
MSME அடிக்கடி
கேட்கப்படும் வினாக்கள்
MSME FAQs
DFCC சஹய கடன் திட்டம் என்பது கிராமிய மற்றும் நகரப் பொருளாதாரங்களில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கு குறிப்பாக, நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டு அர்ப்பணிக்கப்பட்ட கடன் திட்டமாகும்.
புதிய வணிகம் ஒன்றை ஆரம்பித்தல், வணிகத் தொழிற்பாடுகளை விரிவாக்கல், கருவிகளையும் இயந்திரங்களையும் கொள்வனவு செய்தல் மற்றும் ஏனைய செயற்படு மூலதன தேவைப்பாடுகள்.
சுமார் ரூ.300,000 தொடக்கம் ரூ.4,000,000. எனினும், குறைந்த கடன் தொகைகளுக்கான விண்ணப்பங்களும் தனித்தனியே பரிசீலிக்கப்படலாம்.
இல்லை. எனினும், தனது வணிகம் இருப்பதற்கும் அதன் தொழிற்பாடு பற்றிய நிரூபிக்கப்பட்ட பதிவுகளுக்குமான சான்றை சமர்ப்பிக்குமாறு கடன் பெறுபவர் கோரப்படுகின்றார்.
இல்லை. எனினும், DFCC வங்கியில் இரண்டு சேமிப்புக் கணக்குகளைப் பேணுமாறு கடன் பெறுபவர் கோரப்படுகின்றார்: ஒரு அறவீட்டுக் கணக்கு மற்றும் ஒரு கட்டாய சேமிப்புக் கணக்கு.
நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, கடன் பெறும் எல்லோரும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை தமது உரிய கட்டாய சேமிப்புக் கணக்கில் மாதாந்த அடிப்படையில் சேமித்தல் வேண்டும். கடன் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை இந்தக் கணக்கிலிருந்து திரண்ட சேமிப்பை கடன் பெறுபவர்கள் திரும்பப் பெறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கடன் தொகைக்கு நேரடியாக விகிதாசாரமாக வங்கி வைத்திருக்கும் ஆகக் குறைந்த காசு. கட்டாயமாக வைத்திருக்கும் காசு ஆகக் குறைந்தது ஒரு தவணைக் கட்டணத்துக்கு சமமானதாக இருத்தல் வேண்டும். கடன் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை இந்த கட்டாயமாக வைத்திருக்கும் தொகையை கடன் பெறுபவர்கள் திரும்பப் பெறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கிராமிய கமத்தொழில் சமுதாயத்தை அடைவதற்காக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் செயன்முறைப்படுத்துனர்/எதிர்கால கொள்வனவாளர்கள் போன்ற பல்வேறு பங்கீடுபாடு உடையவர்களின் பங்குடைமையுடன் பெறுமதிச் சங்கிலி நிதியிடல் அணுகு முறையை வங்கி பயன்படுத்துகின்றது.
தேயிலைப் பயிர்ச்செய்கை, கொடித் தோடைப் பயிர்ச்செய்கை, மலர்ச் செய்கை மற்றும் பாற் பண்ணை.
ஆம். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் இருந்து வளர்ந்துவரும் தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு விசேடமாக DFCC வங்கியின் நிரந்தர வருமானம் ஈட்டுவோர் கடன் திட்டம் (FIEL) வடிவமைக்கப்பட்டது.
அது கடன் காலப்பகுதி மற்றும் சமர்ப்பிக்கப்படும் பிணையம் ஆகியவற்றைப் பொறுத்து 16.5% முதல் 18.5% வரை வேறுபடும். (இந்த வட்டி வீதம் மாற்றமடையலாம்).
பொதுவாக 25-50 வயது. எனினும், வணிகத்தின்/கருத்திட்டத்தின் நிலைக்கும் தன்மையின் அடிப்படையில் தனித்தனியாகப் பரிசீலிக்கப்படும்.
ரூ.500,000/- க்கு குறைந்த கடன்களுக்கு தனியாள் பிணைகள் வழங்கப்பட முடியும் என்னும் அதேவேளை, உயர்ந்த கடன் தொகைக்கு வங்கியினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கற்புலனாகும் பிணையம் தேவை.
இல்லை. எனினும், ஒரு பிணையாளி மீளச் செலுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதுடன் கடன்படுபவரைப் போன்றே சமூக அந்தஸ்து உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
அதிகூடிய காலப்பகுதி 5 வருடங்களாகும் என்பதுடன் கடன் தொகை மற்றும் அதற்கான நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்து அதிகுறைந்த காலப்பகுதி வேறுபடும். மேலும், கடன் தவணைக் கட்டணம் கடனின் அளவு, வட்டி வீதம் மற்றும் காலப்பகுதி ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். வாடிக்கையாளர்கள் மேலும் தகவல்களைப் பெறுவதற்கு அவர்களுக்கு அண்மையில் உள்ள கிளையுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஆம், ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், கடனின் முதிர்ச்சியைப் பொறுத்து வேறுபடும் ஒரு கட்டணத்தை கடன் பெறுவோர் செலுத்துதல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடனின் எதிர்கால வட்டியைச் சேமிப்பதைத் தவிர குறித்த பயன் எதுவும் இல்லை.
மிகப் பிந்திய தீர்வைகள் பற்றி அறிய எமது இணையத்தளத்தை (www.dfcc.lk) பார்வையிடவும்.
