DFCC Prestige

DFCC Prestige

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் புதிய உச்சங்களை எட்டியுள்ளீர்கள். ஆகவே உயர்ந்தவற்றை அடையப்பெற வேண்டிய நேரம் இது. எங்கள் குறிக்கோள் உங்கள் இலக்கினை அடைய உதவி செய்வதுடன், உங்கள் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் நாங்கள் உங்களுடன் கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறோம். DFCC Prestige உங்கள் அடுத்த இலக்கை அடைய உதவும் வகையில் உங்கள் நிதியியல் அம்சங்களை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவும், சுமூகமாக முன்னெடுத்துச் செல்லவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு DFCC Prestige வாடிக்கையாளராக நீங்கள் உங்கள் குறிக்கோள்களை சிறப்பாக அடைந்துகொள்ள உதவும் பல நன்மைகளையும் சேவைகளையும் பெற்றுக்கொள்வீர்கள்.

தேவையான தகைமை

தேவையான தகைமை

பின்வரும் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் எவரும் DFCC Prestige சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  • குறைந்தபட்ச மாதாந்த தேறிய ஊதியமாக ரூபா. 150,000/- முதல் ரூபா. 449,999/- வரையான தொகை DFCC கணக்கொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
  • ரூபா. 2,500,000/- தொகைக்கு மேற்பட்ட ஒட்டுமொத்த வைப்புக்கள்.
  • ரூபா. 3,500,000/- தொகைக்கு மேற்பட்ட தனிநபர் கடன்.
  • ரூபா. 5,000,000/- தொகைக்கு மேற்பட்ட வீட்டுக் கடன்.

நன்மைகள்

சேமிப்புக் கணக்கு

  • இத்திட்டத்தின் கீழ் எந்த வகையான சேமிப்புக் கணக்கினையும் வாடிக்கையாளர் ஆரம்பிக்க முடியும்.
  • பூச்சிய மீதியுடன் கணக்கினை ஆரம்பிக்க முடியும், அது ஆரம்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் சம்பளப்பணத்தின் முதலாவது வரவு இக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

நடைமுறைக் கணக்கு

  • ஆரம்ப வைப்புத் தொகை தேவைப்பாடு இன்றி கணக்கினை ஆரம்பிக்க முடியும்.
  • குறைந்தபட்ச மீதிக் கட்டணத் தேவைப்பாட்டுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • கணக்கில் மேல்மிச்சமாக உள்ள தொகையை தன்னியக்க முறையில் வைப்புக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

கடனட்டை

  • DFCC Prestige இணைப்பெயர் கொண்ட கடனட்டைகளுக்கு இணைந்து கொள்ளும் கட்டணம் மற்றும் வருடாந்த கட்டணத்திற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு கொடுப்பனவிற்கும் 1% பணமீளளிப்பு.
  • எரிபொருள் நிரப்பலின் போது 3% பணமீளளிப்பு.
  • சேவை வழங்குநருக்கு நேரடியாக செலுத்தப்பட்ட பாவனைக் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகளுக்கு 3% பணமீளளிப்பு.
  • ரூ. 25,000 ற்கும் ரூ. 1,000,000 ற்கும் இடைப்பட்ட எந்தவொரு கொள்வனவிற்கும் 6 மாதங்கள் வரையிலான 0% இலகுக் கொடுப்பனவுத் திட்டங்கள். (எரிபொருள், பண முற்பணம், கெசினோ மற்றும் சூதாட்ட பரிவர்த்தனைகளுக்கு இலகு கொடுப்பனவு திட்டம் செல்லுபடியாகாது). கையாளுகைக் கட்டணம் அறவிடப்படும் மற்றும் தயவுசெய்து பொது கடன் அட்டைக் கட்டணங்களைப் பார்க்கவும். கையாளுகைக் கட்டணம் அறவிடப்படும் மற்றும் தயவுசெய்து பொது கடன் அட்டைக் கட்டணங்களைப் பார்க்கவும்..
  • DFCC கடனட்டையைப் பயன்படுத்தி இரு வழி விமானப் பிரயாண டிக்கெட்டை கொள்வனவு செய்யும் இலவச பிரயாண காப்புறுதி.
  • உலகளாவில் எந்த விமான நிலையத்திலும் ஆண்டுக்கு ஒரு முறை Lounge Key மூலம் இலவச உள்நுழைவு.

டெபிட் அட்டை

  • விற்பனை மைய கொடுப்பனவுகளின் போது அதிகரித்த உச்ச வரம்பு.
  • பணத்தை மீளப்பெறுவதற்காக அதிகரித்த உச்ச வரம்பு.

தனிநபர் கடன் வசதி

  • 0.5% தள்ளுபடியுடன் விசேட வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.

டிஜிட்டல் வங்கிச்சேவை வசதிகள்

  • DFCC வங்கியின் DFCC Virtual Wallet மற்றும் இணைய வங்கிச்சேவை வசதிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி.
  • கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகள் தொடர்பில் இலவச குறுஞ்செய்தி தகவல்
  • இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்கள் இலவசம்.
  • சேவைக் கட்டணங்கள் இல்லாமல் பாவனைக் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்தும் வசதி.

தன்னியக்க டெலர் இயந்திர (ஏடிஎம்) / பண மீள்சுழற்சி இயந்திர வசதி

  • இலங்கையிலுள்ள எந்தவொரு DFCC வங்கி அல்லது Lanka Pay வலையமைப்பு ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகவும் பணத்தை கட்டணங்கள் எதுவுமின்றி மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.

கூடுதல் நன்மைகள்

  • + 94-11-235 0022 மூலமாக பிரத்தியேக 24 மணி நேர அழைப்பு மையம்

எவ்வாறு விண்ணப்பிப்பது

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்