
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கி ‘Samata English’ (அனைவருக்கும் ஆங்கிலம்) என்ற வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த ஒன்லைன் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இலங்கையில் இளைஞர், யுவதிகளின் விருத்திக்கு வழிகோலுகிறது
October 11, 2021

அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, 4 ஆவது ஆண்டாகவும் தனது வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக ‘Samata English’ செயற்திட்டத்தின் ஒன்லைன் வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி வங்கியின் நிலைபேண்மைக்கான மூலோபாயத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட ஆறு கருப்பொருள் அம்சங்களில் ஒன்றான “கல்வி” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்றுள்ளது. இது நாடு முழுவதும், பெரும் எண்ணிக்கையான இளைஞர், யுவதிகளுக்கு பயனளிக்கும்.
இந்த ஆண்டு நிகழ்ச்சித்திட்டமானது அனுராதபுரம், வவுனியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டுள்ளதுடன், அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் திறன்களை விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், நவீன இலங்கையின் தொழிற்படையினுள் வெற்றிகரமாக காலடியெடுத்து வைப்பதற்கு முக்கியம் என இனங்காணப்பட்டுள்ள ஏனைய பல மென்திறன்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. ‘Samata English’ நிகழ்ச்சித்திட்டம் 2021 ஒக்டோபரில் ஆரம்பித்து 4 மாதங்கள் நீடிக்கும். DFCC வங்கி சார்பாக, Gateway Language Centre இதனை முன்னெடுக்கவுள்ளது. ஒன்லைன் வகுப்புகளுக்கு சிரமங்களின்றி சமூகமளித்து, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பூர்த்தி செய்ய இடமளிக்கும் வகையில், தரவு (data) ஊக்கத்தொகை மற்றும் இலவச hands-free சாதனம் ஆகியனவும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
DFCC வங்கி, குறித்த 3 மாவட்டங்களிலும், 18 முதல் 25 வயதிற்கு இடைப்பட்ட, கபொத உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர், யுவதிகளை DFCC வங்கியின் முகநூல் பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. முதற்கட்ட ஒன்லைன் மதிப்பீட்டின் மூலம் இதற்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பங்கேற்பாளர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் திறனுக்கான சான்றிதழ் மட்ட கற்கைநெறி மற்றும் மென்திறன்களின் விருத்தி என ஏராளமான நன்மைகளை இதன் மூலமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். இறுதி மதிப்பீட்டில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுகின்றவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு DFCC வங்கி கிளைகளில் தொழிற் பயிற்சிக்கான வாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளன.
’Samata English’ நிகழ்ச்சித்திட்டம் இளைஞர், யுவதிகளிடையே மொழியியல் திறனை வளர்ப்பதன் மூலமாக, தொடர்ச்சியாக வளர்ச்சி மாற்றம் கண்டு வருகின்ற பொருளாதார வடிவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையான திறன்களைக் கொண்டவர்களாக, சர்வதேசரீதியாக தொடர்பாடல் திறனைக் கொண்டவர்களாக வலுவூட்டுகின்ற அடிப்படை பெறுபேற்று கருத்தியலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் மென் திறன்களின் விருத்தி, தலைமைத்துவ ஆற்றல், நேர முகாமைத்துவம், படைப்பாக்க விளக்கக்காட்சி மற்றும் எழுத்து மற்றும் ஒரு நேர்காணலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது ஆகியவற்றில் பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்றைய தொழிற்சந்தையில் இந்த திறன்கள் விலைமதிப்பற்றவையாகக் காணப்படுவதுடன், மேலும் இளைஞர், யுவதிகள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதையும் உறுதி செய்யும்.
இந்த முயற்சி குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “4 வது ஆண்டாக ‘Samata English’ நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதில் DFCC வங்கி மகிழ்ச்சியடைகிறது. சமூகத்தின் மீது பொறுப்புணர்வுள்ள ஒரு வங்கியாக, குறிப்பாக இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளைப் பாதுகாக்க உதவுவதில் அவர்களின் எழுச்சிக்கான நெகிழ்திறனை வலுப்படுத்துவதில் தொடர்ந்து பங்களிப்பதே எமது குறிக்கோள். அனைவரையும் உள்ளடக்கிய, எழுச்சிக்கான நெகிழ்திறனை வளர்க்கின்ற மற்றும் நிலைபேண்தகு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த நிகழ்ச்சித்திட்டம் எடுத்துக்காட்டுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் நிலைபேண்தகமை மீது பங்களிப்பு செய்யும் முன்னணி வங்கியாக நாம் திகழ வேண்டும் என்ற DFCC வங்கியின் தொலைநோக்குடன் இது ஒத்திசைகின்றது,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கியின் மதிப்பு உருவாக்கம் எங்கள் சமூகங்களில் எழுச்சிக்கான நெகிழ்திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைபேண்தகு வணிக நடைமுறைகளுடன் வணிகத்தை முன்னெடுத்தல் மற்றும் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் ஆகிய மும்முனைகளிலும் அனைவரையும் உள்ளடக்கிய மதிப்பு உருவாக்கம் என்பன வங்கியின் நீண்ட கால நிலைபேண்தகமை மூலோபாயத்தின் அங்கமாக அமைந்துள்ளன.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.