எளிய கட்டணத் திட்டம்

எளிய கட்டணத் திட்டம்

ரூ 10,000/ - க்கு அதிகமான எந்தவொரு கொள்வனவையும் தவணைத் திட்டமாக மாற்றி, 3 முதல் 60 மாதங்களுக்குள் செயலாக்கக் கட்டணத்துடன் திருப்பிச் செலுத்துங்கள்.

  • நீங்கள் ரூபாய் 10,000.00க்கு மேற்பட்ட எந்தவொரு பணக்கொடுக்கல் வாங்கலையும்; இலகு தவணை முறையில் செலுத்தலாம். செயலாக்க கட்டணம், அமைவுக் கட்டணம் மற்றும் இலகு கொடுப்பனவுத் திட்டம் என்பன அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள்; இருத்தல் வேண்டும்.

  • இலகு தவணை முறையில் செலுத்தக்கூடிய ஆகக்குறைந்த தொகை ரூபாய் 10,000.00 என்பதோடு ஆகக் கூடிய தொகை ரூபாய் 1,000,000.00 ஆகும்.

  • அட்டைதாரர் 3,6,7,9,12,18,24,36,48 மற்றும் 60 ஆகிய சமமான மாதாந்தத் தவணைகளில் பணத்தை மீளச் செலுத்தலாம். இத்தொகையானது செயலாக்க கட்டணம் மற்றும் அமைவுக் கட்டணம் என்பனவற்றையும் உள்ளடக்கும். அமைவுக் கட்டணமானது அட்டைக் கணக்கிற்கெனத் தனியாக அறவிடப்படுவதோடு அதுவும் மீதமுள்ள கடன் எல்லைக்குள் இருத்தல் வேண்டும்.

  • பெற்றுக்கொள்ளக் நடைமுறைவழி மற்றும் செயலாக்க கட்டணம் பின்வருமாறு:
  • விபரம் 03 மாதங்கள் 06 மாதங்கள் 07 மாதங்கள் 09 மாதங்கள் 12 மாதங்கள் 18 மாதங்கள் 24 மாதங்கள் 36 மாதங்கள் 48 மாதங்கள் 60 மாதங்கள்
    ஒரு மாதத்திற்கான செயலாக்கல் கட்டணம் 3.00% 1.80% 1.58% 1.34% 1.30% 1.14% 0.94% 0.81% 0.80% 0.72%
    அமைவுக் கட்டணம் 1,500.00 1,500.00 1,500.00 1,500.00 1,500.00 1,850.00 2,000.00 2,350.00 2,500.00 2,750.00

  • இலகு கொடுப்பனவுத் திட்டத்தை ஏற்பாடு செய்யும் போது அட்டைக்கென மேலே சொல்லப்பட்ட அமைவுக் கட்டணங்கள் அறவிடப்படும். அட்டையிலிருந்து அமைவுக் கட்டணத்தைக் கழித்துக்கொள்வதற்கு ஏற்றவாறு தமது கணக்கில் போதிய பண மிகுதி இருப்பதை அட்டைதாரர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • இலகு கொடுப்பனவுத் திட்டத்திற்கென ஒரு பணக்கொடுக்கல் வாங்கலை மாற்றுவதற்கு, அக்கொடுப்பனவை மேற்கொண்ட 05 நாட்களுக்குள் 0112350000 எனும் இலக்கத்துடன் 24 மணித்தியால தொடர்பு நிலையத்தை அணுக வேண்டும். கணக்குக் கூற்றுத் திகதிக்கு 05 நாட்களுக்கு முன்னதாக அட்டையில் செய்யப்பட்டுச் செயற்படுத்தப்பட்ட சகல கொடுக்கல் வாங்கல்களும் அடுத்த கணக்குக் கூற்றுக் காலப்பகுதியில் ஓர் இலகு கொடுப்பனவுத் திட்டத்திற்கு மாற்றப்படும். இத்தகைய சந்தர்ப்பங்களில், அறவீடு செய்யப்பட்டு மாற்றப்படவுள்ள பணக்கொடுக்கல் வாங்கல்(கள்) சம்பந்தமான கணக்குக் கூற்றின் பிரகாரம் நிலுவையாகவுள்ள மொத்தத் தொகையையும் செலுத்தி முடிக்குமாறு அட்டைதாரர் கோரப்படுவார். இலகு கொடுப்பனவுத் திட்டமானது அடுத்த கணக்குக் கூற்றுக் காலப்பகுதியிலேயே நடைமுறைக்கு வரும். முன்னைய கணக்குக் கூற்று மிகுதியைச் செலுத்தி முடிக்காத பட்சத்தில் அதற்கு ஏற்புடைத்தான சகல கட்டணங்களையும் மற்றும் வட்டியையும் அட்டைதாரர் செலுத்துதல் வேண்டும்.

