
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATMs) அல்லது பண மீள்சுழற்சி இயந்திரங்களை (CRMs) பயன்படுத்தும்போது உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் பாதுகாப்பானவையா என்பதை உறுதிப்படுத்துவது எவ்வாறு?
February 27, 2023

தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATMs) மற்றும் காசு மீள்சுழற்சி இயந்திரங்கள் (CRMs) வங்கிக் கிளை ஒன்றுக்கு நேரடியாகச் செல்லாமல் தங்கள் வங்கிக் கணக்குகளை அணுகி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான வழியாகும். எனினும், DFCC வங்கியின் ATM/CRM இயந்திரங்களை அல்லது ஏனைய வங்கிகளின் ATM இயந்திரங்களை பயன்படுத்தும்போது தமது கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
01. உங்கள் அட்டையின் தனிப்பட்ட அடையாள இலக்கத்தை (PIN) மனப்பாடம் செய்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளவேண்டிய முதலாவது விடயம் அவர்கள் தங்களின் ATM அட்டை மற்றும் PIN இலக்கம் ஆகியவை தம்மிடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதாகும். இவை இல்லாவிடில், வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளை அணுகி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது. உங்கள் PIN இலக்கத்தை மனப்பாடம் செய்து கொள்வது சிறந்ததாகும். எனினும், சிலவேளைகளில் நீங்கள் மனப்பாடம் செய்தவை மறந்துவிடலாம். எனவே, உங்கள் PIN இலக்கத்தை எழுதி உங்களுடன் கொண்டுசெல்வதை விட அதனை பாதுகாப்பான ஓர் இடத்தில் எழுதி வைத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்படுகின்றது.
02. ATM/CRM இயந்திரத்தைச் சூழ்ந்து ஏதேனும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடு பற்றி எப்போதும் அவதானமாக இருக்கவும்.
வாடிக்கையாளர்களிடம் அவர்களின் அட்டை மற்றும் PIN இலக்கம் ஆகியவை இருக்குமாயின், அவர்கள் ATM/CRM இயந்திரத்தில் தங்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள முடியும். அவர்களின் அட்டையை உள்ளே செலுத்துவதற்கு முன்னர், இயந்திரத்தைச் சூழ்ந்து ஏதேனும் மோசடி நடவடிக்கைகள் அல்லது சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளுக்கான அடையாளங்கள் காணப்படுகின்றனவா என்பதை அவதானித்தல் வேண்டும். ஏதேனும் ஒழுங்கற்றதாக காணப்படின், வாடிக்கையாளர் அந்த ATM/CRM இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. அவர் இந்த விடயத்தை வங்கியின் கவனத்துக்குக் கொண்டுவருதல் வேண்டும்.
03. உங்கள் PIN இலக்கத்தை சரியாக பதிவுசெய்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர்கள் தமது அட்டையை உள்ளே செலுத்தியவுடன், அவர்களின் PIN இலக்கத்தை பதிவுசெய்யுமாறு கோரப்படும். உங்கள் இலக்கத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதற்கு 03 சந்தர்ப்பங்களை மாத்திரம் ATM/CRM இயந்திரம் வழங்குவதுடன் பின்னர் உங்கள் அட்டை உள்ளே சிக்கிக்கொள்ளும். எனவே, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் PIN இலக்கத்தை சரியாகப் பதிவு செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். வாடிக்கையாளர்கள் PIN இலக்கத்தை வெற்றிகரமாகப் பதிவு செய்த பின்னர், அவர்களுக்கான விருப்பத் தெரிவுகள் காண்பிக்கப்படும். வங்கியையும் ATM/CRM இயந்திரத்தையும் பொறுத்து இந்த விருப்பத் தெரிவுகள் வேறுபடலாம். ஆயினும் காசு மீளப் பெறுதல், பணம் வைப்பில் இடுதல், கணக்கு மீதியை சரிபார்த்தல் மற்றும் கணக்குகளுக்கு இடையே பணப் பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கும்.
04. நீங்கள் உங்கள் காசை மீளப் பெறுவதற்கு முன்னர் கணக்கு மீதியை சரிபார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் காசை மீளப்பெறுதல் வெற்றிகரமாக அமைவதை உறுதிப்படுத்துவதற்காக போதியளவு நிதி உங்களிடம் உள்ளதா என்பதை நிச்சயப்படுத்துவதற்கு ATM/CRM இயந்திரத்தில் மீதியை சரிபார்த்தல் விருப்பத் தெரிவின் ஊடாக உங்கள் கணக்கு மீதியை எப்போதும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். மேலும், உங்கள் செலவைக் கண்காணிப்பதற்கும் வரவு செலவுத் திட்டமிடலுக்கு உதவுவதற்கும் உங்கள் கணக்கு மீதியை ஒழுங்காக சரிபார்த்தல் ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.
