திறைசேரிச் சேவைகள்

திறைசேரிச் சேவைகள்

உங்களது தேவைகளைப் புரிந்துக்கொள்வதற்காக, அனுபவம் வாய்ந்த, திறமையான விற்பனையாளர்களால் வழங்கப்படும் விரிவான திறைசேரி தயாரிப்புகளையும் சேவையும் DFCC வங்கி உங்களுக்கு வழங்குகின்றது.

மேலோட்டம்

மேலோட்டம்

உங்களது தேவைகளைப் புரிந்துகொள்வதற்காக, அனுபவம் வாய்ந்த, திறமையான விற்பனையாளர்களால் வழங்கப்படும் விரிவான திறைசேரி தயாரிப்புகளையும் சேவையும் DFCC வங்கி உங்களுக்கு வழங்குகின்றது. நிலையான சந்தை நிலைமைகளில் கணக்கிடப்படும் அதேவேளை, எங்களது விநியோகஸ்தர்கள் வேகமான மற்றும் திறமையான சேவைகளை வழங்க, அதிக தூரம் செல்கின்றனர் என்பதை, நாம் புரிந்துவைத்துள்ளோம். ஏனைய  சந்தைப் பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடும்போது, போட்டிகரமான வட்டி வீதங்களையும் பரிமாற்றல் வீதங்களையும் நாம் வழங்குகின்றோம். உங்களது முதலீடு மற்றம் அந்நிய செலாவணி தேவைகளை, குறைந்த ஆவணங்களுடனும் செயல்முறைகளுடனும் பூர்த்தி செய்து, புதிய அனுபவமொன்றைப் பெற்றக்கொள்வதற்கு, நாம் வாய்ப்பு வழங்குகின்றோம்.

முதலீட்டுத் தயாரிப்புகள்

  • திறைசேரி உண்டியல்  – திறைசேரி உண்டியல்கள் என்பது, இலங்கை அரசாங்கத்துக்கு பதிலாக, இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்படும் முதன்மை ஏலங்கள் மூலம் வழங்கப்படும் ஒரு குறுகிய கால முதலீடு ஆகும். உள்ளூர் முதலீட்டாளர் இயல்புநிலை அபாயத்தை பூஜ்ஜியமாக கருதுவதால், அவை பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கி, 91, 182 மற்றும் 364 நாள்களுக்கு அசல் முதிர்வடையும் திறைசேரி உண்டியல்களை வழங்குகின்றது.
  • திறைசேரிப் பிணைகள் – அரசாங்கத்துக்கு பதிலாக, இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்படும் முதன்மை ஏலத்தின் மூலம் வழங்கப்படுவதே, திறைசேரி பிணைகள் ஆகும். இந்தப் பத்திரங்கள், உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு பூஜ்ஜிய இயல்புநிலை அபாயத்துடன், 2 தொடக்கம் 30 வருட காலத்தில் அசல் முதிர்வு அடையும் வகையிலான நடுத்தர மற்றும் நீண்ட கால முறையில் வழங்கப்படுகின்றன. இந்தப் பத்திரங்கள், அரை ஆண்டு கூப்பனைக் கொண்டுள்ளதுடன், அரசாங்கத்துக்கு பதிலாக, இலங்கை மத்திய வங்கியால், தவறாமல் ஏலம் விடப்படுகின்றன.

 

  • மீள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் அரசாங்க பாதுகாப்பு மீதான பின்னோக்கு மீள் கொள்முதல்  மீள் கொள்முதல் ஒப்பந்தம் என்பது, திறைசேரி உண்டியல்களின் பிணையத்துக்கு எதிராக வங்கி வாங்கும் கடன் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான வாடிக்கையாளரிடமிருந்து பத்திரங்கள் மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி வீதம் ஆகியவை தொடர்பாக, வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும். மீள் கொள்முதல் ஒப்பந்தமானது, பணச் சந்தையின் கருவியாகும். இது, ஒரே இரவிலிருந்து ஒரு வருடம் வரையான, காலவரையறையின் அடிப்படையில், நெகிழ்வுத் தன்மையை வழங்குகின்றது. எனவே, இந்த வகையான கருவிகள், வாடிக்கையாளர்கள் பரந்த அளவிலான முதலீடுகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. பின்னோக்கு மீள் கொள்முதல் ஒப்பந்தம் என்பது, வாடிக்கையாளர்களின் திறைசேரி உண்டியல்களுக்கு எதிராக வாடிக்கையாளர்களுக்கு வங்கி கடன் கொடுக்கும் அல்லது ஒரு குறிப்பிடட காலத்துக்கான பத்திரங்கள் மற்றும் பரஸ்பரஸ் ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி வீதங்கள் தொடர்பாக, வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும். இது, மீள் கொள்முதல் ஒப்பந்த முதலீட்டுக்கு எதிரானதாகும். மேலதிகப்பற்றின் மூலமான பொதுவான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஏற்கெனவே முதலீடு செய்த அரசாங்க பாதுகாப்புக்கு எதிராக, குறுகிய கால நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. மீள் கொள்முதல் ஒப்பந்த விகிதங்களை இங்கே பார்க்கலாம்.