  • இலகு கொடுப்பனவுத் திட்டத்தின் (பணக்கொடுக்கல் வாங்கல் மற்றும் செயலாக்க கட்டணங்கள்) மொத்தத் தொகையும் அட்டையில் மீதமாகவுள்ள தொகையிலிருந்து நிறுத்தி வைக்கப்படும்.

  • மாதாந்தத் தவணைக் கொடுப்பனவுகள் அட்டையில் பற்று வைக்கப்படும். இத்தொகையானது பணக்கொடுக்கல் வாங்கல் தொகை மற்றும் செயலாக்க கட்டணத்தின் பிரிவைக் குறிக்கின்றது.

  • அட்டைதாரர் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தத் தவறினால் நிலுவையிலுள்ள முழு இலகு கொடுப்பனவுத் திட்டத் தொகையையும் துரிதப்படுத்தப்படுத்தி அட்டையில் பற்று வைக்க வங்கி உரிமை கொண்டுள்ளது.

  • தவணை காலாவதியாகும் முன்னர் அட்டைதாரர் இலகு கொடுப்பனவுத் திட்டத் தொகையைச் செலுத்தி முடிக்க விரும்பினால் அதன் பொருட்டு ஒரு கோரிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இதற்காக இலகு கொடுப்பனவுத் திட்டத்தின் மீதமுள்ள நிலுவைத் தொகையில் 4மூ; முன் கூட்டியே செலுத்தி முடிப்பதற்கான கட்டணமாக அறவிடப்படும்.

  • இலகு கொடுப்பனவுத் திட்டமானது எரிபொருள், கசினோ, சூதாட்டம், பண முற்பணங்கள், வணிக நோக்கங்களுக்காகச் செய்யப்படும் பணக்கொடுக்கல் வாங்கல்கள், மூன்றாம் தரப்பினரால் செய்யப்பட்ட பணக்கொடுக்கல் வாங்கல்கள், அட்டைதாரர் அல்லாத பிறரால் அட்டை பயன்படுத்தப்படல் மற்றும் பணக்கொடுக்கல் வாங்கலைச் செய்வதற்கு முன்னதாக அட்டைக்கு நிதியளிக்கப்பட்டிருத்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் இலகு கொடுப்பனவுத் திட்டம் செல்லுபடியாகாது.

  • பணக்கொடுக்கல் வாங்கல், செயலாக்கல் மற்றும் அமைவுக்கட்டணம் என்பன இலகு கொடுப்பனவுத்திட்டம் மேற்கொள்ளப்படும் தினத்திலும் நேரத்திலும், உள்ள கடன் எல்லைக்குள் இருத்தல் வேண்டும். இருப்புத்தொகை இல்லாமை, உள்ள தொகையை விடவும் மேலதிகமாகக் கொடுப்பனவு செய்யப்பட்மை அல்லது இலகு கொடுப்பனவுத் திட்டதை ஏற்படுத்துவதில் உண்டான ஏனைய தாமதங்கள் என்பனவற்றிற்கு வங்கி பொறுப்பேற்காது. இத்தாமதங்களுக்கு ஏற்புடைத்தான சகல வட்டி மற்றும் கட்டணங்களை அட்டைதாரர் செலுத்த வேண்டும்.

  • இலகு கொடுப்பனவுத் திட்டத்திற்கு மாற்றப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் கீழ் கருத்திற் கொள்ளப்படும் நிபந்தனை, வினியோகம், உத்தரவாதங்கள், விற்பனைக்குப் பிந்திய சேவை, தரம் மற்றும் இது போன்ற பொருட்கள் சேவைகள் என்பன அமுலிலுள்ள வங்கி நடைமுறைகளின் படி கையாளப்படும்.

  • இங்கே கூறப்பட்ட நிபந்தைகளுக்கு முரணான வகையில் வங்கி தனது தற்துணிபு அதிகாரத்தின் பேரில் ஒரு கொடுக்கல் வாங்கலை இலகு கொடுப்பனவு திட்டத்திற்கு மாற்றுவதற்கு முழுமையமன உரிமை கொண்டுள்ளது. இந்த விதி முறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஏதேனும் பிணக்கு ஏற்பட்டால் இவ்விடயங்களில் னுகுஊஊ வங்கியின் முடிவே இறுதியானதாகும்.


விண்ணப்ப படிவம்