
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
முதல் கட்டணத்தை செலுத்துவதற்கான சேமிப்பு – உதவியான 5 ஆலோசனைகள்
October 7, 2019

உங்களது கனவு இல்லத்தை, நிஜமானதாக மாற்றுவதற்கான முடிவை எடுத்துள்ளீர்கள். வீட்டுக்குதத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நீங்கள் செய்துவிட்டீர்கள், ஆனால், வீட்டைக் கொள்வனவு செய்வதற்கு, முதலாவது கட்ணத்தைச் செலுத்துவதற்கான சேமிப்பை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்களது குறிக்கோளை இலகுவாக அடைவதற்கு, இதோ 5 ஆலோசனைகள்
தற்போதைய செலவுகள்
நீங்கள் உழைக்கும் பணம் எந்த வழியில் செல்கின்றது என்பது பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்றால், சேமிப்பு எனும் பழக்கத்தை உங்களிடம் ஏற்படுத்திக்கொள்வது சிரமமானதாகும். எனவேதான், ஆரம்பக் கட்டணத்துக்கான பணத்தைச் சேமிக்கும்போது, உங்களது செலவீனங்கள் குறித்து நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன்மூலம், பல தேவையற்ற செலவீனங்களை நீங்கள் அடையாளம் கண்டு, மிக விரைவாக உங்களது குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். DFCCஇன் வின்னர் சேமிப்புக் கணக்கானது, 7% சதவீத வட்டி வீதத்தை வழங்கி, சேமிப்பதற்கு உதவியளிக்கின்றது.
பாதீடு
சரியான முறையில் சேமிப்பதற்கு, முறையான பாதீடொன்று உங்களுக்குத் தேவை. செலவீனங்கள் எந்த வகையில் குறைக்க முடியுமோ, அந்த வகையில் குறைத்து, அந்தப் பணத்தை சேமியுங்கள். வேறு ஒரு செலவீனத்தைப் மேற்கொள்வது போன்று, அந்தப் பணத்தைச் சேமிப்பதன் மூலம், உங்களது சேமிப்புத் திட்டத்தை செய்துமுடிக்க முடியும்.
வீடொன்றை கொள்வனவு செய்வது என்பது, பல விடயங்களிலிருந்து உங்களை விடுவிக்கும் என்பதுடன், உங்களது வாழ்க்கையில் நீங்கள் சாதித்த மிகப்பெரிய மைல் கல்லாகும். எனவே, எந்தெந்த செலவீனங்களைக் குறைக்க முடியுமோ, அந்தந்த செலவீனங்களைக் குறைப்பதன் மூலம், இலகுவான முறையில் சேமிப்பை முன்னெடுக்க முடியும். நீங்கள் கடன் பெற்றுக்கொள்ள விரும்பும் தொகைக்கு ஏற்ற வகையில், மாதாந்தம் எவ்வளவு தொகையை உங்களால் மீள் செலுத்தமுடியும் என்பது தொடர்பாக சரியாக அறிந்துகொள்வதற்கு, எமது வீட்டுக் கடன் திட்டத்துக்கான கணிப்பான் உங்களுக்கு உதவியளிக்கும்.
கடன்
ஏற்கெனவே செலுத்தவேண்டிய கடன்கள் இருக்கும்போது, சேமிப்புக் கணக்கொன்றில் பணத்தை வைப்பிலிடுவது, மிகவும் சிரமமான விடயமாகவே காணப்படுகின்றது. வெளியிலுள்ள உங்களது கடன்களை நீங்கள் மீள்புனரமைப்பு செய்வதன் மூலம், இதிலிருந்து வெளியே வரமுடியும். செலுத்தவேண்டியுள்ள கடனட்டைக்கான கட்டணங்களை முழுமையாக செலுத்தி, செலுத்தவேண்டிய வேறு கடன்களையும் செலுத்தி, நல்ல வட்டிவீதத்தில் உங்களுக்கு நல்ல சலுகைகளை வழங்கும் கடன் திட்டத்தை உங்களுக்கு வழங்குதற்கு, DFCC வங்கி மகிழ்ச்சியடைகின்றது. உங்களுக்கு சிறிய அளவிலேயே கடன் இருக்கின்றது என்றால், அதை விரைவில் செலுத்திமுடித்த பின்னர், சேமிக்க ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனெவே சிறியளவிலான கடன்களைப் பெற்றிருப்பது, வீட்டுக்கடனைப் பெறுவதற்கு, சில நன்மைகளை வழங்குகின்றது. DFCC கடனட்டை மூலம் செலவுகளை மேற்கொள்ளும்போது, 1% பணத்தை மீள வழங்கப்பட்டு, சேமிப்பதற்கு உதவியளிக்கப்படுகின்றது. DFCC கடனட்டைகளை இங்கே ஒப்பிட்டுப்பாருங்கள்.
உண்மையான சேமிப்பு
நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, உங்களது குறிக்கோளை எவ்வளவு நாள்களுக்குள் அடைய முடியும் என்பது தொடர்பாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு ஒரு காலவரையரையை வழங்கும் என்பதோடு, சேமிப்பில் ஒழுக்கமாக இருப்பதற்கு உதவியளிக்கும். உங்களது சேமிப்பை இலகுவாக்குவதற்காக, சரியானதொரு சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து, சம்பளக்கணக்கிலிருந்து சேமிப்புக்குக் கணக்குக்கு, ஒரு குறிப்பிட்டத் தொகை வைப்பிலிடப்படுவதற்கான வங்கி ஆணையொன்றை பிறப்பியுங்கள். இதன்மூலம், மாதாந்தம் சேமிப்புக் கணக்கில் ஒரு தொகை வைப்பிலிடப்பட்டுக்கொண்டே இருக்கும். நல்ல வட்டி வீதங்களைத் தரக்கூடிய சேமிப்புக் கணக்கையோ நிலையான வைப்புக் கணக்கையோ தெரிவு செய்வதன் மூலம், நல்லதொரு வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உதவியை எதிர்பார்க்கின்றீர்களா?
உங்களது தேவைக்கு ஏற்ற வகையிலான சேமிப்புக் குறிக்கோளை, விரைவில் அடைந்துகொள்வதற்கு, ஆலோசனை கேட்பது உதவி வழங்கும். அது உங்களது வாழ்க்கைத் துணையாகவோ பெற்றோராகவோ, மிகவும் நெருக்கமான குடும்ப உறுப்பினராகவோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். ஒவ்வொரு முறையும், அரசாங்கத்தரப்பில் கூட, உங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, உங்களது குறிக்கோளை இலகுவாக அடையக்கூடிய உத்தரவாதத்தை வழங்கமுடியும். எனவே, எது சரியானது என்பதை நீங்கள் முதலில் ஆராய்ந்த பார்க்க வேண்டும் DFCC வங்கியின் வீட்டுக் கடன் திட்டம் தொடர்பாக தெரிந்துகொள்வதற்கு, 7 நாள்களுக்கு 24 மணி நேர சேவையை வழங்கும் 0112 350000 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு, எமது விற்பனை முகவர்களுடன் தொடர்பில் இருங்கள்.