
Our Sustainability
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
பொருளாதார பொறுப்புணர்ச்சி
DFCCவங்கி பிஎல்சி 60 வருடங்களாக தேசிய மாவட்ட ரீதியாக மற்றும் சமூக அளவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துவருகின்றது.பலஆண்டுகளாக வங்கியானது புதிய பொருளாதாரத்துறைக்கு நிதியிடலில் முதன்மை பெற்றுதிகழ்கின்றது. அவை தற்போது பிரதான வணிகங்களாக காணப்படுகின்றன. நிகழ்காலத்தினை பாரக்கும் போது DFCC ஆனது முக்கியமாக கிராமபுறங்களை மற்றும் பொருளாதாரத்தில் மந்தநிலையில் உள்ள பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு நிதியிடல் மூலம் முதன்மையாக திகழ வழிகோலுகின்றது.
ஆண்டுகளாக தற்போது பிரதான வணிகங்களாக திகழும் புதிய பொருளாதார துறைகளுக்கு நிதியிடலை முதன்மையாக கொண்டுள்ளது வங்கி .முன்னைய உதாரணமாக 1960 களில் வங்கியானது இலங்கையின் முதல் பீச் ஹோட்டலிற்கு நிதியிட்டது. தேசத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக துணைபுரியக் கூடிய பொருந்தக் கூடிய பல ஹோட்டல் செயற்திட்டங்களின் செயற்பாட்டிற்கு இம் மேடை வழிவகுத்தது.அவை இன்று வளமான துறைகளாக காணப்படுகின்றன. வங்கியானது ஆடைகள், மீன்வளர்ப்பு ,செரமிக்ஸ் தோட்டக்கலை மற்றும் மீள்புதுப்பிக்கதக்க எரிசக்தி போன்ற பெயர் சொல்லக் கூடிய தனியார் துறைகளிலும் முதன்மையாக உள்ளனர். அத்தோடு ஆலோசனை சேவைகள் மற்றும் உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நிறுவனங்களின் மாறுதல்களுக்கு தூண்டுகோலாக உள்ளது.
நிகழ்காலத்தினை நோக்கும் போது DFCC முதன்மையாளராக திகழ வழிகோலுவதுடன் கிராமபுறங்களை மற்றும் பொருளாதாரத்தில் மந்தநிலையில் உள்ள பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு நிதியிடல் மூலம் அவற்றை வழிநடாத்துகின்றது. இதில் தேசிய உள்நாட்டு உற்பத்திக்கு ஒவ்வொரு மாகாணத்தினதும் பங்களிப்பு தொடர்பாக DFCC வங்கியின் வலையமைப்பின் அணுகல் முறையானது குறைந்த GDPதரப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் DFCC இன் சேவை மையங்கள் உயர் கவனம் செலுத்துவதனை காட்டகிறது.
இச்சாதனைகள் குறித்துக் காட்டுவது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் துறையின் அபிவிருத்திக்கான குறிப்பிட்ட பங்களிப்பு மற்றும் நீண்ட கால ஈடுபாட்டினை காட்டுகின்றன. கடன் வழங்குதல் சேமிப்பு மற்றும் ஏனைய பொருட்கள் சேவைகளுக்கான முதலீடு மூலதன உருவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கல் எனபவற்றின் ஊடாக கிராமபுற பொருளாதார வளர்ச்சிக்கான ஈடுபாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.