
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கியானது CNCI சாதனையாளர் விருதுகள் 2020 இன் தலைமை அணுசரனையாளர் மற்றும் உத்தியோகபூர்வ வங்கி பங்காளராக இணைந்து தொழில்துறை சிறப்பை ஆதரிக்கிறது
April 22, 2021

CNCI சாதனையாளர் விருதுகள் 2020 இன் தலைமை அணுசரனையாளராகவும், உத்தியோகபூர்வ வங்கி பங்காளராகவும் இலங்கை தேசிய தொழில்துறை சம்மேளனத்துடன் (Ceylon National Chamber of Industries – CNCI) உடன் கைகோர்ப்பதற்கு ‘அனைவருக்கும் ஏற்ற வங்கியான’ DFCC வங்கி தொடர்ச்சியாக 3 ஆவது ஆண்டாகவும் முன்வந்துள்ளது.
CNCI சாதனையாளர் விருதுகள் தொடர்ச்சியாக 19 ஆவது முறையாக தத்தமது தொழிற்துறைகளில் புத்தாக்கமான தீர்வுகளைப் புகுத்தியுள்ள அதேசமயம் தமது வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளை சிறப்பாகப் பூர்த்தி செய்து, சவால்களை முறியடித்துள்ள அதிசிறந்த செயற்பாட்டாளர்களின் தலைசிறந்த முயற்சிகளுக்கு இனங்காணல் அங்கீகாரமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிகழ்வானது, கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் கொழும்பு கலதாரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.
இந்த அனுசரணை குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கை தேசிய தொழில்துறை சம்மேளனத்துடன் இணைந்து, 19 ஆவது CNCI சாதனையாளர் விருதுகள் 2020 இன் தலைமை அனுசரணையாளர் மற்றும் உத்தியோகபூர்வ வங்கி கூட்டாளராக கைகோர்த்துள்ளதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பல்வேறு தொழில்துறைகளில் இருந்து வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகின்ற இலங்கை வணிகங்களை மறுசீரமைப்பதில் பங்கு வகிப்பதை DFCC தனக்குக் கிடைத்த கௌரவமாக கருதுகின்றது. இந்த மதிப்புமிக்க விருதுகள் நிகழ்ச்சித்திட்டத்துடனான எங்கள் கூட்டாண்மை நாடு முழுவதும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வெகுமதி அளிப்பதற்கும், நுண் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளில் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நாங்கள் காண்பிக்கும் அர்ப்பணிப்புடன் மிகத் தெளிவாக ஒத்திசைகின்றது,” என்று குறிப்பிட்டார்.
சலுகை கடன் திட்டங்கள் மற்றும் வழங்கப்படுகின்ற வழிகாட்டுதல்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளின் விருப்பத்திற்குரிய கடன் வழங்குனராக DFCC வங்கி காணப்படுகின்றமையால், ஆண்டுதோறும் வழங்கி வருகின்ற இந்த தொடர்ச்சியான அனுசரணையானது சந்தையில் வங்கியின் ஸ்தானத்துடன் சிறப்பாக பொருந்தியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளின் காலத்தின் தேவைகளை விசேடமாக நிறைவேற்ற உதவும் வகையில், கால அடிப்படையிலான கடன்கள், தொழிற்படு மூலதன கடன்கள், வணிக கடன்கள், வங்கி பிணை உத்தரவாதங்கள், குத்தகை வசதிகள், வர்த்தக கடன், கடன் பத்திரங்கள் மற்றும் ஆலோசனை, செயலமர்வுகள் மற்றும் வழிகாட்டல் ஆலோசனை சேவைகள் போன்ற பல்வேறுபட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளை திட்டமிட்டு அறிமுகப்படுத்த வங்கியால் முடிந்துள்ளது.
CNCI சாதனையாளர் விருதுகள் நிகழ்வானது தரம், உற்பத்தித்திறன், நிறுவன வணிகத் திட்டம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பணியாளர் நலன்கள் மற்றும் தொழிலாளர் உறவுகள் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களின் சேவை முயற்சிகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புக்காக பல்வேறு வணிகங்களை அங்கீகரித்து கௌரவிக்கப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் இலங்கையில் மூன்று வகையான சேவைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு லக்ஷ்மன் சில்வா அவர்கள் நிகழ்வில் உரையாற்றும் காட்சி
தலைமை அணுசரனையாளர் மற்றும் உத்தியோகபூர்வ வங்கியாகச் செயற்பட்டு தொழில்துறைக்கு DFCC வங்கியின் பங்களிப்புக்கு இனங்காணல் அங்கீகாரமளிக்கும் வகையில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரான திரு அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு லக்ஷ்மன் சில்வா அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி வைக்கும் காட்சி