DFCC வங்கியானது Global Banking and Finance Review இடமிருந்து ‘Most Innovative Corporate Banking App’ விருதை வென்றுள்ளது
October 25, 2021
இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான DFCC வங்கியானது அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற தனது ஸ்தானத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், Global Banking & Finance Review சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்ட Global Banking & Finance Awards 2021 விருதுகள் நிகழ்வில் ‘Most Innovative Corporate Banking App Sri Lanka’ என்ற விருதை அண்மையில் வென்றுள்ளது.
வங்கி அதன் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, DFCC ‘iConnect’ app செயலிக்காக விருதுகளைப் பெற்றுள்ளது. மீள் எழுச்சித்திறன் கொண்ட இலங்கையை கட்டியெழுப்பும் மற்றும் நிலைநாட்டும் செயல்பாட்டில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பொருளாதார மற்றும் சமூக மதிப்பை உருவாக்குவதில் வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட சர்வதேச அங்கீகாரத்தை இந்த விருது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நாட்டிற்கு சேவை செய்ய வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கமான மற்றும் சிறந்த விளைவுகளை ஏற்படுத்த வல்ல தீர்வுகளை உருவாக்கும் வங்கியின் உந்துசக்தியின் வெற்றியையும் இந்த விருது பிரதிபலிக்கிறது.
DFCC ‘iConnect’ app செயலியானது, ‘Most Innovative Corporate Banking App’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இது இலங்கை வணிக நிறுவனங்கள் மத்தியில் தினசரி நிதி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதிக செயல்திறனையும் சௌகரியத்தையும் உறுதி செய்கிறது. இந்த செயலிக்கு அண்மையில் இடம்பெற்ற ‘Asiamoney Awards’ விருதுகள் நிகழ்விலும் ‘Market Leader in Cash Management Sri Lanka (Domestic Banks)’ மற்றும் ‘Best for Services in Cash Management – Sri Lanka’ ஆகிய விருதுகளைப் பெற்று, இலங்கையில் வணிக வங்கிச்சேவை பயன்பாடுகளுக்கான ஒரு தரஒப்பீட்டு நியம அளவுகோலாக தன்னை மாற்றியமைத்திருந்தது.
2011 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, Global Banking and Finance Review Awards விருதுகள் உலகளாவிய நிதிச் சமூகத்தில் நிகழும் புத்தாக்கம், சாதனை, மூலோபாயம், முற்போக்கான மற்றும் உத்வேகம் தரும் மாற்றங்களால் ஏற்பட்ட நேர்மறையான தாக்கத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த விருதுகள் நிதி உலகில் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவத்துடன், பொதுவான அளவில் மகத்துவத்தை நிலைநாட்டியுள்ள அனைத்து அளவிலான நிறுவனங்களையும் அங்கீகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன.
விருதுகள் மற்றும் வங்கிக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் ‘Most Innovative Corporate Banking app’ இனைக் கொண்டிருப்பதற்கான விருதைப் பெற்றுக்கொள்வதை DFCC வங்கி மிகவும் பெருமை கொள்வதுடன், அதிலும் குறிப்பாக சமீபத்தைய Global Banking and Finance Review Awards என்ற சர்வதேச அரங்கில் கிடைக்கப்பெற்ற விருதையிட்டு மிகவும் நெகிழ்ச்சிடைந்துள்ளது. அனைவருக்கும் ஒரு மீள்எழுச்சித்திறன் கொண்ட, நிதி ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் பயணத்தில் தன்னுடன் தொடர்புபட்ட தரப்பினரை டிஜிட்டல் முறையில் தொழிற்படுவதற்கு இடமளிப்பதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கான வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளின் சர்வதேச அங்கீகாரத்தை இந்த அங்கீகாரம் காண்பிக்கிறது. DFCC வங்கி உள்ளூர் வங்கிச்சேவை மற்றும் நிதித் துறையின் உச்சத்தில் சிறந்து விளங்க முயற்சிக்கிறது. புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் கருப்பொருள்களை ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, இலங்கையில் முதன்மையான வணிக வங்கி என்ற தனது பெயருக்கேற்றவாறு ஏராளமான சமூக-பொருளாதார மதிப்பை உருவாக்கும் வாக்குறுதியில் விடாமுயற்சியுடன் உழைத்து வருகின்றது,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.