DFCC சேமிப்பு இலக்குகளின்

DFCC சேமிப்பு இலக்குகளின்

உங்கள் வாழ்க்கையின் இலக்குகளை நனவாக்குங்கள்!
Savings Goals களுடன் உங்கள் சேமிப்புகளை தன்னியக்கமானதாக உருவாக்குங்கள்!
DFCC இணைய வழியிலான வங்கிச்சேவையில் கிடைக்கும் “ Savings Goals ” சிறப்பம்சங்கள், நீங்கள் தெரிவுசெய்யும் இலக்குகளுக்கு இணங்க நீங்கள் விரும்பும் கால வரையறையில் சமனான தவணைக் கொடுப்பனவுகளாக சேமிக்க உதவுகின்றது.

Savings Goals களின் பிரதான சிறப்பம்சங்கள்:

Savings Goals களின் பிரதான சிறப்பம்சங்கள்:

  • உங்கள் சேமிப்பில் 7% p.a வட்டியை சம்பாதித்தல்
  • உங்கள் இலக்குகளின் விபரங்களை எந்த நேரத்திலும் இலகுவாக கூட்டவும் திருத்தவும் முடியும்
  • தவணைக் கொடுப்பனவுகளை நாளாந்தம், வாராந்தம் மற்றும் மாதாந்தம் அமைத்துக்கொள்ளலாம்
  • உங்கள் இலக்குக் கணக்கை எந்த நேரத்திலும் மூடவும் அதிலிருந்து பணத்தை மீளப் பெறவும் முடியும்
  • ஆகக் குறைந்த இலக்கு ரூபா. 10,000 ஆகும்
  • ஆகக் கூடிய இலக்கு ரூபா 10,000,000 ஆகும்
  • இலக்குகளுக்கான கால அளவு 30 நாட்கள் முதல் 24 மாதங்கள் வரை தேர்ந்தெடுக்க முடியும்

உங்கள் DFCC Savings Goals களை எவ்வாறு செயல்படுத்துவது?

  • இடது பக்கத்தில் உள்ள ‘menu” களில் இருந்து சேமிப்புக் இலக்குகளுக்கான குறியீட்டை தெரிவுசெய்க
  • “Proceed to Goals” என்பதை கிளிக் செய்க
  • உங்கள் இலக்குகளை எதற்காக அமைத்துக் கொள்கின்றீர்கள் என்பதை தெரிவு செய்க
  • தேவையான விவரங்களை பூர்த்தி செய்க

உங்கள் இலக்குகளை எந்த நோக்கங்களுக்காக அமைத்துக் கொள்ளலாம்?

  • உங்கள் திருமணத்துக்காக சேமித்தல்
  • வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சேமித்தல்
  • உங்களுக்கு ஒரு வீட்டைக் கொள்வனவு செய்வதற்காக சேமித்தல்
  • புதிய கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சேமித்தல்
  • நீங்கள் கனவு காணும் விதத்தில் விடுமுறையில் செல்வதற்கு சேமித்தல்
  • உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசு கொள்வனவு செய்வதற்காக சேமித்தல்
  • நீங்கள் தெரிவு செய்யும் ஏதேனும் வேறு தனிப்பட்ட இலக்குகளுக்காக சேமித்தல்

DFCC Savings Goals தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

  • Savings Goals என்றால் என்ன?
    • DFCC Savings Goals என்பது அமைத்துக்கொள்ளப்பட்ட ஒரு நிதி இலக்கை அடைவதற்கும் நீங்கள் விரும்பும் இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் நாளாந்தம், வாராந்தம் அல்லது மாதாந்தம் தன்னிச்சையாக இயங்குவதற்கு உதவுவதற்காக DFCC இணையவழி வங்கிச் சேவையில் கிடைக்கும் சிறப்பம்சமாகும்.
  • Savings Goals களை எவ்வழிகளில் நாம் திறக்கலாம்?
    • DFCC இணையவழி வங்கிச்சேவை ஊடாக
  • DFCC Savings Goals களைத் திறப்பதற்கான ஆகக் குறைந்த தொகை எவ்வளவு?
    • ரூபா 10,000
  • DFCC Savings Goals களினால் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பயன்கள் யாவை?
    • DFCC Savings Goals வாடிக்கையாளர்களின் தெரிவுசெய்யப்பட்ட இலக்குகளுக்காக அவர்கள் விரும்பும் கால வரையறையில் சமனான தவணைக் கொடுப்பனவுகளாக சேமிப்பதற்கு அவர்களுக்கு உதவுகின்றது.
  • DFCC Savings Goals களை அமைத்துக்கொள்வதற்கான ஆகக் கூடிய காலப்பகுதி எவ்வளவு?
    • 2 வருடங்கள்
  • எவ்வகையான DFCC Savings Goals களை அமைத்துக்கொள்ள முடியும்?
    • நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம்

DFCC Online Banking