DFCC Pinnacle அனுசரணையில் SAARC Ethnic Elegance நிகழ்வு
January 25, 2023
பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் அரவணைப்பு உள்ளடக்கம் ஆகியன தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு வங்கியாக, DFCC Pinnacle ஆனது, சார்க் பெண்கள் அமைப்பின் இலங்கைப் பிரிவு ஏற்பாடு செய்த சார்க் Ethnic Elegance நிகழ்வின் பெருமைமிக்க அனுசரணையாளராக மாறியுள்ளது. சார்க் Ethnic Elegance நிகழ்வானது 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு ஹில்டனில் உள்ள புளு எலிஃபன்ட் நிகழ்வு மண்டபத்தில் முற்பகல் 10 மணி முதல் நடைபெற்றது. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க் – SAARC) 8 உறுப்பு நாடுகளிடையே நட்புறவு, நல்லிணக்கம், கலாச்சார செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வகையில் 25 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகின்ற ஒரு அமைப்பான சார்க் மகளிர் அமைப்பு, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது. சார்க் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் நாடுகளையும், பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அவர்களின் நேர்த்தியான இன ஆடையணிகளை காட்சிப்படுத்தினர், சார்க் பிராந்தியத்தின் பல்வேறு கலாச்சாரங்களின் துடிப்பான பிரதிநிதித்துவத்தை அவர்கள் தோற்றுவித்தனர். SAARC Ethnic Elegance நிகழ்வின் மூலமாக திரட்டப்பட்ட வருமானம், “SAARC Reach Out Project” எனப்படுகின்ற, சார்க்கின் எட்டு உறுப்பு நாடுகளில் உள்ள இக்கட்டான சூழ்நிலையில் வசிக்கும் மக்களின் அவசர தேவைகளுக்கு பங்களிக்கும் ஒரு தொண்டு முயற்சிக்கு பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
DFCC வங்கியானது பெண்களை மையமாகக் கொண்ட தனது வங்கிச்சேவை முன்மொழிவான DFCC Aloka ஐக் காண்பிப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது. இது இலங்கைப் பெண்களுக்கு அவர்கள் வெற்றிபெற உதவும் நிதியியல் கருவிகளை வழங்குகிறது. DFCC Aloka பெண்களை மையப்படுத்திய சலுகைகள் கொண்ட பிரத்தியேக இலச்சினை பொறிக்கப்பட்ட கடனட்டையை வழங்குகிறது. இதை விட, குறைந்த ஆரம்ப வைப்புத்தொகையாக ரூபா. 1,000, முன்னுரிமை கொண்ட வட்டி வீதங்கள், நாடு முழுவதும் உள்ள DFCC அல்லது LankaPay ஏடிஎம்மில் இருந்து கட்டணங்கள் எதுவுமின்றி பணத்தை மீளப் பெறுதல், இலவச டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் MTeller வழியாக சௌகரியமான, பாதுகாப்பான வீட்டு வங்கிச் சேவைகள் அடங்கலாக ஒட்டுமொத்தமாக 360 வங்கிச்சேவை முன்மொழிவுகள் கிடைக்கப்பெறுகின்றன. மேலும், DFCC Aloka கணக்கு வாடிக்கையாளர்கள் முன்னுரிமை வட்டி வீதத்தில் அடகு வைக்கும் வசதிகள், சேமிப்பு கணக்கில் உள்ள மீதித் தொகையை விட 10 மடங்கு வரையான இலவச ஆயுள் காப்புறுதி மற்றும் Doc990 உடன் இணைந்து கணக்கு வாடிக்கையாளர் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்கள் வரை இலவச டிஜிட்டல் மருத்துவ சுகாதார தீர்வுகளை அனுபவிக்கின்றனர். மேலும், மானியங்கள் உட்பட பெண் தொழில்முயற்சியாளரை ஆதரிப்பதற்கான கடன் வசதி ஏற்பாடுகளுக்கும் இந்தச் சேவை உதவி, அனுசரணையளிக்கிறது.
சார்க் Ethnic Elegance நிகழ்வுக்கு DFCC வங்கியின் ஆதரவு குறித்து கருத்து தெரிவித்த Pinnacle இன் தலைமை அதிகாரியும், சில்லறை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் அமுலாக்கத்திற்கான துணைத் தலைவருமான ஷேரா ஹசன் அவர்கள், “DFCC வங்கியில், இனப் பன்மைத்துவம், பன்முக கலாச்சாரம் மற்றும் தொடர்பு வலையமைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, எங்கள் அமைப்பானது சார்க் பெண்கள் அமைப்பின் இலங்கைப் பிரிவுடன் இணைவது என்பது பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கான நமது உறுதிப்பாட்டின் இயல்பான விரிவாக்கமாகும். நாங்கள் நிதிச் சேவைகள் மற்றும் பெண்களிடையே நிதி சார்ந்த அறிவு மற்றும் தொழில்முயற்சியாண்மை மேம்பாடு ஆகியவற்றின் மூலம் பெண்களை வலுவூட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு வங்கியாகும். அந்த வகையில், சார்க் பெண்கள் அமைப்பின் மிகச் சிறப்பான முயற்சிகளை நாங்கள் பாராட்டுவதுடன், அதற்கு உதவுகிறோம். எங்களுடைய சொந்த விழுமியங்களுடன் ஒன்றியுள்ள ஒரு நிகழ்வில் அங்கம் வகிப்பது உண்மையிலேயே எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி, அதன் நிலைபேற்றியல் மூலோபாயத்தால் வழிநடத்தப்படுவதுடன், “எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழுகின்ற திறன் படைத்த இலங்கைக்கு பங்களிப்பாற்றுதல்” என்ற அதன் நிலைபேற்றியல் நோக்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு, இலங்கையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் படைத்த சமூகங்களை தோற்றுவிக்க உறுதிபூண்டுள்ளது, எனவே, வங்கியின் 2030 நிலைபேற்றியல் இலக்குகள் மற்றும் முயற்சிகள் பெண்களுக்கு வலுவூட்டுதல் மற்றும் மாறுபட்ட, சமத்துவமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதில் கணிசமான கவனம் செலுத்துகின்றன.
இடமிருந்து வலமாக:
தினுகி ஆரியதாச – Pinnacle உறவுமுறை முகாமையாளர், ருவானி வீரசிங்க – சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவுக்கான சிரேஷ்ட உறவுமுறை முகாமையாளர், ஷேரா ஹசன் – Pinnacle தலைமை அதிகாரி / சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான துணைத் தலைவர், நிம்மி தம்பையா- தலைவர், சார்க் பெண்கள் அமைப்பு, யமுனா கணேசலிங்கம் – சார்க் பெண்கள் அமைப்பின் இணைப் பொருளாளர், சச்சினி வில்லியம்ஸ்- P Pinnacle மற்றும் Prestige தீர்வு முகாமையாளர் மற்றும் பிரிஷானி டி மெல் – P Pinnacle உறவுமுறை அதிகாரி
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலை பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.