
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கியானது புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி பழைய மாணவர் சங்கத்திற்கான பிரத்தியேக இலச்சினை பொறித்த கடனட்டையை (Affinity Credit Card) அறிமுகப்படுத்தியுள்ளது
January 5, 2023

இலங்கையில் கடனட்டைகளை வழங்குவதில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற வங்கிகளில் ஒன்றான DFCC வங்கியானது, கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமான DFCC வங்கி – புனிய அந்தோனியார் கல்லூரி, கண்டி பழைய மாணவர் சங்கம் இலச்சினை பொறித்த பிரத்தியேக வீசா கடனட்டையை வழங்குவதற்காக அச்சங்கத்துடன் கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு அட்டைதாரரும் அட்டையை உபயோகித்து மேற்கொள்ளும் கொடுப்பனவில் குறிப்பிட்ட ஒரு சதவீதத்தையும், ஆண்டுச் சந்தா கட்டணத்தில் குறிப்பிட்ட ஒரு சதவீதத்தையும் பழைய மாணவர் சங்கத்துக்கு வங்கி வழங்கும். பிரத்தியேக இலச்சினை பொறிக்கப்பட்டு, வடிமைக்கப்பட்ட அட்டை என்பது கல்வியை வளர்ப்பதில் தமது பாடசாலைக்கு நிதி ரீதியாக பழைய மாணவர் சங்கம் தொடர்ந்து உதவுவதை உறுதி செய்வதில் DFCC வங்கியின் ஒரு முயற்சியாகும். இது பெருமளவு பிரத்தியேகமான வரப்பிரசாதங்கள், சலுகைகள் மற்றும் அனுகூலங்கள் கொண்ட ஒரு மதிப்புமிக்க அட்டை என்பதுடன், இதனை உபயோகிப்பவர்களுக்கும் பெருமை சேர்ப்பிக்கின்றது.
புதிய பிரத்தியேக இலச்சினை பொறித்த அட்டையின் அறிமுகம் குறித்து, புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரான மார்க் ஸ்டீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “கண்டி புனித அந்தோனியார் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (SACKOBA) என்பது தெற்காசியாவிலேயே மிகவும் பழமையான மற்றும் மதிப்புமிக்க சங்கங்களில் ஒன்றாகும். முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், சர்வதேச விளையாட்டு வீரர்கள் மற்றும் பல பில்லியன் டொலர் மதிப்பு மிக்க வர்த்தக நிறுவனங்களைக் கொண்ட தொழில்முனைவோர் என புகழ்பூத்த பழைய மாணவர்கள் பெருமளவில் உள்ளனர்,” என்று குறிப்பிட்டார். DFCC வங்கியுடன் கைச்சாத்திட்டுள்ளதைக் குறிக்கும் வகையில், SACKOBA இன் தலைவர் மார்க் ஸ்டீபன் அவர்கள் மேலும் கருத்து வெளியிடுகையில், “பிரத்தியேக இலச்சினை பொறித்த அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு DFCC வங்கியுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். எதிர்காலத்தில் எங்கள் பழைய மாணவர்களுக்கு DFCC வங்கி மற்றும் வணிக நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு வரப்பிரசாதங்களுடன் இந்த வாய்ப்பை எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
“புனித அந்தோனியார் கல்லூரி கண்டி பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து, புதிய பிரத்தியேக இலச்சினை பொறித்த DFCC வங்கி வீசா கடனட்டையை அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமையடைகிறோம். 168 வருட கால வளமான வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனமாக இக்கல்லூரி மிளிர்கின்றது. இலங்கைப் பொருளாதாரத்திற்கு 65 வருடங்களுக்கும் மேலாக DFCC ஆற்றியுள்ள பங்களிப்புடன் இணைந்து இந்த கூட்டாண்மை சக்திவாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. இந்த கூட்டாண்மையின் மூலம், DFCC வங்கியானது பழைய மாணவர் சங்கத்திற்கு உதவியளிப்பதன் மூலம், கல்லூரியின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களின் முக்கிய நிதி நோக்கங்களுக்கு உதவுவதில் அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் பொதுவான நற்காரியங்களை முன்னெடுக்க உழைப்பதில் ஒன்றாகச் செயல்படுகிறோம். புழைய மாணவர் சங்கத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், இந்த உறவை மேலும் வலுப்படுத்த ஒன்றாக உழைப்போம்,” என்று DFCC வங்கியின் அட்டை மையத்தின் துணைத் தலைவரான டென்வர் லூயிஸ் அவர்கள் கூறினார்.
DFCC வங்கி – புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி பழைய மாணவர் சங்கம் பிரத்தியேக இலச்சினை பொறிக்கப்பட்ட கடனட்டையானது பழைய மாணவர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவதுடன், அட்டையை உபயோகித்து செலவு செய்கின்ற ஒவ்வொரு முறையும் 1% பண மீளளிப்பு உட்பட பல நன்மைகளை வழங்குகிறது. 60 மாதங்கள் வரையிலான இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள், நியாயமான வீதங்களுடன் விரைவான மற்றும் எளிதான ஏனைய அட்டைகளிலுள்ள நிலுவை மாற்றங்கள் மற்றும் அட்டையிலுள்ள மீதியின் அடிப்படையில் கடன் என ஏராளமான சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன. இதைத் தவிர, பழைய மாணவர் சங்க மற்றும் நிகழ்வுகளில் சில விசேட சலுகைகளுக்கும் அட்டைதாரர்கள் உரித்துடையவர்கள். ஒன்றிணைந்து செயல்படுவதன் மதிப்பை புரிந்து கொள்ளும் ஒரு வங்கியாக, DFCC ஆனது பொருளாதாரத்தில் செழிக்க புதிய மற்றும் ஏற்கனவே உள்ள கூட்டாண்மைகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

இடமிருந்து வலமாக நிற்பவர்கள்
நில்மினி குணரத்ன – சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேண்தகைமை துணைத் தலைவர், DFCC வங்கி, ஷானக சில்வா – உதவி துணைத் தலைவர்/கிளை முகாமையாளர், கண்டி, DFCC வங்கி, டெரன்ஸ் ஏத்துகல – உப தலைவர், பிராந்திய முகாமையாளர், DFCC வங்கி, துமிந்த சில்வா – துணைத் தலைவர், சில்லறை சொத்து மற்றும் பொறுப்பு விற்பனை, DFCC வங்கி, ஆசிரி இத்தமல்கொட – சிரேஷ்ட துணைத் தலைவர், சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், DFCC வங்கி, திமால் பெரேரா – பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, DFCC வங்கி, மார்க் ஸ்டீபன் – தலைவர், புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி, பழைய மாணவர் சங்கம், ரொஹான் விஜேசிங்க – தலைவர், புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி, பழைய மாணவர் சங்கம், கொழும்பு கிளை, ரொஹான் பள்ளேவத்த – Lanka Harness Co. (Pvt) Ltd நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர், சித்துமின ஜயசுந்தர – HNB General Insurance Company நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் டென்வர் லூயிஸ் – துணைத் தலைவர் / அட்டை மையத்தின் தலைவர்
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] A+ தரப்படுத்தல் மற்றும் Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) தரப்படுத்தல் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.