DFCC Galaxy

DFCC Galaxy

இலங்கையில் முதன் முறையாக அறிமுகமாகும் முழுமையான அர்ப்பணிப்பைக் கொண்ட மெய்நிகர் வங்கித்தொழில் (Virtual Banking) அனுபவத்தை சற்று அவதானியுங்கள்.

DFCC Galaxy என்றால் என்ன?

DFCC Galaxy என்றால் என்ன?

மெய்நிகர் உலகில் பயன்படுத்துனர்களுக்கு பரந்த வீச்சிலான வங்கிச் சேவைகளை வழங்கும் DFCC வங்கி இலங்கையில் DFCC Galaxy என்னும் ஒரு புதிய மெய்நிகர் வங்கியை ஆரம்பித்துள்ளது. பயன்படுத்துனர்கள் வீட்டில் இருந்தாலும், பிரயாணம் செய்துகொண்டிருந்தாலும் அல்லது எங்கு இருந்தாலும் இந்த சேவைகளை சௌகரியமாக அணுகுவதற்கு இந்தப் புதுமையான மெற்றாவேர்ஸ் (Metaverse) வங்கி னுமதிக்கின்றது.

இப்போது பார்வையிடவும்

சிறப்பம்சங்கள்

  • உற்பத்திகள் மற்றும் ஊக்குவிப்புகள் பற்றிய தகவல்கள்
  • வங்கியின் உற்பத்திகள் மற்றும் சேவைகள் பற்றிய பொதுவான தகவல்கள்
  • உங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய ‘அவதார்’ (Avatars)s
  • பிரத்தியேக ‘வெபினார்கள்’ மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஆற்றல்
  • பயன்படுத்துனர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளுதல்
  • வங்கியின் கணக்குகள் மற்றும் அட்டை விண்ணப்பங்களுக்கு மீள் வழிப்படுத்தல்
  • 24×7 Chatbot மற்றும் நேரடி முகவர் ஊடாக வாடிக்கையாளர் ஆதரவுச் சேவைகள்

அவதானிக்கவேண்டிய முக்கியமான விடயங்கள்

  • வாடிக்கையாளர் பாவிக்கும் டிஜிட்டல் சாதனம் டிஜிட்டல் அனுபவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
  • அதி உச்ச செயலாற்றலை பெறுவதற்காக, சுமுகமான ஒரு அனுபவத்தைப் பெறுவதற்கு தயவுசெய்து 60 செக்கன்கள் காத்திருக்கவும்

DFCC Galaxy பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • எனது அவதாரை (Avatar) எவ்வாறு எனக்கு விரும்பியவாறு மாற்றியமைப்பது?
    • உள் நுழைந்தவுடன், அவதாரை மாற்றுவதற்கான பல்வேறு விருப்பத் தேர்வுகளைப் பெறுவதற்கு உங்கள் விசைப்பலகையில் (keyboard) ‘C’ எழுத்தை அழுத்தவும்.
  • DFCC Galaxy யை எவ்வாறு இயக்குவது?
    • இயக்கத்துக்காக விசைப்பலகையின் W + S அல்லது மேல் நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய அம்புச் சாவியை பயன்படுத்தலாம். இயக்கும்போது இடது பக்க சுட்டி பொத்தானை (Left Mouse button) அழுத்தியவாறே சுட்டியை அசைத்துத் தேடவும். பெயர்வுச் சாவியை (SHIFT key) கீழ்நோக்கி அழுத்துவதன் மூலம் நீங்கள் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.
  • மிகச் சிறந்த அனுபவத்தை எந்தச் சாதனம் வழங்குகின்றது?
    • அதி உச்ச அனுபவத்தைப் பெறுவதற்கு ஆகக் குறைந்தது 8GB எழுந்தமான அணுகுகை நினைவகத்தைக் (RAM) கொண்ட ஒரு தனிப்பட்ட கணினியை அல்லது மடிக்கணினியை பயன்படுத்துவதற்கு நாம் விதந்துரைக்கின்றோம். ஆகக் குறைந்த 8 mbps இணைய வேகம் உங்கள் மேலோடியின் (browser) செயன்முறை நேரத்தைக் குறைக்கும்.
  • DFCC Galaxy சுற்றாடலில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது?
    • கட்டுப்பாட்டை மீளப் பெறுவதற்கு அந்தப் பக்கத்தில் புதுக்கம் (refresh) செய்யவும்.
  • பல முறை முயற்சித்தும் இணைப்பை ஏற்படுத்த முடியாவிட்டால் என்ன செய்வது?
    • தயவு செய்து தரப்பட்ட இணைப்பை (Linkடiமெ) கிளிக் செய்வதன் மூலம் மீண்டும் சரிபார்க்கவும். மேலும், நீங்கள் அந்தப் பக்கத்தில் புதுக்கம் (refresh) செய்வதன் மூலம் அல்லது வேறொரு மேலோடியை (browser) பயன்படுத்துவதன் மூலம் முயற்சிக்க முடியும்.
  • அதிகூடியது எத்தனை பயன்படுத்துனர்கள் இணைந்துகொள்ள முடியும்?
    • தற்போது அதிகூடிய பயன்படுத்துனர்களின் எண்ணிக்கை 100 ஆகும். அது 100 ஐ விட அதிகரிப்பின், பயன்படுத்துனர்களின் எண்ணிக்கை அதிகூடிய எண்ணிக்கையிலிந்து குறையும் வரை நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும்.