05. பணத்தை மீளப் பெறும்போது கோரப்பட்ட மொத்தப் பணத்தைப் பெறுவதை அதற்கான பற்றுச்சீட்டுடன் ஒப்பிட்டு திட்டவட்டமாக உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பணத்தை மீளப் பெறும்போது, ATM/CRM இயந்திரம் வழங்கும் கோரப்பட்ட மொத்தப் பணத்தையும் ஏதேனும் எஞ்சிய பணத்தை அல்லது வைப்புக்கான சீட்டையையும் பெற்றுக்கொள்வதை வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். மீளப் பெறப்பட்ட தொகையை அவதானிப்பதும் அதனை பற்றுச்சீட்டுன் ஒப்பிட்டு சரிபார்ப்பதும் மிகவும் முக்கியமாகும்.
06. காசு வைப்புகளின்போது வைப்பில் இடப்பட்ட சரியான தொகையையும் வைப்புக்கான சீட்டையையும் சரிபார்க்கவும்.
பணத்தை வைப்பில் இடும்போது, வாடிக்கைளாயர்கள் தமது காசை அல்லது காசோலையை சரியான துவாரத்தினுள் இட்டு திரையில் காணப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும். சரியான தொகை வைப்பில் இடப்பட்டதா என்பதையும் வைப்புச் சீட்டு சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து ATM/CRM இயந்திரத்தை விட்டு வெளியேறவேண்டும்.
07. கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதற்கு முன்னர் கணக்கு இலக்கங்களையும் கணக்கு தொகைகளையும் எப்போதும் சரிபார்த்தல் வேண்டும்.
கணக்கு மீதிகளைச் சரிபார்க்கும்போது அல்லது கணக்குகளுக்கிடையே பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும்போது கொடுக்கல் வாங்கல்களை உறுதிப்படுத்துவதற்கு முன்னர் வாடிக்கையாளர்கள் கணக்கு இலக்கங்களையும் தொகைகளையும் சரிபார்த்தல் வேண்டும்.
08. உங்கள் ATM/CRM சீட்டுகள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதுடன் கணக்கு மீதிகளை சரிபார்க்கவும்.
வாடிக்கையாளர்கள் தமது ATM/CRM சீட்டுகளை தமது பதிவுகளுக்காக வைத்திருப்பதுடன் கொடுக்கல் வாங்கல்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்துவதற்காக தமது கணக்கு மீதிகளை இணையத்தின் ஊடாக அல்லது தமது வங்கியின் மொபைல் App மூலம் சரிபார்த்தல் வேண்டும்.
09. ATM/CRM இயந்திர முனைய மட்டத்தில் நிகழக்கூடிய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளுதல்.
உதாரணமாக, இயந்திரம் EMV வழிகாட்டல்களுடன் இணங்கி ஒழுகாமை, அட்டையில் உள்ள அடையாளம் காணமுடியாத Chip காரணமாக சில அட்டைகள் நிராகரிக்கப்படுதல் போன்ற தொழில்நுட்ப சிக்கல்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். சிலவேளைகளில் உங்கள் கணக்கில் பணம் கழிக்கப்பட்டிருக்கும் ஆனால், காசு கிடைக்கப்பெறாது இருப்பதுடன் தன்னிச்சையான திருப்பல் நிகழலாம் அல்லது நிகழாமலும் போகலாம். நீங்கள் SMS அறிக்கை சேவையில் பதிவு செய்யப்பட்டிருப்பின், இந்த விடயம் உங்களுக்கு உடனடியாகத் தெரியவரும். உங்களுக்கு உதவி தேவையெனில், உங்கள் வங்கியின் தொடர்பு நிலையத்தை அழைக்குமாறு தங்களுக்கு ஆலோசனை தெரிவிக்க விரும்புகின்றோம்.
முடிவுரை
ATM அல்லது CRM இயந்திரங்களைப் பயன்படுத்துதல் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை அணுகி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான துரிதமானதும் சௌகரியமானதுமான வழிமுறையாகும். எப்போதும் உங்கள் சுற்றாடலைப் பற்றி விழிப்புடன் இருத்தல் வேண்டும். அத்துடன் உங்கள் பதிவுகளுக்கான சீட்டுகளை வைத்திருத்தல் வேண்டும். இந்தக் குறிப்புகளைப் பின்பற்றி, வாடிக்கையாளர்கள் தங்கள் கொடுக்கல் வாங்கல்களை சரியாக மேற்கொள்வதுடன் வாய்ப்பான பிரச்சினைகளை தவிர்க்கவும் முடியும்.