
Our Sustainability
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
அவசரகால உதவி
DFCC வங்கி பிஎல்சி இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது நிதி அன்பளிப்புகள்,தொண்டு சேவைகள் ஆகிய அவசரகால நிவாரண உதவிகளை வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்மை குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உதவிக்கரம் நீட்டல்
DFCC வங்கி வெள்ளத்தினால் கடந்த ஜுன் மாதம் பாதிக்கப்பட்ட 6 பாடசாலைகளின் தேவைகளை இனம்கண்ட பின்னர் இரத்தினபுரி மிகிந்து வித்தியாலயத்தில் 360 மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள்,பாடசாலை பைகள்,சீருடைகள்,அப்பியாச புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கியதுடன் கலவான காமினி மத்திய பாடசாலையில் 181 மாணவர்களுக்கு காலணி வவுச்சர்களையும் வழங்கியது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு DFCC வங்கி இன் உதவியைப் பெற்ற 3வது பாடசாலை தெனியாய லங்காகம கனிஷ்ட மாதிரி பாடசாலையாகும். மிகவும் பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலையில் தரம் 1 இலிருந்து தரம் 13 வரை 162 மாணவர்களே கல்வி கற்கிறார்கள். அநேகமாக சகல மாணவர்களும் வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்தவர்களாவர். தெனியாயவிலிருந்து லங்காகமவிலுள்ள இப்பாடசாலைக்கு செல்லும் வீதி மோசமாக சேதமடைந்த நிலையில் இருப்பதால் ஒரு வாகனத்தில் அங்கு செல்வதற்கு 2 மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கிறது. DFCC வங்கி கடந்த ஜுலை மாதம் 05ஆம் திகதி 162 மாணவர்களுக்கும் காலணி வவுச்சர்கள்,பாடசாலை பைகள்,சீருடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. மாத்தறை ஆரம்ப மாதிரி பாடசாலைக்கும் வெரகம்பிட்டிய ஒல்கொட் மாதிரி பாடசாலைக்கும் டுப்ளோ இயந்திரயங்களையும் களுத்துறை தியகம வித்தியாலயத்திற்கு 300 கதிரைகளையும் வங்கி வழங்கியுள்ளது.
வங்கியின் சம்பந்தப்பட்ட கிளை முகாமையாளர்களும் உத்தியோகத்தர்களும் இந்த கையளிப்பு வைபவங்களில் பங்குபற்றினார்கள்.
நிவாரணம்
வெள்ளத்தினாலும் கொஸ்கம தீ அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு DFCC வங்கி நிவாரண கடன் திட்டத்தை அறிமுகம் செய்கிறது. தனிப்பட்ட கடன்கள்,வீடமைப்பு கடன்கள்,கல்விக் கடன்கள்,வணிக கடன்கள் ஆகியன இவற்றில் அடங்கும்.
7% சலுகை வட்டி வீதம்
- தனிப்பட்ட கடன்கள்
- வீடமைப்பு கடன்கள்
- கல்விக் கடன்கள்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத சம்பளம் பெறுவோருக்கு தனிப்பட்ட வீடமைப்பு கல்விக் கடன்கள் 7% குறைந்த வட்டியில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 36 மாதங்களில் திருப்பி செலுத்தக்கூடியதாக ஆறு மாத சம்பளத்திற்கு சமமான தொகையை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.
வணிக கடன்
பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் அவற்றின் சேதமடைந்த சொத்துக்கள்,மூலதனம் ஆகியவற்றை மீளமைக்க முதல் வருடத்தில் குறைந்த வட்டி வீதமான 8% வட்டியிலும் அதன்பின்னர் மாற்று வட்டி வீதத்திலும் கடன்கள் வழங்கப்படும். கடனை 5 வருடகால தவணையில் பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வாறு உங்களுக்கு உதவமுடியும் என்பது பற்றி பேசுவதற்கு 2350000 என்றதொலை பேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள DFCC வங்கி கிளைக்கு விஜயம் செய்யவும்.
எமது வட பிராந்திய வெள்ள நிவாரணத் திட்டத்திலிருந்து 2015ஆம் ஆண்டில் 100 குடும்பங்களுக்கு உதவி
வட பிராந்தியத்தில் எமது பிராந்திய முகாமையாளர் திரு. சரவணபவான் ரவீந்திரா தலைமையிலான DFCC வங்கி குழுவினர் வாதரவரை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.
