
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கியின் தனித்துவமான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் அணுகுமுறை 11வது ACEF Asian Leaders விருதுகளில் சிறந்த சமூக ஊடக உள்ளடக்கத்திற்கான தங்க விருதை வெல்ல வழிவகுத்தது
January 5, 2023

DFCC வங்கியின் வாடிக்கையாளர் ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக ஊடக சந்தைப்படுத்தல் பிரச்சாரம் ஒன்று ஏனைய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது மட்டுமல்லாது, மிக சிறந்த அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
DFCC வங்கியானது 11வது ACEF Asian Leaders விருதுகளில், தெற்காசியாவின் நாடுகள் மத்தியில், சிறந்த சமூக ஊடக உள்ளடக்கத்திற்கான (YouTube மற்றும் Facebook) தங்க விருதை வென்றுள்ளது.
வாடிக்கையாளர் சேவை வாரத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான டிஜிட்டல் ஊடக சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திற்காக DFCC வங்கி இந்த விருதைப் பெற்றுக்கொண்டது. YouTube மற்றும் Facebook ஆகியவற்றில் வெளியான குறும்படம் ஒன்றினை மையமாக வைத்து இந்த பிரச்சாரம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்குறும்படமானது உலகளாவிய ரீதியில் பரவிய கோவிட் நோய்த்தொற்று சார்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை, ஆக்கப்பூர்வமாக, தனித்துவமான நாடகக் கூறுகளைப் பயன்படுத்தி எடுத்துச்சொல்லியிருந்தது.
இவ்விருதானது, அபிவிருத்தி வங்கியாக ஆரம்பித்த DFCC வங்கி, தனது வர்த்தக வங்கி சேவைகள், தனது திறன்மிக்க முதலீடுகளின் தொகுப்பு, புத்தாக்கங்கள், மற்றும், மிக முக்கியமாக, வாடிக்கையாளர்களுடன் DFCC கொண்டுள்ள உறவு ஆகியவற்றின் மூலம் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு ஒரு சான்றாக அமைகின்றது.
இந்த சமூக ஊடக சந்தைப்படுத்தல் பிரச்சாரம், மிகவும் நுட்பமான, ஆக்கப்பூர்வமான முறையிலும், மக்களால் தொடர்பு படுத்தக்கூடிய விதத்திலும், வாடிக்கையாளர்களுடன் வங்கி கொண்டுள்ள உறவை உணர்ச்சிகரமான காணொளி மூலமாகக் காட்டியிருந்தமையினால், நிதிச் சேவைகள் துறையில் தனித்துவமான ஒரு பிரச்சாரமாக இது விளங்கியது.
நெருக்கடி காலத்தின்போது DFCC வங்கியின் வாடிக்கையாளர் சேவை எவ்வாறு தனித்து நின்றது என்பதையும், ஆக்கப்பூர்வமான கதைசொல்லல் திறன் மற்றும் கேட்கக்கூடிய/ செவிக்கு புலப்படாத உரையாடல், குறுஞ்செய்திகள் போன்ற புதுமையான கருத்துருவாக்கங்கள் மூலம் DFCC வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு உதவியது என்பதையும் இந்த வீடியோவின் உள்ளடக்கம் மிக சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகிறது.
உண்மையான சம்பவம் ஒன்றினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த காணொளி, DFCC எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக முன்நின்றது என்பதையும், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வாறு DFCC வங்கியினை தொடர்ந்தும் நம்பியிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்டும் உள்ளடக்கக் கதைக்களத்தைக் கொண்டிருந்தது. இந்த வேளையில், DFCC வங்கியானது வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் பின்னூட்டம் சார்ந்த புத்தாக்கம் ஆகியவற்றுக்கு தனது உறுதிப்பாட்டை வழங்கவும், எல்லா வேளைகளிலும் அவதானிப்போடும், தகுந்த நேரத்தில் கொடுப்பதற்கும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை மிஞ்சுவதற்கும் உறுதியளிக்கின்றது.
