DFCC வங்கியானது DFCC Galaxy உடன் Metaverse இல் இலங்கையின் 1வது வங்கியாக புதிய சாதனையைப் படைத்துள்ளது
July 25, 2023
இலங்கையின் அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, சமீபத்தில் DFCC Galaxy ஐ அறிமுகப்படுத்தி, Metaverse இல் மெய்நிகர் கிளையைத் திறக்கும் இலங்கையிலுள்ள முதலாவது வங்கியாக மாறி சாதனை படைத்துள்ளது. இந்த புதிய மேம்பாட்டுடன், DFCC வங்கி இலங்கையின் வங்கிச்சேவை மற்றும் நிதிச் சேவைத் துறையில் புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கான புதிய அளவுகோலை ஏற்படுத்தி, ஒரு முன்னோடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. DFCC Galaxy இலங்கையில் வங்கித் துறையில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு புதிய, மிகவும் உற்சாகமூட்டுகின்ற, அணுகக்கூடிய மற்றும் ஈர்க்கக்கூடிய வங்கிச்சேவைக்கான வழியை வழங்குகிறது.
DFCC Galaxy ஆனது திளைக்கச் செய்யும் வங்கிச்சேவை அனுபவத்தை வழங்கி, வாடிக்கையாளர்கள் மெய்நிகர் கிளையின் மூலமாக சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும், பிற பயனர்களுடன் இடைத்தொடர்பாடலை மேற்கொள்ளவும், இடைத்தொடர்பாடல் கொண்ட விளையாட்டுக்களை விளையாடவும் மற்றும் பல நன்மைகளை அனுபவிக்கவும் இடமளிக்கிறது. வாடிக்கையாளர்கள் 24×7 chatbot அரட்டை மற்றும் நேரலை வாடிக்கையாளர் உதவி சேவையை அணுக DFCC Galaxy ஐப் பயன்படுத்தலாம் என்பதால், இது வங்கிச் சேவையை மிகவும் சௌகரியமாக்குகிறது. DFCC Galaxy என்பது ஒரு மெய்நிகர் கிளை அனுபவமாகும், அதை நீங்கள் சௌகரியமாக வீட்டிலிருந்து கொண்டே அனுபவிக்கலாம் மற்றும் மேற்கொள்ளலாம்.
“DFCC Galaxy ஐ அறிமுகம் செய்வதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு வங்கியாக மட்டுமல்லாது, இலங்கையில் Metaverse இல் மெய்நிகர் கிளையைத் திறந்த முதல் வங்கியாகவும் எமக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்காகும்,” என்று DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமல் பெரேரா அவர்கள் கூறினார். “DFCC Galaxy, தொடர்ச்சியான புத்தாக்கங்கள் மீதான எமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய வங்கிச்சேவை அனுபவத்தையும் வழங்குகிறது. டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை DFCC வங்கி முக்கிய கவனம் செலுத்தும் விடயங்களாக உள்ளதுடன், எமது நிலைபேற்றியல் மூலோபாயத்தில் இவை தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசுமை நிதி வழங்கலுக்காக “அனைவரும் நாடும்” வங்கியாக தலைப்படுவதற்கான எங்கள் இலக்கே மேற்குறிப்பிடப்பட்ட மூலோபாயம். மெய்நிகர் வங்கிச்சேவை மற்றும் டிஜிட்டலை நோக்கிய மாற்றமானது மிகவும் நெகிழ்திறன் கொண்ட சமூகங்களை உருவாக்குவதற்கும், எமது காபன் அடிச்சுவட்டைக் குறைப்பதற்கும் உதவுவதற்கு அவசியமானது என்பதுடன், மேலும் இந்த துறை மற்றும் முயற்சியில் நாம் முன்னணியில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
DFCC வங்கி எப்போதுமே வாடிக்கையாளர்களை மையப்படுத்தி இயக்கப்படுவதுடன், DFCC Galaxy ஆனது, அதன் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் சாத்தியமான அளவுக்கு சிறந்த வங்கிச்சேவை அனுபவத்தை வழங்குவதில் வங்கியின் அர்ப்பணிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் DFCC Galaxy ஐப் பயன்படுத்தி கணக்குகளை ஆரம்பித்தல், கடனட்டைக்கான விண்ணப்பங்கள் மற்றும் DFCC வங்கியின் பல்வேறு நிதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை பெற்று, வங்கிச் சேவையை அணுகக்கூடியதாக மாற்றலாம். https://galaxy.dfcc.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் DFCC Galaxy ஐ நீங்களாகவே அறிந்து கொள்ள முடிவதுடன், இலங்கையின் முதல் Metaverse வங்கிச்சேவை அனுபவத்தை ஆராயுங்கள்!
DFCC வங்கி, வாடிக்கையாளர்களை மையப்படுத்துதல், நிலைபேற்றியலுடனான நிதி வழங்கல் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்பால் உந்தப்பட்டு, இலங்கையின் வங்கிச்சேவை மற்றும் நிதிச் சேவைகளுக்குள் டிஜிட்டல் உருமாற்றத்திற்கான முன்னோடிகளில் ஒன்றாக தொடர்ச்சியாகத் திகழ்ந்து வருகிறது. omnichannel AI துணையுடனான உடனடி வாடிக்கையாளர் உதவி சேவை, DFCC Video Chatz மற்றும் டிஜிட்டல் வங்கிச்சேவை செயலிகள் மற்றும் உங்கள் நிதியியல் மற்றும் வாழ்க்கை முறை தேவைகளுக்கு சரியான துணையான DFCC Virtual Wallet, இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சமீபத்திய அதிநவீன டிஜிட்டல் பண முகாமைத்துவம், நிதியியல் கண்காணிப்பு மற்றும் பரிவர்த்தனை வங்கிச் சேவைகளை வழங்கும் DFCC iConnect போன்ற பல புரட்சிகரமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய வங்கிகளில் முதன்மையானது அல்லது முதன்மையானவற்றில் ஒன்றாகவும் வங்கி திகழ்கின்றது. DFCC வங்கியானது இலங்கை முழுவதிலும் உள்ள தனது டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மூலம் நிதியியல் உள்ளடக்கத்தை தீவிரமாக பரிந்துரைப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் பொறுப்பு வகிக்கின்றது. இந்த வியத்தகு பயணத்தில் DFCC Galaxy மற்றொரு முக்கியமான படியாகும்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இலங்கையில் DFCC வங்கியானது, Green Climate Fund (GCF) இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கையின் முதன்முதல் மற்றும் தற்போதுள்ள ஒரே நிறுவனமாகும். இது இலங்கையின் காலநிலைத் தணிப்பு மற்றும் தழுவல் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கான சலுகை நிதி வசதியை வழங்குகிறது. Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021 and 2022’ விருது அடங்கலாக ஏராளமான அங்கீகாரங்களை வங்கி சம்பாதித்துள்ளதுடன், Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.