 

  • கூட்டாண்மை கடன் கருவிகளால் மீள் கொள்முதல் ஒப்பந்தத்தின் ஆதரவு அரசாங்க பாதுகாப்பு மீதான மீள் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு இது சமமானதாகும். இருப்பினும், இறையாண்மை கருவிகளை பிணையமாகப் பெறுவதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள், DFCC வங்கியின் இயல்புநிலை ஆபத்தைக் கருதுகின்றனர். அரசாங்க பாதுகாப்பு மீதான மீள் கொள்முதல் ஒப்பந்தமானது, நிலைய வைப்பு மற்றும் அரசாங்க பாதுகாப்பு மீதான மீள் கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலமான ஈட்டுத் தொகையின் நன்மைகளை வழங்குகின்றது.

 

  •  இலங்கை அபிவிருத்திப் பத்திரங்கள் இலங்கை அபிவிருத்திப் பத்திரங்கள் என்பது, இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அமெரிக்க டொலர் மதிப்புக் கருவியாகும். இங்கு, வட்டியானது, அரையாண்டுக்கே செலுத்தப்படுகின்றது. தகுதியான முதலீட்டாளர்களில் உள்ளிட்ட வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் நிறுவனங்கள், குடியுரிமை பெறாத இலங்கையர்கள், இலங்கையின் இரட்டை பிரஜா உரிமைக் கொண்டவர்கள், தனிநபர் அந்நிய செலாவணி கணக்குகள் மற்றும் வணிக வெளிநாட்டு நாணயக் கணக்குகளை வைத்திருப்போர், உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள், வெளிநாட்டு நாணயத்தில் வைப்புத் தொகையை ஏற்க அனுமதிக்கப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் ஆகியவை அடங்குகின்றன. குறைந்தபட்ச முதலீடாக 10,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் காணப்படுவதோடு, முதலீட்டாளர், அரசாங்கத்தின் கடன் அபாயத்தை ஏற்றுக்கொள்கின்றார். வாடிக்கையாளர்கள், ஏலத்தின் மூலம் எடுக்க விரும்பும் விகிதத்தின் அடிப்படையில், இந்தக் கருவி மாறுபடும்.
  • இரட்டை நாணய வைப்பு – DFCC வங்கியால் வழங்கப்படும் இரட்டை நாணய வைப்பு, அந்நிய செலாவணிச் சந்தைகளுடன் இணைக்கப்பட்ட வருவாயை அதிகரிக்கும் ஒரு உற்பத்தியாகும். அவருடைய/ அவளுடைய தனிப்பட்ட விருப்பங்களுடன் பொருந்தக்கூடிய அந்நிய செலாவணி முதலீட்டு மூலோபாயத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் முதலீட்டு வருவாயை அதிகரிக்க உதவுகின்றது. உதாரணமாக: வாடிக்கையாளர் ஒருவர், தற்போதைய சந்தை வீதத்தில் இருந்து பரவும் GBP 0.0100 உடன் FX மாற்று வீதத்தையோ தற்போதைய சந்தை வீதமான 1.5650 1 மாத காலத்துக்கு 250,000 GBP இரட்டை நாணய வைப்புத் தொகையை, முதலீடு செய்கிறார். இதன் விளைவாக, 8.00 சதவீத வட்டி வீதம் கிடைக்கும்.

 

  • சூழ்நிலைக்காட்சி 1: 

FX நிர்ணயிக்கும் திகதியில், சந்தை பரிமாற்ற வீதம், GBP/ ஐக்கிய அமெரிக்க டொலர் 1.5375 ஆகும். வாடிக்கையாளர், முதன்மை மற்றும் GBPஇலுள்ள வட்டி ஆகிய இரண்டையும் பெறுவார்.

  • மூலதனம் – GBP 250,000
  • வட்டி – GBP 1,643.84 (250,000*8%/365*30)
  • மீள் செலுத்துகை – GBP 251,643.84
  • சூழ்நிலைக் காட்சி 2:

FX நிர்ணயிக்கும் திகதியில், சந்தை பரிமாற்ற வீதம், GBP/ ஐக்கிய அமெரிக்க டொலர் 1.5375 ஆகும். வாடிக்கையாளர், முதன்மை மற்றும் GBPஇலுள்ள வட்டி ஆகிய இரண்டையும் ஐக்கிய அமெரிக்க டொலரில் பெறுவார்.

