
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
சேமிப்புப் பழக்கத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்வது
October 7, 2019

சேமிப்பு உங்களை சுதந்திரமானவராக மாற்றும்! நீங்கள் பணத்தைச் சேமித்து வைத்திருக்கின்றீர்கள் என்றால், எதிர்காலத்தில் உங்களுக்கான பாதுகாப்பு, செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விடயங்கள் உள்ளிட்ட அனைத்து எதிர்பாராத விதமாக உங்களுக்கு ஏற்படும் செலவீனங்கள் என அனைத்தையும், சிரமமின்றி நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஒவ்வொரு மூலைகளிலும் உங்களுக்கு பல செலவீனங்கள் ஏற்படும்போது, சேமிப்பு என்பது சிரமமான ஒரு நடவடிக்கையாகவே காணப்படும். உங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதற்கும் சிரமமான நேரங்களைச் சமாளித்துக்கொள்வதற்கு என்ற இரண்டு சந்தர்ப்பங்களையும் சமாளிக்கும் வகையில், எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கும் நல்ல சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நாம் சில ஆலோசனைகளை வழங்கி உதவ முன்வருகிறோம்.
உங்கள் செலவீனங்கள் பற்றி அறிந்திருங்கள்
சேமிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர், நீங்கள் எவ்வளவு செலவு செய்கின்றீர்கள் என்பது குறித்து நீங்கள் கணக்கிட்டு வைத்துக்கொள்ளவேண்டும். எம்மில் பலருக்கு இது குறித்து எண்ணம் இருக்காது. ஆனால், சரியான முறையில் சேமிப்புப் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக்கொள்வதற்கு, உங்களது பணம் எந்த வழியில் செல்கின்றது என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்கவேண்டும். இதைச் செய்வதற்கு, ஒரு நாளைக்கு எந்தவொரு சிறிய செலவீனமாக இருந்தாலும் அதை ஒரு புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்ள ஆரம்பியுங்கள். பேனா, பென்சில், புத்தகம் ஆகியவற்றை உங்களால் பயன்படுத்துவதற்கு முடியாது என்றால், இப்போது அதற்கென பல செயலிகளை நீங்கள் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதைச் செய்வதற்கும் உங்களுக்கு சோம்பேறித்தனமாக அல்லது தலைக்குமேல் வேலையுள்ளவராக நீங்கள் இருந்தால், DFCCஇன் வரவட்டை/ கடனட்டையை அல்லது DFCC Wallet மூலம், அனைத்து செலவீனங்களையும் மேற்கொள்ளுங்கள். இதன்மூலம், உங்களது அனைத்துச் செலவீனங்களையும் அலைபேசி மூலமான குறுஞ்செய்தி மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.
உங்களது பணம் எங்கு செல்கின்றது என்பது பற்றி நீங்கள் தெரிந்துகொண்ட பின்னர், உங்களது தேவையற்ற செலவீனங்களை நீங்கள் குறைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக நீங்கள் Netflix மாத்திரம் தான் பார்க்கின்றீர்கள் என்றால், நிச்சயம் உங்களது தொலைக்காட்சிக்கு கேபிள் தொடர்பு தேவைதானா என்பது பற்றி சிந்தியுங்கள். குறிப்பிட்ட சில தேவைக்காக, அதிகளவு பணம் செலவிடுகின்றீர்கள் என்றால், அந்தப் பகுதிக்கே நீங்கள் செலவீனத்தைக் குறைக்கவேண்டும். இவ்வாறு அதிகளவு செலவிடப்படும் பணத்தை, DFCCஇன் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடுங்கள்.