காணொளியின் உள்ளடக்கத்தின் தற்படைப்பாற்றல் தன்மையும் அதன் கருத்தும் பார்வையாளர்களை ஒருங்கிணைத்ததோடு மட்டுமல்லாது மிகவும் உணர்ச்சிகரமாக அவர்களால் தொடர்புபடுத்தக்கூடியதாக இருந்தது. இது, காணொளியை மீட்டுப்பார்க்கும் தன்மையை அதிகரிப்பதனால், மிகவும் யதார்த்தமாக வங்கியின் வர்த்தகநாம கூறுகளை மூலோபாய அம்சமாக முன்வைப்பதன்மூலம், வர்த்தகநாமம் தொடர்பான தெரிவுநிலையை நிறுவ உதவுகிறது. மேற்குறிப்பிட்ட அனைத்து காரணிகளும் அம்சங்களும் இந்த பிரச்சாரத்தின் KPIகள் மற்றும் அளவீடுகளை மிஞ்சுவதற்கு வெகுவாகப் பங்களித்தன. ஆகையால், இந்த சமூக ஊடகப் பிரச்சாரமானது 11வது ACEF Asian Leaders விருதுகளில் சிறந்த சமூக ஊடக உள்ளடக்கத்திற்கான தங்க விருதினால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த வெற்றியைப்பற்றி DFCC வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் நிலைத்தன்மையின் பிரதித் தலைவர் நில்மினி குணரத்ன கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு டிஜிட்டல் திரைப்படத்தை தயாரித்த முதல் வங்கி நாம் என்பதையிட்டு பெருமை அடைகிறோம். நாம் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் பங்குதாரர்கள் அனைவரிடமிருந்தும் நம்பமுடியாத அளவிற்கு நன்மதிப்பைப் பெற்றுள்ளோம். சந்தைப்படுத்தல் உத்தியின் ஒரு பகுதியாக தனித்துவமான உள்ளடக்கம் ஒன்றினை உருவாக்கத் தொடங்கினோம். இந்த முயற்சி மூலம், வழக்கமான தொலைகாட்சி விளம்பரத்திற்கு அப்பாற்பட்ட ஒரு உணர்ச்சிபூர்வமான காணொளியை எங்களால் உருவாக்கக் கூடியதாக இருந்தது. இந்தக் காணொளியில் உள்ளடக்கத்தின் தற்படைப்பாற்றல் தன்மை மற்றும் அது எடுத்துச்சொல்லும் கருத்து ஆகியவை வங்கியின் வர்ணத்தக்க நாமம் சார்ந்த விழிப்புணர்வை அதிகரிக்க உதவியதோடு, நாம் எமது வாடிக்கையாளர் பற்றி கரிசனை கொள்கிறோம் என்பதையும் எடுத்துக்காட்டியது. எங்கள் வாடிக்கையாளர்களையும் வாடிக்கையாளர் சேவையையும் கொண்டாட இது ஒரு வாய்ப்பாகும். இந்த முயற்சியானது, எமது வாடிக்கையாளரை மையப்படுத்தி செயல்படுத்தப்படும் எங்கள் முக்கிய விழுமியங்களில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுவது எமக்குப் பெருமையளிக்கின்றது . இந்த விருதினை விருது வழங்கும் அமைப்பு, எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் இதை சாத்தியமாக்கிய நபர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்.”
DFCC வங்கியைப் பற்றி
DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச்சேவைகளை வழங்கும், ஒரு முழுமையான சேவைவழங்கும் வணிக வங்கியாகும். DFCC வங்கியின் நிலைத்தன்மை வியூகம் 2020–2030 ஆனது, பசுமை நிதியளிப்பு மற்றும் நிலையான மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வுத்தன்மை மிக்க வணிகங்களை உருவாக்குவது உட்பட, அதிக எதிர்விசைப்பு ஆற்றலுக்கு பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்வதை எதிர்நோக்குகிறது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற Global Brands சஞ்சிகையின் 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் ‘மிகவும் நம்பகமான சில்லறை வங்கியியல் வர்த்தக நாமம்’ மற்றும் ‘சிறந்த வாடிக்கையாளர் சேவை வங்கி வர்த்தக வர்த்தக நாமம்’ ஆகிய விருதுகளை DFCC வங்கி பெற்றுள்ளதுடன், Euromoney வழங்கும் ‘பண முகாமைத்துவத்தில் சந்தை முன்னணி 2021’ என்ற விருதையும் பெற்றுள்ளதுமாய் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாது, Business Today யின் இலங்கையின் சிறந்த 40 கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றாக DFCC வங்கி தரப்படுத்தப்பட்டது. அத்தோடு, DFCC வங்கியானது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையில் உரிமம் பெற்ற சிறப்பு வங்கி என்ற வகையில், ICRA Lanka Limited இனால் [SL] A+ ஆகவும், Fitch Ratings Lanka Limited ஆல் A+ (lka) ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.