DFCC Leasing மற்றும் Ideal Motors ஆகியன வியப்பூட்டும் குத்தகை ஊக்குவிப்புகளை வழங்க கைகோர்த்துள்ளன
June 5, 2023
“இந்த மதிப்புமிக்க மற்றும் பிரத்தியேகமான குத்தகை முன்மொழிவுகளை, ஒப்பற்ற வீதங்களுடன், எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச்செய்ய Ideal Motors உடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று DFCC வங்கி பிஎல்சியின் தனிநபர் வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் துறைகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கூறினார். “வாகனங்களுக்கான கடன் வழங்கல் தீர்வுகளில் DFCC Leasing கொண்டுள்ள நிபுணத்துவம் மற்றும் Ideal Motors இன் உள்நாட்டில் பொருத்தி, இணைக்கப்பட்ட வாகனங்கள் ஆகியன, எமது கூட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனித்துவமான சலுகையை வழங்குகின்றன,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனது அதிசிறந்த சேவைத் திறன் மற்றும் நீண்டகால வரலாற்றிற்கு பெயர் பெற்ற DFCC Leasing, இலங்கை மக்களின் மாற்றம் கண்டுவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அதன் குத்தகை தீர்வுகளை மாற்றியமைத்துள்ளது. DFCC Leasing ஆனது பரந்த அளவிலான கடன் வழங்கல் தெரிவுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவையுடன், தொழில்துறையில் நம்பகமான பங்காளராகவும், முன்னணி நிறுவனமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
இந்த கூட்டாண்மை குறித்து மேலும் கருத்து தெரிவித்த Ideal Motors (Private) Limited நிறுவனத்தின் சட்ட மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான பணிப்பாளரான நிமிஷா வெல்கம அவர்கள், “DFCC Leasing உடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான, தங்குதடையற்ற மற்றும் தொழில்முறை குத்தகை அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உண்மையான மதிப்பு மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை வழங்குவதற்கான எமது கூட்டு அர்ப்பணிப்பு, இந்த கூட்டாண்மையை மிகவும் பொருத்தமாக ஆக்குகிறது,” என்று குறிப்பிட்டார்.
உயர்தர வாகனங்களை உள்நாட்டில் பொருத்தி, இணைப்புச் செய்யும் செழுமையான பாரம்பரியத்தைப் பேணி வருகின்ற Ideal Motors, உண்மையான மதிப்பு மற்றும் சிறந்த செயல்திறனை வழங்க உறுதிபூண்டுள்ளதால், இலங்கையில் அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமமாக மாறியுள்ளது. DFCC Leasing உடனான இந்த கூட்டாண்மையின் மூலம், Ideal Motors ஆல் இலங்கையில் மிகவும் உன்னிப்பாக பொருத்தி, இணைப்புச் செய்யப்பட்ட பிரபலமான Mahindra KUV100 SUV மற்றும் Mahindra Bolero பிக்கப் டிரக் வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, வாடிக்கையாளர்கள் ஒப்பற்ற குத்தகை வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தனிப்பட்ட அல்லது வணிக பயன்பாட்டிற்காக என எதுவாக இருந்தாலும், இந்த வியப்பூட்டும் கூட்டாண்மையானது வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வாகனங்களை எளிதாகவும், சௌகரியமாகவும் மற்றும் குறைந்த வீதத்தில் வாங்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மேலும், DFCC Leasing மற்றும் Ideal Motors ஆகிய இரண்டும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு, நம்பிக்கையை வென்றுள்ளவையாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனம் மற்றும் குத்தகை தெரிவுகளில் மிகச்சிறந்த தரம், நம்பகத்தன்மை மற்றும் சேவையை உறுதிசெய்துகொள்ள முடியும்.
ஆசிரி இத்தமல்கொட – சிரேஷ்ட துணைத் தலைவர் – தனிநபர் வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சி, DFCC வங்கி பிஎல்சி அவர்கள், Ideal Motors இன் சட்ட மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான பணிப்பாளரான நிமிஷா வெல்கமவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் காட்சி.
இடமிருந்து வலமாக – ஹர்ஷ பெரேரா, சிரேஷ்ட முகாமையாளர் – சந்தைப்படுத்தல் – Ideal Motors, மாலகே வெஹல்ல – பிரதிப் பொது முகாமையாளர் – நிறுவன விற்பனை மற்றும் கோரல் ஒப்பந்த வர்த்தகம் – Ideal Motors, நிமிஷா வெல்கம, சட்ட மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான பணிப்பாளர், Ideal Motors, ஆசிரி இத்தமல்கொட – சிரேஷ்ட துணைத் தலைவர் – தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை – DFCC வங்கி பிஎல்சி, சமத்திரி காரியவசம் – துணைத் தலைவர் (பொதுச் சட்டம்) – DFCC வங்கி பிஎல்சி, அசங்க பட்டபடிகே, உதவித் துணைத் தலைவர் – DFCC வங்கி பிஎல்சி, சாமர பீரிஸ் – சிரேஷ்ட முகாமையாளர் – DFCC வங்கி பிஎல்சி.
Ideal Motors தொடர்பான விபரங்கள்
IDEAL Motors (Private) Limited என்பது IDEAL குழுமத்தின் முழு உரிமையாண்மையின் கீழான ஒரு துணை நிறுவனமாகும். இது இலங்கையில் மோட்டார் வாகன உரிம இறக்குமதிகள் மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாகங்களில் பிரதான வணிக ஈடுபாடுகளைக் கொண்டுள்ளது. 2009 நவம்பர் முதல், இந்தியாவின் Mahindra & Mahindra Company Limited நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற மஹிந்ரா மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஏகபோக அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக IDEAL Motors செயற்பட்டு வருகின்றது.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.