இலக்கொன்றை வைத்துக்கொள்ளுங்கள்
கண்மூடித்தனமாக சேமிப்பது, நீங்கள் விரும்பிய இடத்துக்கு உங்களைக் கொண்டுபோகாத சேமிப்பே இல்லாத பழக்கத்தைவிட சிறந்தது. உங்களுக்கென்று இலக்கொன்று இருக்கவேண்டும். சிறிய தொகையிலிருந்து ஆரம்பியுங்கள். உதாரணமாக, 6 மாதத்தில் 100,000 ரூபாய் அல்லது உங்களுக்கு ஏற்ற ஒரு தொகையை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள். உடனடியான குறிக்கோளாக, உங்களது சம்பளத்தின் மூன்று மாத சம்பளத்தின் பெறுமதியை உங்களது சேமிப்பு கணக்கில் சேர்த்து, அதை, ஒரு வருடத்துக்குள் உயர்த்துவதற்கு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சேமியுங்கள். இதுபற்றி நினைக்கும்போது, மிகவும் கடினமாக விடயம் என்று தோன்றினாலும், நடைமுறையில் செய்யக்கூடியதாகவே இருக்கும். தேவையற்ற அனைத்து செலவீனங்களையும் மறந்து, ஒரு நாளைக்கு 1,000 ரூபாயை உங்களது வங்கிச் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிட முடியும் என்றால், ஒரு வருடத்துக்கு, 365,000 ரூபாயை உங்களால் சேமிக்க முடியும். DFCC கடனட்டைகளில் நீங்கள் செலவுசெய்யும்போது, 1% பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
DFCC கடனட்டைகளை இங்கே ஒப்பிடுங்கள்
அனைத்து செலவீனங்களுக்கும் கேள்வியெழுப்புங்கள்
ஒரு செலவீனத்தை மேற்கொள்ள முன்னர், அது மதிப்புக்குரியதா என்பது பற்றி சிந்தியுங்கள். பெரியதொரு செலவீனமாக இருந்தால், ஒரு குறித்த பெறுமதியை ஒதுக்குங்கள் (உதாரணமாக 10,000 ரூபாய்). அதையும் மீறிய செலவீனமாக இருந்தால், அதை முடிவு செய்வதற்கு, 24 மணிநேரம் காத்திருங்கள். அது தேவையற்றது என்று நீங்கள் முடிவு செய்தால், செலவீனத்தை நிறுத்திவிடுங்கள். செலவீனத்தைக் குறைப்பதற்கு மற்றுமொரு சிறந்த வழி என்னவெனில், அதிகளவில் உணவுக்காக செலவளிப்பதயோ வெளியே மதுபானம் அருந்துவதையோ குறைத்துக்கொள்ளுங்கள். இதற்கு பதிலாக, உங்களது நண்பர்களை வெளிப்பகுதியில் சந்திப்பதை விட, அவர்களை வீட்டுக்கு அழையுங்கள். ஏற்றுக்கொள்ளக்கூடிய கடனை மாத்திரம் நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களது மாதாந்தக் கடன் தொகையானது, உங்கள் மாதாந்த வருமானத்தின் 60% மீறிச் செல்லக்கூடாது. கடனை, எந்த அளவுக்கு குறைவாக வைத்திருக்க முடியுமோ, அந்த அளவுக்கு குறைவாகவே வைத்துக்கொள்ள முயலுங்கள். DFCC கடனட்டை மூலம் நீங்கள் செலவீனங்களை செய்த பின்னர், நீங்கள் எந்தெந்த வகையில் செலவு செய்துள்ளீர்கள் என்பதை, அட்டவணை, வரைபடம் மூலம் அறிக்கையிடப்படும். எனவே, DFCC கடனட்டைக்கு விண்ணப்பிக்கும்போதே, இந்தச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொள்ளுங்கள்.
முதலில் சேமிக்கவும் பின்னர் செலவிடவும்
பலபேர், முதலில் செலவீனங்களைச் செய்த பின்னரே, மிகுதியாக உள்ளதை சேமிப்பது பற்றி சிந்திப்பர். இதனாலேயே, சேமிப்பு என்ற விளையாட்டில், பலரும் தோல்வியடைந்துவிடுகின்றனர். சேமிப்பின் மிகப்பெரிய இரகசியம் என்பது, செலவழிப்பதற்கு முன்பே சேமிப்பதாகவும். வங்கியின் நிலையான ஆணைகளின் மூலம் சேமிப்பை முன்னெடுப்பது மிகச் சிறந்தத் தெரிவாகும். DFCCஇல் உங்களது தேவைக்கேற்ப, வங்கி ஆணை சலுகைகளைச் செய்துகொடுக்க முடியும் என்பதில், நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதாவது, உங்களது வருமானத்தில் இருந்து முதலாவதாக உங்களது சேமிப்புத் தொகை கழிக்கப்பட்ட பின்னர் மிகுதியாக இருக்கும் தொகையில் நீங்கள் செலவீனங்களை முன்னெடுக்க முடியும்.
அத்துடன், உங்களது சேமிப்பிலேயே மூழ்கிவிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். ஒரு சுற்றுலாவுக்கு செல்லவோ அல்லது ஏதாவது ஒரு பொருளை புதிதாகக் கொள்வனவு செய்யவேண்டும் என்பதற்காக நீங்கள் சேமித்தால், அதில் எப்போதும் ஒரு வரம்பு இருக்கவேண்டும். அந்தத் தேவை தீர்ந்த பின்னரும்கூட, குறுகிய கால குறிக்கோள்களுக்காக சேமித்ததை கைவிட்டுவிடாமல், தொடர்ந்து சேமிப்பதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
சேமிப்பு என்பது, உங்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குவதோடு, நிதி சுதந்திரத்தையும் வழங்குகின்றது. எவ்வாறாயினும், கசப்பான அனுபவங்கள் இல்லாமல், வாழ்க்கையில் சுவையான அனுபவங்கள் கிடைப்பதில்லை. சேமிப்பு பழக்கம் என்று வரும்போது, குறுகிய கால இன்பத்துக்காக நீண்டகால சந்தோஷத்தை, சுதந்திரத்தை பாதுகாப்பை விட்டுக்கொடுக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வியாகும்.
DFCC வங்கியின் பல்வேறான சேமிப்புத்திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இது, சேமித்த பின்னர் செலவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு உதவுகிறது.