வட பிராந்தியத்தில் எமது பிராந்திய முகாமையாளர் DFCC குழாம் வாதரவரை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். பெரும் மழை காரணமாக கிராமமானது அதிகம் பாதிக்கப்பட்டதுடன் அதிகமானோர் இடம் பெயர்ந்தனர்.
அநேகமான குடும்பங்கள் குறிப்பாக சிறுவர்கள் உணவின்றித் தவித்ததால் அவர்களுக்கு எமது குழுவினர் பிஸ்கட் பக்கெட்டுகளையும் சுமார் 100 குடும்பங்களுக்கு நுளம்புச் சுருள் மற்றும் வேறு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்கள்.
நேபாள அனர்த்த நிவாரணம் – 2015
DFCC வங்கி ஊழியர்கள் நேபாளத்தில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்புவதற்காக அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை சேகரித்தார்கள். புதுப்பிக்கக் கூடிய எரிசக்தியை விருத்தி செய்வதில் நேபாளத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள DFCC வங்கி நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தாங்கள் சேகரித்த பொருட்களையும் அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
வடமத்திய பிராந்தியத்தில் வரட்சி நிவாரணம் வழங்கல்
2014ஆம் ஆண்டில் ஒன்பது மாதங்களாக நிலவிய கடும் வறட்சி காரணமாக 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதுடன் 7 லட்சம் பேர் அடிப்படை உணவும் வாழ்வாதார வசதிகளும் இன்றி கஷ்டப்பட்டனர். அனுராதபுரம்,கதுறுவெல,மொனராகல பகுதிகளுக்கு அவசர உதவி தேவை என்று இனம் காணப்பட்டது. அவ்வப்பகுதி DFCC வங்கிக் கிளைகளைச் சேர்ந்த குழுவினர் அக்கிராமங்களுக்கு விஜயம்செய்து ஏறத்தாழ 1,000 குடும்பங்களுக்கு தண்ணீர் தாங்கிகளையும் உலர் உணவுப் பொருட்களையும் வழங்கினர்.
கொஸ்லாந்த மண்சரிவு நிவாரணம்
DFCC வங்கி பிஎல்சி மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண திட்டம் ஒன்றை ஆரம்பித்தது. எமது பண்டாரவளை கிளைக்கு ஊடாக 2000 அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்பட்டிருந்த பூனாகல முகாம் அதிகாரிகளிடம் உலர் உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
DFCC வங்கி இலங்கை வங்கிகள் சங்கத்தின் ஆதரவிலான இலங்கை பேண்தகு வங்கி நடவடிக்கையில் தீவிரபங்களிப்பை ஆற்றியதுடன் இலங்கையின் ஏனைய 17 வங்கிகளுடன் இணைந்து 11 பேண்தகு வங்கிக் கோட்பாடுகளிலும் இலங்கைக்கான முதல் கட்டத்தின் கீழ் கைச்சாத்திட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒஸ்ரியாவின் OeEB, பிரான்சின்Proparco, நெதர்லாந்தின் FMO ஆகியவற்றுடன் ஜேர்மனியின் DEG யும் நிதி அளித்துள்ளது. AVPஆனது வங்கியின் நிலைத்தன்மை உட்பிரிவு குழுவில் அங்கத்தவராக உள்ளது. இது இரண்டாம் கட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள வங்கிகள் முழுவதிற்கும் இக்குறிகோள்களை செயல்படுத்த உருவாக்கப்பட்டது.
DFCC வங்கி மேலும் சுபீட்சம்,நடுநிலை,நிலைபேறு ஆகியவற்றைக் கொண்ட ஒரு உலகினை கட்டியெழுப்புவதற்காக ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் பேண்தகு அபிவிபிருத்தி குறிக்கோளை அடைவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது. இதன் மூலம் இது தொடர்பாக தரமான கல்வி,புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி,சிறந்த வேலைவாய்ப்பு,பொருளாதார அபிவிருத்தி,சமத்துவம்,பேண்தகு நகரங்கள்,முன்னேற்றமான சமுதாயங்கள் ஆகியவற்றை உருவாக்கலாம்.