DFCC வங்கி கடன் மற்றும் டெபிட் அட்டைகளுக்கு பிரத்தியேகமாக WOWrudu சலுகைகள் மூலம் பாரிய அளவில் சேமிக்கும் வாய்ப்பு!
April 6, 2023
DFCC வங்கி புத்தாண்டு பருவகாலத்திற்கான அதன் தனித்துவமான மற்றும் வேறு எவரும் வழங்காத ஒரு வகையான “WOWrudu” ஊக்குவிப்பு பிரச்சாரத்தை உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இந்த ஊக்குவிப்பு பிரச்சாரத்தின் மூலம், DFCC வங்கி மாஸ்டர்கார்டு மற்றும் விசா அட்டைதாரர்கள் 400 க்கும் மேற்பட்ட கூட்டாளர் வணிக விற்பனை நிலையங்களில் 50% வரை குறிப்பிடத்தக்க அளவில் சேமிப்பை அனுபவிக்க முடியும். மேலும், உங்கள் விலையுயர்ந்த பொருட்களுக்கான கொள்வனவுகளை மிகவும் கட்டுபடியாகும் வகையில் மேற்கொள்ள, புத்தாண்டுப் பருவகாலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர் வணிக விற்பனை நிலையங்களில் வட்டியின்றிய இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளது. நவநாகரிகம் முதல் வீட்டுப் பொருட்கள் மற்றும் அதற்கு அப்பால், பல்வேறு வகைகளில் தள்ளுபடிகள் கிடைக்கப்பெறுகின்றன. எனவே, அனைவரும் தாங்கள் வாங்க விரும்பும் எதையும் இதன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.
“எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த அற்புதமான WOWrudu ஊக்குவிப்புக்களை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று DFCC வங்கியின் துணைத் தலைவரும்/அட்டை மையத்தின் தலைமை அதிகாரியுமான டென்வர் லூயிஸ் அவர்கள் கூறினார். “இது பலருக்கு சவாலான காலகட்டம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும், அவர்கள் தளைத்தோங்கவும், புத்தாண்டு பருவகாலத்தின் விருந்துகள் மற்றும் குதூகலங்களை அனுபவிக்கவும் தேவையான ஆதரவையும் நெகிழ்வுத்தன்மையையும் அவர்களுக்கு வழங்க விரும்புகிறோம். வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வங்கியாக, எமது பரந்த வணிகக் கூட்டாண்மைகள் மூலம், எமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், இலங்கையில் தனித்துவமான வகையில், அட்டைதாரர்களின் கருத்துகளின் அடிப்படையில் சலுகைகள் மற்றும் சேமிப்புகளை வழங்கி, DFCC வங்கி கடனட்டைகளை நாட்டில் உள்ளவற்றில் சிறந்ததாக மாற்றுவதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று அவர் மேலும் குறிப்பிடடார்.
ஆனால் அது மாத்திரம் இல்லை! DFCC வங்கி அட்டைதாரர்கள் 1மூ முதல் 3மூ வரையிலான CashBack உத்தரவாதத்தையும் அனுபவிக்கிறார்கள். இந்த CashBack சலுகையை எந்தவொரு DFCC வங்கி சேமிப்புக் கணக்கிலும் வரவு வைக்கலாம். இதன் மூலம் சேமிப்பு மீதித் தொகையில் செலுத்தப்படும் வட்டியுடன் உறுதியான இரட்டைச் சேமிப்பை உருவாக்கலாம். மேலும், அனைத்து DFCC அட்டைகளும், கிடைக்கக்கூடிய கடன் எல்லை வரம்பில் 75% வரை ஒரு அட்டையில் கடனைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கின்றன. 60 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தப்படும் இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள், சந்தையில் மிகக் குறைந்த செயலாக்கக் கட்டணத்துடன் அவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. DFCC வங்கி கடனட்டைகள் ஒரு நெகிழ்வான நிலுவைத் தொகை பரிமாற்ற தெரிவையும் வழங்குகின்றன. இது மற்ற நிதி வழங்குநர்களிடமிருந்து உங்கள் நிலுவைத் தொகைகளை சிறந்த கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளுடன் DFCC வங்கிக்கு மாற்றிக்கொள்ள இடமளிக்கிறது.
இனியும் ஏன் தாமதம்? இன்றே DFCC வங்கி கடனட்டையை பெற்றுக்கொள்ளுங்கள். வியத்தகு பருவகால சலுகைகளை அனுபவிக்கவும் மற்றும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1% முதல் 3% வரை CashBack பெறுவதன் மூலம் செலவு செய்யும் போது சேமிப்பு பழக்கத்தை வளர்க்கவும் செய்யுங்கள்.