DFCC ஆலோக்கா

DFCC ஆலோக்கா

ஆலோக்கா கணக்கு யாருக்காக?

  • தகைமை
    இலங்கையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பெண்ணும் DFCC ஆலோக்கா கணக்கில் இணைந்து கொள்வதற்கு தமைமை உடையவராவார்.

  • யாரால் விண்ணப்பிக்க முடியும்?
    நீங்கள் ஒரு மாணவராக, ஒரு வீட்டைப் பேணும் பெண்ணாக, ஒரு ஊழியராக அல்லது ஒரு வணிகம் மேற்கொள்ளும் பெண்ணாக / தொழில் முயற்சியாளராக இருப்பினும் ஆலோக்கா சமுதாயத்தில் ஒருவராக இணைந்து எண்ணற்ற சிறப்புரிமைகளையும் பயன்களையும் அனுபவிக்க முடியும்.

Open an Account


பயன்களும்/சிறப்புரிமைகளும் ஒப்பற்ற வழங்கல்களும்  
  • அதிகூடிய வட்டிவீத அளவுகளைக் கொண்ட கணக்கு – DFCC ஆலோக்கா சேமிப்புக் கணக்கில் நீங்கள் பேணும் சேமிப்புக் கணக்கு மீதி அதிகரிக்கின்றபோது உயர்வான வருவாய் வீதத்தை உங்களால் ஈட்ட முடியும்.
  •  
    வைப்பின் அளவு (இல.ரூபா) வட்டி வீதம் (ஆண்டொன்றுக்கு)
    1,000.00 இற்குக் குறைவாக 0%
    1,000.00 – 99,999.99 2.50% (AER 2.53%)
    100,000.00 – 999,999.99 3.00% (AER 3.04%)
    1,000,000.00 மற்றும் அதற்கு மேல் 4.25% (AER 4.33%)

  • உங்கள் வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையில் நாமும் இருக்கின்றோம் என்பதையிட்டும் மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதையிட்டும் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். DFCC ஆலோக்கா சேமிப்புக் கணக்கில் சேமிப்பை மேற்கொண்டு உங்கள் திருப்புமுனையான கட்டத்தை நீங்கள் அடைவதற்கு முன்னர் 6 மாதங்களுக்கு உங்கள் DFCC ஆலோக்கா கணக்கில் தகைமை பெறும் மீதியைப் பேணுவதன் மூலம் பின்வரும் DFCC அன்பளிப்புச் சான்றிதழ் வெகுமதிகளைக் கோருவதற்கு நீங்கள் தமைமை பெறுவீர்கள்.

  • வாழ்க்கையின் திருப்புமுனைகள் 6 மாதங்களுக்கு கணக்கில் பேண வேண்டிய மீதி – இல.ரூபா DFCC வெகுமதிச் சான்றிதழ் – இல.ரூபா
    ஆலோக்கா கணக்கு வைத்திருப்பவருக்கு குழந்தை பிறத்தல் 10,000 2,500
    ஆலோக்கா கணக்கு வைத்திருப்பவரின் 21ஆவது பிறந்த நாள் 25,000 2,500
    ஆலோக்கா கணக்கு வைத்திருப்பவரின் பட்டமளிப்பு விழா 50,000 5,000
    ஆலோக்கா கணக்கு வைத்திருப்பவரின் திருமணம் 150,000 10,000
    ஆலோக்கா கணக்கு வைத்திருப்பவரின் 25ஆவது திருமண ஆண்டு நிறைவு 250,000 25,000

  • விசேட டெபிட் அட்டை வழங்கப்படுவதுடன் இணைப்புக் கட்டணம் மற்றும் 1ஆவது வருடத்துக்கான வருடாந்தக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்படும். DFCC வங்கியினால் ஆலோக்கா வாடிக்கையாளர்களுக்காக ஒழுங்குசெய்யப்படும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சமுகமளிப்பதற்கான உரித்தை/அனுமதியை இந்த அட்டை உங்களுக்கு அளிக்கும்.

  • DFCC மற்றும் LankaPay ஆகியவற்றின் 3,000 இற்கும் அதிகமான ATM இயந்திரங்களிலிருந்து பணத்தை மீளப்பெறுவதற்கான வசதி.

  • விசேட கடன் அட்டை வழங்கப்படுவதுடன் இணைப்புக் கட்டணம் மற்றும் 1 ஆவது வருடத்துக்கான வருடாந்தக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்படும். ரூபா 25,000/- இற்கு மேற்பட்ட ரூபா 1,000,000/- வரையிலான ஏதேனும் கொடுப்பனவுகளுக்கான 6 மாத இலகுக் கொடுப்பனவுத் திட்டங்களுக்கு 0% வட்டி. (எரிபொருள், காசு முற்கொடுப்பனவுகள், கெசினோ மற்றும் சூதாட்டக் கொடுப்பனவுகளுக்கு இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டம் செல்லுபடியாகாது.) ஓர் கையாளுகைக் கட்டணம் அறவிடப்படும். தயவு செய்து கடன் அட்டை தீர்வைகளைப் பார்க்கவும்.

  • ஆடை விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கட், உணவகங்கள், களியாட்டங்கள், பொழுதுபோக்கு மற்றும் பிரயாணம் ஆகியவற்றுக்கு வருடம் முழுவதும் விசேட வழங்கல்களும் வழங்கப்படும்.

  • வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வங்கிச் சேவைத் தினத்தை DFCC ஆலோக்கா கொண்டுள்ளது. சுப்பர் மார்க்கட், ஆடை விற்பனை நிலையங்கள், உணவகங்கள், இணைய வழியிலான வழங்கல்கள் போன்றவற்றுக்கான எண்ணற்ற பயன்களை வருடம் முழுவதும் அனுபவிப்பதற்கு DFCC ஆலோக்கா டெபிட் அல்லது கடன் அட்டை வசதியைப் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யுங்கள்.

  • உயிராபத்து நிகழ்வதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் உங்கள் கணக்கில் பேணப்படும் உங்கள் கணக்கு மீதியின் 10 மடங்குகள் வரையிலான ஆயுட் காப்புறுதிக் காப்பீட்டு நன்மையை நீங்கள் பெறுவீர்கள்.

  • கணக்கு மீதி அளவு உறுதியளிக்கப்படும் தொகை
    10,000 – 19,999 100,000
    20,000 – 29,999 200,000
    30,000 – 39,999 300,000
    40,000 – 49,999 400,000
    50,000 – 59,999 500,000
    60,000 – 69,999 600,000
    70,000 – 79,999 700,000
    80,000 – 89,999 800,000
    90,000 – 99,999 900,000
    100,000 மற்றும் அதற்கு மேல் 1,000,000

  • Doc 990 ஊடாக இலவச டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகள். Doc990 என்பது டயலொக் நிறுவனத்தினால் வழங்கப்படும் டிஜிட்டல் சுகாதாரத் தீர்வாகும். DFCC ஆலோக்கா வாடிக்கையாளர்களை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீட்டு அடிப்படையிலான தீர்வுகளை ஒருங்கிணைக்கும் தகைமையுள்ள மருத்துவர்கள், மருந்தகங்கள், ஆய்வு கூடங்கள் மற்றும் பிரபல்யமான வைத்தியசாலைகளுடன் இணைப்பதற்கு DOC990 உடனான பிரத்தியேக பங்குடைமையை DFCC வங்கி கொண்டுள்ளது. எல்லா DFCC ஆலோக்கா கணக்கு வைத்திருப்பவர்களும் அவர்களின் 3 பேர் வரையிலான குடும்ப உறுப்பினர்களும் இந்த டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்பு வசதியின் மூலம் பயன்களை அனுபவிக்க முடியும்.

  • நீங்கள் DFCC வங்கியிலிருந்து பல்வகையான டிஜிட்டல் வங்கிச்சேவைகளை கட்டணமின்றி அனுபவிக்க முடியும். நீங்கள் எங்கு இருப்பினும் அங்கு கிடைக்கும் சௌகரியங்களுடன் உங்கள் நாளாந்த நிதிகளை முகாமைத்துவம் செய்வதற்கான சௌகரியத்தையும் நெகிழ்ச்சித்தன்மையையும் அனுபவிப்பதற்கு நாம் ஆதரவளிக்கின்றோம்.

    • இலவச குறுஞ்செய்தி தகவல் சேவை
    • இலவச இணையத்தின் ஊடான வங்கிச்சேவைகள்
    • இலவச இலத்திரனியல் கணக்குக் கூற்றுகள்
    • இலவச வேர்சுவல் வொலற் சேவை

  • தனிப்பட்ட நிதியியல் சேவைகள்

  • நீங்கள் உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கு நாம் உங்களுக்கு உதவுவோம். DFCC ஆலோக்கா வாடிக்கையாளர் என்ற வகையில் உங்களுக்கு பின்வரும் வசதிகள் கிடைக்கும்.

தனிப்பட்ட கடன்கள்
 

வெளியிடப்பட்ட வட்டி வீதங்களிலிருந்து ஒரு முன்னுரிமை வட்டி வீதம், 3 வேலை நாட்களினுள் துரிதமாக கடன் செயன்முறைப்படுத்தல் மற்றும் கடன் செயன்முறைப்படுத்தல் கட்டணத்தில் 50% கழிவு ஆகியவை உங்களுக்குக் கிடைக்கும்.


மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

வீடமைப்புக் கடன்கள்
 

வீடமைப்புக் கடன்களுக்கு வெளியிடப்பட்ட வட்டி வீதங்களிலிருந்து ஒரு முன்னுரிமை வட்டி வீதமும் வீடமைப்புக் கடன் செயன்முறைப்படுத்தல் கட்டணத்தில் 50% கழிவும் உங்களுக்குக் கிடைக்கும்.

  • DFCC Business Consultants (Pvt) Ltd ஊடாக நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்ஃசிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர் வணிக ஆலோசனைகள்.
  • DFCC தங்கவரம் – உங்கள் எல்லா அடகு வைத்தல் கொடுக்கல் வாங்கல்களுக்கும் முன்னுரிமை வட்டி வீதங்கள்.
  • DFCC ஆலோக்கா கணக்கு வைத்திருப்போருக்கு Durdans வைத்தியசாலையிலிருந்து பிரத்தியேக மருத்துவ வசதிகள்.
  • மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தேவையான ஆவணங்கள்
 
  • கணக்கு திறப்பதற்கான படிவம்
  • தேசிய அடையாள அட்டை / இலத்திரனியல் அடையாள அட்டை / கடவுச் சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரம்
  • தேசிய அடையாள அட்டையில் இருக்கும் முகவரி வாடிக்கையாளரின் தற்போதைய முகவரியிலிருந்து வேறுபடுமாயின், முகவரியை உறுதிப்படுத்தல்.
Skip to content
page-dfcc-aloka.php