கடன் பெறுபவர் மற்றும் வணிகம் பற்றிய விபரங்கள்
- கடன் விண்ணப்பம்
- வணிகத் திட்டம்
- கடன் பெறுபவரின் தேசிய அடையாள அட்டையின் ஒரு பிரதி
- வணிக பதிவுச் சான்றிதழின் ஒரு பிரதி (இருந்தால்)
- சொத்தின்/வணிகத்தின் உரிமையை உறுதிப்படுத்தல்
- வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
- வருமானத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
- வணிகத்தை மேற்கொள்வதற்கான சம்பந்தப்பட்ட அங்கீகார ஆவணங்கள்
- ஏதேனும் வேறு ஆவணங்கள் (சேவை கடிதங்கள்/பயிற்சிச் சான்றிதழ்கள்/கல்விச் சான்றிதழ்கள் போன்றவை)
- வணிகத் திட்டம்
ஆதனங்களை அடகு வைத்து பெறப்படும் கடன்களுக்கு
- கடைசி உறுதி
- உள்ளுராட்சி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அளவையாளர் வரைபடம்
- மூன்று மாத காலப்பகுதிக்குள் ஆகப் பிந்திய பிரித்தெடுப்புகள்
- உள்ளுராட்சி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அளவையாளர் வரைபடம்
தனியாள் பிணைகளால் பெறப்படும் கடன்கள்
- பிணையாளிகளின் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள்
- பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல்
- பிணையாளிகளின் வருமானத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
- பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல்
அடிப்படைத் தகைமைப் பிரமாணங்கள் தவிர, ஒரு கூட்டுகடன் பெறுபவர் முதல் நிலை கடன் பெறுபவருடன் முறைசார் தொடர்பை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும்.
கடன் பெறும் எல்லோரும் DTA காப்புறுதிக்கு (கட்டணமின்றி வழங்கப்படும்) உட்படுகின்றனர். கடன் பெறுபவர்களின் மரணம் அல்லது நிரந்தர அங்கவீனம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஏதேனும் கடன் அர்ப்பணிப்புகளிலிருந்து எல்லா தங்கிவாழ்வோர்களையும் விடுவிப்பதை இது உறுதிப்படுத்துகின்றது. மேலும், அவர்கள் அடிப்படைத் தகைமைப் பிரமாணங்களைப் பூர்த்திசெய்தால், கடன்பெறுவோர் DFCC வங்கியினால் வழங்கப்படும் எல்லா உற்பத்திகளையும்/சேவைகளையும் தாராளமாக அனுபவிக்கலாம்.
கடன் பெறுபவர் தேவையான எல்லா ஆவணங்களையும் தகவல்களையும் சமர்ப்பிப்பாராயின், 2 வாரங்களினுள் கடன் செயன்முறைப்படுத்தப்படும்.
ஆம். எல்லா நடைமுறைக் காரணங்களுக்காகவும், சாதாரண மீள்கொடுப்பனவு முறைமை சமப்படுத்தப்பட்ட தவணைக் கொடுப்பனவுகளாகும். எனினும், கடன் பெறுபவரின் விசேட வேண்டுகோளின் பிரகாரம், சமனான தவணைக் கொடுப்பனவுகள் (குறைந்துசெல்லும் மீதி) சாத்தியமானவையாகும். மட்ட வீதத்துக்கும் (Flat Rate) குறைந்துசெல்லும் மீதி முறைமைக்கும் இடையிலான வேறுபாடு யாது? எந்த முறைமை கடன்பெறுவோருக்கு பயன்மிக்கது? மட்ட வீத முறைமையில், வட்டி வீதம் கடனின் அடிப்படைத் தொகையில் கணிக்கப்படுகின்றது. ஆனால், குறைந்து செல்லும் மீதி முறைமையில், வட்டிவீதம் நிலுவையாக உள்ள கடன் தொகைக்கு மாத்திரம் மாதாந்த அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. எனவே, நடைமுறையில் பார்க்கும்போது, குறைந்துசெல்லும் மீதி முறைமை மட்ட வீத முறைமையை விட அதிக பயன்மிக்கதாகும். உதாரணமாக, நீங்கள் ரூ.100,000, 3 வருடங்களுக்கு 10% மட்ட வட்டி வீதத்துக்கு கடன் பெற்றால், மொத்த வட்டி ரூ.130,000 (ரூ.100,000 x 10% x 3) ஆகும். அது சமப்படுத்தப்பட்ட மாதாந்த தவணைக் கட்டணமாக ரூ.3,611 (ரூ.130,000வை 36 ஆல் பிரித்து வருவது) செலுத்தப்படுதல் வேண்டும். குறைந்து செல்லும் மீதி முறைமையில், வட்டிவிதம் 17.92% ஆகக் கணிக்கப்படும்.
கடன் மீளளிப்பில் கடன் பெற்றவரின் அர்ப்பணிப்பு மற்றும் வங்கியின் மீதான விசுவாசம் ஆகியவற்றைப் பொறுத்து, கடன் பெற்றவர்களுக்கு இலகுவான, நீடித்த கடன் வசதிகள் வழங்கப்படும்.
கடன் தவணைக் கட்டணத் தொகை, செலுத்த வேண்டிய திகதி, அறவிடுவதற்கான கணக்கு இலக்கம் போன்ற அவசியமான எல்லா விபரங்களையும் உள்ளடக்கிய தகவல் அட்டை ஒன்றை வங்கி வழங்கும்.
ஆம். அத்தகைய கோரிக்கை கடன் வழங்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
கிடைக்கக்கூடிய மீள் நிதியிடல் திட்டங்களைப் பற்றி அறிய எமது இணையத்தளத்தை (www.dfcc.lk) பார்வையிடவும்.