
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கி 65 கொவிட்-19 பாதுகாப்பு ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக உதவுவதற்காக 65 கிராமப்புற பாடசாலைகளுக்கு கைகளை சுத்தம் செய்யும் மையங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது
April 29, 2021

DFCC வங்கி தனது 65 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள 65 கிராமப்புற பாடசாலைகளில் கைகளை சுத்தம் செய்யும் மையங்களை நன்கொடையாக ஏற்பாடு செய்துள்ளது.
கொவிட் தொற்று ஏற்படுகின்றவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும், பரவுவதை நிறுத்துவதற்கும், துப்புரவு மற்றும் கைச்சுகாதாரம் என்பது ஒருவர் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கும் ஒரு முக்கிய அங்கமாகும். பாடசாலைச் சூழலில், முறையான கைச்சுகாதாரத்தை அமுல்படுத்துவது வைரஸின் பரவலைக் கணிசமான அளவில் குறைக்கும். இந்த கைகளை சுத்தம் செய்யும் மையங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலமாக DFCC வங்கி அடைய முயலும் இலக்கும் அதுவாகும்.
இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான அனுபவத்தை வழங்கும் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, DFCC வங்கியானது கல்வி அமைச்சின் ஆதரவையும் பெற்றுள்ளது. வங்கியின் உதவிக்கரம் தேவைப்படும் மிகவும் கிராமப்புற பாடசாலைகள் மத்தியிலிருந்து 65 பாடசாலைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக DFCC வங்கியின் பிரதிநிதிகளால் கணிசமான அளவு நேரடி ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
DFCC வங்கியின் பேண்தகமை நோக்கமாக ‘மீள் எழுகின்ற திறன் மிக்க இலங்கைக்கு பங்களிப்பு செய்வது’ மற்றும் ‘மீள் எழுகின்ற திறன் கொண்ட சமூகங்களை’ கட்டியெழுப்புவதும் உருவாக்குவதும் ஆகும். மேலும், வங்கியானது கல்வி, முதுமை, தொழில்முனைவோர், சுற்றுச்சூழல், அவசர நிவாரணம் மற்றும் உடற்பயிற்சி ஆகிய ஆறு கிடைமட்ட கருப்பொருளுடனான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதில் அது கவனம் செலுத்துகிறது. எனவே, நாட்டின் கல்வி முறைக்கும், ஒரு அவசர நிவாரணமாகவும் இந்த வகையான சமூக பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுப்பதில் வங்கி எப்போதும் உறுதிபூண்டுள்ளது.
சமூக பொறுப்புள்ள ஒரு நிதியியல் நிறுவனமாக, வங்கியின் 65 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் மிகவும் எளிமையாகக் கொண்டாடப்பட்டதுடன், அதன் முக்கிய நோக்கம் ஒட்டுமொத்த இலங்கை சமூகத்திற்கு பிரதியுபகாரம் செய்வதாகும். இலங்கையின் கிராமப்புற சமூகங்களின் உண்மையான தேவைகளை DFCC வங்கி உண்மையிலேயே இனங்கண்டுள்ளதால், அதன் 65 வது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட பல வர்த்தக சமூக பொறுப்புணர்வுச் செயற்திட்ட முயற்சிகளுடன் இணைந்த இச்செயற்திட்டமானது மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
இந்த முயற்சியால் பயனடைந்த ஏராளமான பாடசாலைகள் நன்றியுணர்வுடன் இதயபூர்வமான வெளிப்பாட்டுக் கடிதங்களுடன், DFCC வங்கிக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளதுடன், இந்த நன்கொடைகள் நிச்சயமாக சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டில் DFCC வங்கியானது நாட்டின் கிராமப்புற சமூகங்களை இன்னும் கூடுதலான அளவில் இனங்கண்டு இத்தகைய உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: கைகளை சுத்தம் செய்யும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில கிராமப்புற பாடசாலைகள்