DFCC வங்கி சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் விருதுகளில் (Best Management Practices Awards) அதன் நிலைபேறாண்மை மூலோபாயத்தை வங்கி முழுவதும் செயல்படுத்தியதற்காக இரட்டை விருதுகளை வென்றுள்ளது
March 28, 2023
DFCC வங்கியானது, வங்கி முழுவதும் அதன் நிலைபேறாண்மை மூலோபாயத்தை செயல்படுத்தியதற்காக வங்கிச்சேவைப் பிரிவில் வெற்றியாளராகவும், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் மேன்மைக்கான விருதும் வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. The Institute of Chartered Professional Managers of Sri Lanka ஏற்பாடு செய்த 2023 ஆம் ஆண்டின் சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் 2023 நிகழ்வில் DFCC வங்கிக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
வங்கியின் முதன்முதல் முறைசார் நிலைபேறாண்மைக் கொள்கை, மூலோபாயம் மற்றும் திட்டம் ஆகியவை 10 வருட காலத்திற்கானதாக 2020 இல் உருவாக்கப்பட்டன. இத்துறைகளில் அதன் வரலாற்று சாதனைகளை அத்திவாரமாகக் கொண்டு இவை கட்டியெழுப்பப்பட்டன. இதன்படி, DFCC வங்கியானது, நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் எழுதிறன் கொண்ட இலங்கையை நோக்கி பங்களிப்பதற்கும், நிலைபேண்தகு பணியிடங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்கான சாதகமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடனும், 2030 ஆம் ஆண்டளவில் நிலைபேறாண்மைக்கு பங்களிப்புச் செய்யும் முன்னணி வங்கியாக மாறுவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கியால் நிதியளிக்கப்படும் திட்டங்கள் தேவையான அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக விதிமுறைகளையும் பின்பற்றி, அவற்றைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் அதே வேளையில், இத்துறை தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபாயங்களைக் குறைப்பதற்காக சமூக மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்பை (Social and Environmental Management System – SEMS) கடந்த சில ஆண்டுகளாக வங்கி செயல்படுத்தியுள்ளது.
DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான, திமால் பெரேரா அவர்கள், சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் மேன்மைக்கான விருதை வென்றமை, நிலைபேண்தகு நடைமுறைகளை செயல்படுத்துவதில் அது கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கான சான்றாகும் என்று குறிப்பிட்டார். வங்கியின் நிலைபேண்தகு முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டமைக்காக வங்கியின் நன்றியையும் அவர் வெளிப்படுத்தினார். பசுமை பேண் நிதி வழங்கலுக்கான வங்கியாக மாறுதல், காபன் நடுநிலைமையை அடைதல், காகிதமில்லா கலாச்சாரத்தை உள்வாங்குதல், சமத்துவ வாய்ப்புடனான வேலைவாய்ப்பை ஊக்குவித்தல், தலைமைப் பொறுப்பில் பெண்களின் பங்கை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு சாதனை இலக்குகளை எட்டுவதற்காக வங்கி தொடர்ந்து உழைத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
DFCC வங்கியின் நிலைபேறாண்மை மூலோபாயமானது ஐநாவின் 13 நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகளுடன் ஒன்றிணைந்துள்ளது. கல்வி, முதியோர், அவசரகால நிவாரணம், தொழில்முயற்சியாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் கீழ் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளை ஊக்குவிக்கும் 6 வேறுபட்ட கருப்பொருள்களை (6Es) வங்கியின் நிலைபேறாண்மை மூலோபாயம் அடையாளம் காட்டுகிறது. நிலைபேறாண்மை மூலோபாயத்தின் மிகச் சிறந்த அமுலாக்கத்திற்காக DFCC வங்கி பெற்றுள்ள அங்கீகாரம், நிலைபேறாண்மைக்கு முன்னுரிமை அளிப்பதற்காக இலங்கையிலுள்ள ஏனைய நிறுவனங்களுக்கும் ஒரு உத்வேகமாக அமைகின்றது.
சொனாலி ஜயசிங்க சிரேஷ்ட துணைத் தலைவர் – மனிதவளத் துறைத் தலைவர் மற்றும் நில்மினி குணரத்ன – துணைத் தலைவர்/ சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறாண்மைக்கான தலைவர் ஆகியோர் விருதுகளை ஏற்றுக்கொள்கின்ற காட்சி.
விருது வழங்கும் நிகழ்வில் DFCC அணி.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.