கையடக்கதொலைபேசிக்கோ அல்லது அட்டைதாரருக்கோ SMS Alert அனுப்பப்படும். அட்டைகளை நிறுத்தவோ கோரிக்கையை பொருத்து கடன் எல்லையினை குறைக்கவோ முடியும்.
மேம்படுத்தப்பட்ட காசுப் பாய்ச்சல் முகாமைத்துவம்
குறைந்தபட்சமாக 21 நாட்கள் அதிகபட்சமாக 51 நாட்கள் வட்டியற்ற கடன் காலம். தன்னியக்கமான மாதாந்த கொடுப்பனவு தீர்வுகள் உடனான நேரடி கொடுப்பனவு செயன்முறைகள் காரணமாக விநியோகத்தர் ,விற்பனைதாரருக்கான தாமத்தினை தவிருங்கள்.
சௌகரியம்
நிறுவனத்தின் கீழ் உள்ள சகல அட்டைகளினதும் செலவினங்களை பார்வையிட ஒன்றுதிரட்டப்பட்ட கூற்று . செலவு செய்யப்பட்ட விதம் மற்றும் மாதாந்த செலவினங்களின் போக்கு என்பவற்றை கண்காணிக்க இணைந்த eகூற்று.
பயணக் காப்புறுதி
வெளிநாட்டு பயணங்கள் மீது அமெ.டொ 60 000 வரையிலான இலவச பயணக் காப்புறுதி .
வீசா உலகளாவிய சலுகைகள்
ஹோட்டல்கள் ,விமான பயணங்கள், ரெஸ்டோரன்ட் என்பவற்றிற்கு வீசா உலகளாவிய சலுகைகளை அணுக முடியும்.