அறிமுகம்
அறிமுகம்
ஒவ்வொருவரின் நிதியியல் தொடர்பான பிரயாணமும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை DFCC வங்கியைச் சேர்ந்த நாம் அறிவோம். உங்கள் கனவு இல்லம் ஒன்றுக்காகச் சேமித்தல், உங்கள் பின்ளையின் கல்வியைத் திட்டமிடல் அல்லது நீங்கள் ஓய்வுபெறுவதைத் திட்டமிடல் ஆகியவற்றில் உங்கள் இலக்கு எதுவாயினும், அதனை அடைவதற்கு உங்களுக்கு உதவி செய்ய நாம் தயாராக இருக்கின்றோம். எமது நிபுணத்துவ முதலீட்டுத் திட்டமிடுவோர் கணக்கு அணியினர் உங்கள் குறித்த தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு அமைவாக தனிப்பட்ட நிதியியல் தீர்வுகளைத் திட்டமிடுவதற்கான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளனர். உங்கள் தனித்தன்மை வாய்ந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு உங்களுக்கு உதவுவதற்காக விரிவான ஒரு முதலீட்டுத் திட்டத்தை கட்டியெழுப்புவதற்காக பணிபுரிவதற்கு நாம் நேரத்தை ஒதுக்குகின்றோம். எனவே, ஏன் தாமதிக்க வேண்டும்? இன்றே உங்கள் எதிர்காலத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு, உங்கள் கனவை நனவாக்குவதற்கும் எதிர்கால சந்ததிகளுக்கான உங்கள் மரபுரிமையைப் பாதுகாப்பதற்கும் DFCC வங்கியின் முதலீட்டுத் திட்டம் உங்களுக்கு உதவுவதற்கான அனுமதியை வழங்குங்கள்.
தகவுப் பிரமாணங்கள்
தகவுப் பிரமாணங்கள்
- ‘DFCC Investment Planner’ – 18 வயதுக்கு மேற்பட்ட எவரேனும் தனி நபர்
- ‘DFCC Junior Investment Planner’ – 18 வயதுக்குக் குறைந்த எவரேனும் பராயடையாதவர் (பராயமடையாதவர் சார்பாக ஒரு பெற்றோர் அல்லது சட்ட ரீதியான பாதுகாவலர் கணக்கைத் திறத்தல் வேண்டும்.)
சிறப்பம்சங்கள்
சிறப்பம்சங்கள்
- முதலீடுகளை இலங்கை ரூபாய் மற்றும் குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் மேற்கொள்ள முடியும்
- முதலீடு மீதான உத்தரவாதமளிக்கப்பட்ட உயர் திரும்பல்
- கூட்டுக் கணக்குகள் அனுமதிக்கப்படும்
- ஒவ்வொரு காலாண்டுக்கும் இலத்திரனியல் கூற்றுகள்
Customer Type | Investment Planner Type | Minimum Investment Planner Amount | Investment Planner Tenor |
---|---|---|---|
DFCC – Minor | LKR | 100,000/- | Maximum 18 Years |
DFCC – Minor | FCY | USD 10,000/- (Or equivalent value of any other currency) | Maximum 5 Years |
DFCC – Adult | LKR | 100,000/- | Maximum 15 Years |
DFCC – Adult | FCY | USD 10,000/- (Or equivalent value of any other currency) | Maximum 5 Years |
முதலீட்டுத் திட்ட வட்டி விகிதங்களைச் சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
தேவையான ஆவணங்கள்
தேவையான ஆவணங்கள்
- தகுந்தவாறு ஒப்பமிடப்பட்ட கணக்கைத் திறப்பதற்கான படிவம்
- வாடிக்கையாளரின்/பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை / இலத்திரனியல் அடையாள அட்டை / சாரதி அனுமதிப்பத்திரம்
- பராயம் அடையாதோரின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அடையாளம் காணலுக்கும் பொருத்தமானவிடத்து, உறவுமுறைக்குமான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்
- ‘DFCC Investment Planner’ / DFCC Junior Investment Planner’ நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
நியதிகளும் நிபந்தனைகளும்
நியதிகளும் நிபந்தனைகளும்
- Investment Planner கணக்கில் இருந்து பகுதியளவு பணம் மீளப்பெறுதல் அல்லது கரும பீட பணம் மீளப்பெறுதல் அனுமதிக்கப்படாது
- வட்டி வீதங்கள் நாளாந்தம் கணிக்கப்பட்டு மாதந்தோறும் வரவில் இடப்படும்
- நிலவும் சட்டங்களின் பிரகாரம், பிரயோகிக்கத்தக்க வரி முழுவதும் முதிர்ச்சியின் போது கழிக்கப்படும்
- கணக்கை முன்கூட்டியே மூடும் சந்தர்ப்பத்தில் ஒரு பொதுவான சேமிப்பு வட்டி வீதம் பிரயோகிக்கப்படும்
- ஒரு வாடிக்கையாளர் மாதாந்தம் செலுத்த வேண்டிய கொடுப்பனவை மேற்கொள்ளத் தவறின், ஏழு நாட்கள் கருணைக் காலத்தின் பின்னர், கணக்கு தன்னியக்கமாகவே மூடப்படும்
- பெருந்தொகையான வைப்புகள் அனுமதிக்கப்படாது
மேலும் தகவல்களுக்கும் நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் தயவு செய்து அருகிலுள்ள DFCC வங்கியுடன் அல்லது 011 2350000 என்னும் எமது 24 மணிநேர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- ரூபா 100,000/-.
- 02 வருடங்கள்.
- 20 வருடங்கள்.
- 05 வருடங்கள்.
- 10,000/- ஐக்கிய அமெரிக்க டொலர் அல்லது வங்கி ஏற்றுக்கொள்ளும் ஏதேனும் வேறு நாணயத்தில் சமனான தொகை.
- ஆம்
- இல்லை
- இல்லை. பகுதியளவு பணம் மீளப்பெறுதல் அல்லது கரும பீட பணம் மீளப்பெறுதல் அனுமதிக்கப்படாது.
- ஆகக்கூடிய தொகைக்கு வரையறை இல்லை.
- கொடுப்பனவு செலுத்த வேண்டிய உரிய திகதியிலிருந்து 7 நாட்களின் பின்னர் Investment Planner கணக்கு தன்னியக்கமாகவே மூடப்படும்.
- ஆம். ஒரு பொதுவான சேமிப்புக் கணக்கு வட்டி வீதம் பிரயோகிக்கப்படும்.
- ஆம்.
- இல்லை. நேரடி முதலீடு தடைசெய்யப்பட்டுள்ளது. வைப்புகள் உங்கள் நிதிக் கணக்கில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
- மீதியை இணையவழியான வங்கிச்சேவை மூலம் பார்த்துக் கொள்ளலாம்.
- ஆம்.