முக்கிய அறிவித்தல் – DFCC Bank PLC

முக்கிய அறிவித்தல்

முக்கிய அறிவித்தல்

புதிய கணக்கு இலக்கம் தொடர்பில் DFCC வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!


மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களே,


நீங்கள் ஏற்கனவே அறிந்துள்ளவாறு, நாம் எமது பிரதான வங்கிச்சேவை கட்டமைப்பின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளதுடன், பின்வரும் தகவல் விபரங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.


  • உங்களுக்கு புதிய கணக்கு இலக்கமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், எமது தொழில்நுட்ப கட்டமைப்பில் பழைய மற்றும் புதிய கணக்கு இலக்கங்களை நாம் ஒருங்கிணைப்புச் செய்துள்ளமையால் நீங்கள் தொடர்ந்தும் உங்களுடைய பரிவர்த்தனைகள் அனைத்தையும் உங்களுடைய தற்போதைய கணக்கு இலக்கத்தை உபயோகித்து மேற்கொள்ள முடியும்.
  • உங்களுடைய பழைய கணக்கு இலக்கத்துடனான தற்போதைய காசோலைப் புத்தகங்களை நீங்கள் தொடர்ந்தும் உபயோகிக்க முடியும்.
  • உங்களுடைய பழைய கணக்கு இலக்கத்தைப் பயன்படுத்தி SLIPS/CEFTS ஊடாக எந்த வகையான பரிவர்த்தனைகளையும் நீங்கள் மேற்கொள்ள முடியும்.
  • பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் தொடர்ந்தும் உங்களுடைய டெபிட் அட்டையை உபயோகிக்க முடியும்.
  • உங்களுடைய தற்போதைய நிலையான கட்டளைகளில் எவ்விதமான மாற்றங்களும் நிகழாது.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, டிஜிட்டல் ரீதியாக இயக்கப்படுகின்ற ஒரு வங்கி என்ற வகையில், நீங்கள் விரும்பும் பட்சத்தில் உங்களுடைய புதிய கணக்கு இலக்கத்தை உபயோகித்தும் நீங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, தங்குதடையற்ற வங்கிச்சேவை அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் தெரிவை மேற்கொள்ள முடியும்.


புதிய கணக்கு இலக்கம் தொடர்பான தகவல் விபரங்கள் தனிப்பட்ட தொடர்பாடல் மூலமாக வெகு விரைவில் உங்களுக்கு அறியத்தரப்படும்.


மேலதிக விபரங்களைப் பெற தயவு செய்து அருகாமையிலுள்ள DFCC வங்கிக் கிளையை அல்லது எமது 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.


இதனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அசௌகரியங்களுக்காக நாம் மனம் வருந்துவதுடன், இது தொடர்பில் உங்களுடைய பொறுமைக்கும், புரிந்துணர்வுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.


எங்கள் கிளை மேலாளரின் தொடர்பு விவரங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


உங்கள் பேக் ரம் தொடர்பு விவரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

Skip to content
page-default-temp.php