DFCC Junior Avurudu பிரச்சாரம் வியப்பூட்டும் வெகுமதிகள் திட்டத்துடன் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது
April 11, 2023
இளம் வயதிலேயே பணத்தைச் சேமிப்பதைத் தொடங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்ற, அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, 2023 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான தனது DFCC Junior Avurudu ஊக்குவிப்புப் பிரச்சாரத்தை மீண்டும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்தப் பிரச்சாரம் இளம் வயதிலேயே பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. அத்துடன், புதிய மற்றும் ஏற்கனவே DFCC Junior கணக்கை வைத்திருப்பவர்கள் புதிய வைப்புத்தொகையை மேற்கொள்வதன் மூலம் விசேட வெகுமதியைப் பெறுவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
இந்த ஆண்டு பிரச்சாரத்திற்காக, DFCC வங்கியானது பல்வேறு தொகைகளின் புதிய வைப்புத்தொகைகளுக்கு, அதாவது ரூபா 10,000, 25,000, 40,000 மற்றும் 50,000 தொகைகளுக்கு DSI இடமிருந்து வியப்பூட்டும் வவுச்சர்களை வழங்குகிறது. ஒவ்வொரு புதிய வைப்புத்தொகைக்கும் முறையே ரூபா 1,000, 2,000, 3,000 மற்றும் 4,000 மதிப்புள்ள DSI வவுச்சர் வெகுமதியாக வழங்கப்படும். இந்த வெகுமதிகள் 2023 ஏப்ரல் 30 அன்று அல்லது அதற்கு முன் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து புதிய வைப்புத்தொகைகளுக்கும் பொருந்தும். அத்துடன், புதிய மற்றும் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும். வாடிக்கையாளர்கள், 139 இடங்களில் உள்ள எந்தவொரு DFCC கிளைகளிலும் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
DFCC வங்கியின் தனிநபர்களை மையப்படுத்திய வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைவரான திரு ஆசிரி இத்தமல்கொட அவர்கள், தனிநபர் மற்றும் சமூக மட்டத்தில் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “சேமிப்பானது நமக்கான சிறந்த வாய்ப்புகளை வெளிக்கொண்டு வருவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகிறது. மிகவும் திறன்மிக்க சேமிப்பாளர்கள், தங்கள் சேமிப்பிற்காக தொடர்ந்து நிதியை ஒதுக்கும் பழக்கத்தைக் கொண்ட சேமிப்பாளர்கள் என்பதுடன், இந்தப் பழக்கத்தை இள வயதிலேயே தொடங்குவது சிறந்தது. இதுவே DFCC வங்கியின் Junior சேமிப்புக் கணக்குகள் வழிகாட்டும் கொள்கையாகும். புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சேமிப்பாளர்களை இந்தப் பழக்கத்தைத் தொடர ஊக்குவிப்பதற்காக புதிய வைப்புத்தொகைகளுக்கு விசேட வெகுமதிகளை வழங்குவதில் வங்கி மகிழ்ச்சியடைகிறது. DFCC வங்கி 15 வயதுக்குட்பட்ட அனைத்து இளம் சேமிப்பாளர்களையும் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் அருகிலுள்ள DFCC வங்கிக் கிளைக்குச் சென்று, சேமிப்புப் பயணத்தைத் தொடங்குமாறு அழைப்பு விடுக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு வகையான சேமிப்புத் தீர்வுகளை வழங்குகிறது: DFCC Junior மற்றும் DFCC Teen கணக்குகள். DFCC Junior ஆனது சிறுவர்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இதை ஊக்குவிக்க தனித்துவமான பரிசுகளையும், வரப்பிரசாதங்களையும் வழங்குகிறது. எந்தவொரு சிறுவரும், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் சேர்ந்து வருகை தந்து, சிறுவர் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
13 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு, DFCC வங்கியானது DFCC Teen கணக்கை வழங்குகிறது, இது இளம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு “கட்டமைக்கப்பட்ட சுதந்திரத்தை” வழங்குகிறது. இது அவர்களின் பெற்றோரால் கண்காணிப்புடன், தமது கணக்குகளை தாமே இயக்க இடமளிக்கிறது.
DFCC வங்கியானது, அதிக வருமானம் தரும் நீண்ட கால நிலையான வைப்புக்கள், DFCC Xtreme Money Market Savings போன்ற அன்றாட சேமிப்புக் கணக்குகள், ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான DFCC Winnerஇ சிரேஷ்ட பிரஜைகளுக்கான DFCC Garu Saru போன்ற சேமிப்புக் கணக்கு அடிப்படையிலான முன்மொழிவுகள் மற்றும் பல்வேறு குறுகிய கால நிலையான வைப்புக்கள் போன்ற பல்வேறு வகைப்பட்ட ஏனைய சேமிப்புக்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களையும் வழங்குகின்றது. இந்த தெரிவுகள் சந்தையில் மிகவும் போட்டித்தன்மை கொண்ட வட்டி வீதங்களை வழங்குகின்றன.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.