  • மூலதனம் – GBP 250,000
  • வட்டி – GBP 1,643.84 (250,000*8%/365*30)
  • GBP 251,643.84*1.5650
  • மீள் செலுத்துகை – USD 393,822.61

இருந்தாலும், விலையில் தாக்கம் ஏற்பட்டு, வாடிக்கையாளர், 2ஆவது நாணயத்தில் வட்டி மற்றும் மூலதனத்தைப் பெற்று,, 1ஆவது நாணயத்துக்கு உடனடியாக மாற்றினால், மூலதன இழப்பு ஏற்படலாம். இதன்மூலமான ஆபத்தை முற்றாக புரிந்த வாடிக்கையாளர்களுக்கே இது பொருந்தும் என்பதோடு, வருமானங்கள் எந்த நாயணத்தில் திரும்புகின்றன என்பதில் அலட்சியமாக இருக்கவேண்டும்.

FX உற்பத்திகள்

  • அந்நிய செலாவணி பரிவர்த்தணைகள் – DFCC திறைசேரி வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி தேவைகளை பூர்த்தி செய்ய, போட்டிச் சந்தை விகிதங்களை வழங்குவதன் மூலம் உதவுகின்றது.

         அந்நிய செலாவணி விகிதங்களை இங்கே பார்க்கவும்

  • முன்னோக்கிய அந்நிய செலாவணி ஒப்பந்தம் – ஒரு அந்நிய செலாவணி முன்னோக்கிய ஒப்பந்தம் என்பது, வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு, அந்நிய செலாவணியை வாங்க அல்லது விற்கவேண்டிய கட்டாய கடமையாகும். ஒரு இறக்குமதியாளர் அல்லது ஏற்றுமதியாளர் ஒரு முன்னோக்கி ஒப்பந்தத்தை பதிவு செய்யும்போது ஏற்படக்கூடிய இழப்பு அல்லது வருமானத்தின் உதாரணத்தை, பின்வருவன, சித்தரிக்கின்றன. இது முதிர்ச்சியடையும்போது, சந்தை குறித்த வீதம் நிலையான முன்னோக்கிய வீதத்துக்கு மேல் அல்லது குறைவாக இருக்கும்போது, இரண்டு சூழ்நிலைக்காட்சிகளை சித்தரிக்கின்றன. மேலும் ஒரு உதாரணமாக, 5 மாதங்களுக்கு 183.00 என்ற முன்னோக்கி வீதம், ஜனவரி மாதம் 1ஆம் திகதி, 100,000 ஐக்கிய அமெரிக்க டொலர் ஒப்பந்த மதிப்பு ஒப்புக்கொள்ளப்பட்டது.

  • அந்நிய செலாவணி விருப்பு ஒப்பந்தங்கள்ஒரு விருப்பு என்பது, கொள்வனவு செய்பவருக்கு ஒரு கட்டணம் (பிரீமியம்) செலுத்தும் ஒரு ஒப்பந்தமாகும். இது காலாவதியாகும்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விலையில், ஒரு அடிப்படை சொத்தின் குறிப்பிட்ட தொகையை கொள்வனவு செய்ய அல்லது விற்பனை செய்ய கடப்பாடு இல்லை.ஒரு இறக்குமதியாளர் அல்லது ஏற்றுமதியாளர், அந்நிய செலாவணி விருப்ப ஒப்பந்தத்தை பதிவு செய்யும்போது, பின்வருவனவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளவும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்கள், இரண்டு சூழ்நிலைக்காட்சிகளைச் சித்தரிக்கின்றன. “சந்தை விகிதம” அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்போது, “தாக்க விலை” அந்த நேரத்தில், “நிலையாக” இருக்கும். உதாரணத்துக்கு, வாடிக்கையாளர், ஜனவரி மாதம் 1ஆம் திகதி, 5 மாதங்களுக்கு 183.40 என்ற அடிப்படையில், “தாக்க விலை” 100,000 டொலர் ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டார் என்றால், 500 அமெரிக்க டொலர் கட்டணத்தைச் செலுத்தி, குறித்த சந்தையை 183.00ஆக பேண முடியும்.

தொடர்புக்கு 

திறைசேரி மற்றும் வள அணிதிரட்டல் துறை

DFCC வங்கி
பிஎல்சிஇல 73/5,
காலி வீதி
கொழும்பு – 03
இலங்கை

Treasury Front Office

Name Designation Contact Number
Gayan Kaushalya Assistant Vice President / Chief Dealer 0112442780
Kasun Pathirage Assistant Vice President 0112442781
Nilushika Gamage Assistant Vice President 0112442782
Manoj Salgado Senior Foreign Exchange & Money Market Manager  / Senior Dealer 0112442777
Nipuna Rathnayake Assistant Treasury Sales Manager/ Assistant Dealer 0112442771
Ryan Jansan Assistant Treasury Sales Manager/ Assistant Dealer 0112442778
Samudra Chandrasekara Assistant Dealer 0112442773
Charith Jayasundara Executive 0112442783
Gayathri Samarasinghe Junior Executive 0112442331