தகைமைகள்
தகைமைகள்
- ஏதேனும் இலங்கை ரூபா கணக்கு
- அவர்களின் கொடுப்பனவுகளை வெளிநாட்டு நாணயத்தில் பெறுவதற்கான தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக்கணக்கு (PFCA) / வணிக வெளிநாட்டு நாணயக் கணக்கு (BFCA).
வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு இணங்கி ஒழுகுவதற்கு அமைவாக, ஒரு Freelancer வாடிக்கையாளர் தகுதியின் அடிப்படையில் ஏதேனும் வேறு வகையான கணக்குகளைத் திறப்பதற்குத் தகுதி உடையவராவார்.
DFCC Freelancer இன் பிரதான பயன்கள்:
DFCC Freelancer இன் பிரதான பயன்கள்:
- தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (PFCA) மற்றும் வணிக வெளிநாட்டு நாணயக் கணக்கு (BFCA) ஆகியவற்றுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
- உங்கள் வருமானத்தின் அடிப்படையில் DFCC Pinnacle, Prestige, Salary Partner, Salary Plus பயன்கள்
- சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகள் ஆகியவற்றுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
- இணைப்புக் கட்டண விலக்களிப்பு, வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களுக்கு 2% பண மீளளிப்பு மற்றும் 0% இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் ஆகியவற்றுடன் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் கார்ட் மற்றும் கடன் அட்டைகளின் பயன்கள்
- பெண் Freelancer களுக்கு DFCC ஆலோக்கா பயன்கள்
- விசேட காப்புறுதி திட்டங்கள்
முன்மொழிவு அடிப்படையிலான பயன்கள் மற்றும் சலுகைகள் பற்றி கீழே தரப்பட்டுள்ளது.
DFCC Freelancer வகையின் கீழ் திறக்கப்பட்ட கணக்குகள் கீழே தரப்பட்ட மாதாந்த வருமானத்தின் அடிப்படையில் வங்கியின் பின்வரும் முன்மொழிவுகளுக்குத் தகுதியுடையவையாகும்;.
முன்மொழிவு | இலங்கை ரூபா | சமனான ஐக்கிய அமெரிக்க டொலர் |
---|---|---|
Pinnacle | Rs. 450,000 | நாணயமாற்றுத் திகதியின் பிரகாரம், சமனான ஐக்கிய அமெரிக்க டொலர் தொகை பயன்படுத்தப்படும். |
Prestige | Rs. 150,000 | |
Salary Partner | Rs. 50,000 | |
Salary Plus | Rs. 25,000 |
DFCC Freelancer ஆவது எவ்வாறு?
DFCC Freelancer ஆவது எவ்வாறு?
- கணக்கைத் திறப்பதற்கு ஒரு கிளைக்கு வருகை தருவதன் மூலம்.
- DFCC Digital Onboarding ஊடாக கணக்கைத் திறப்பதற்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கவும்.Via DFCC Digital Onboarding.
தயவு செய்து கவனிக்கவும்: DFCC டிஜிட்டல் ஆன்போர்டிங் மூலம் நீங்கள் எந்தவொரு சேமிப்புக் கணக்கையும் திறக்க தகுதியுடையவர், அங்கு நீங்கள் வேலை செய்யும் வகையை ‘Freelancer” என தேர்ந்தெடுக்கும்போது மட்டுமே நீங்கள் Freelancer களாக வகைப்படுத்தப்படுவீர்கள்.
DFCC Freelancer இற்கான விசேட மாஸ்டர் கார்ட் அட்டையின் பிரதான சிறப்பம்சங்கள்
DFCC Freelancer இற்கான விசேட மாஸ்டர் கார்ட் அட்டையின் பிரதான சிறப்பம்சங்கள்
Fiverr, Upwork மற்றும் Freelancer.com ஆகியவற்றில் பணி புரியும் DFCC Freelancer கள் மாத்திரமே இந்தக் கடன் அட்டைக்குத் தகுதி உடையவர்களாவர் என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும். நியம தரவுகளுக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்கள் மதிப்பீட்டுக்காக கீழே தரப்படும் விபரங்களையும் ஆவணப்படுத்தல்களையும் வழங்குதல் வேண்டும்.
- விண்ணப்பதாரி பணிபுரியும் தளங்கள்
- தளத்தில் விண்ணப்பதாரியின் தோற்றப் பெயர் (Profile Name)
- தளத்தில் விண்ணப்பதாரியின் தரக் கணிப்பு
- தளத்தில் பணிபுரியும் காலப்பகுதி
- தளத்திலிருந்து 6-மாத பணி ஒழுங்கு
- Payoneer பணப்பையில் இருந்து 6-மாத வருவாய்கள்
- 6-மாத வருவாய்களின் பணம் அனுப்பல் வங்கிக் கூற்றுகள்
சிறப்பம்சங்கள் | விபரங்கள் |
---|---|
உற்பத்தி | வல்ட் மாஸ்டர் கார்ட் Freelancer கடன் அட்டை |
இணைப்புக் கட்டணம் /வருடாந்தக் கட்டணம் | இணைப்புக் கட்டணம் – கட்டணம் இல்லைவருடாந்தக் கட்டணம் – Rs.4,500/- |
வட்டி வீதம் | 28% ஆண்டொன்றுக்கு |
காசு முற்பணமும் LOC வரையறையும் | கடன் வரையறையின் 75%. தீர்வையின் பிரகாரம் காசு முற்பண கட்டணங்கள் அறவிடப்படும். |
காசு மீள வழங்கல் | இலங்கை ரூபா கொடுக்கல் வாங்கல்களுக்கு – 1%வெளிநாட்டு நாணயக் கணக்குக் கொடுக்கல் வாங்கல்களுக்கு – 2% |
இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டம் | 6 மாத 0% தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள். ஆகக் குறைந்தது ரூபா 25,000/- மற்றும் ஆகக் கூடியது ரூபா 1,000,000/- கொடுக்கல் வாங்கல்களுக்கு. எல்லா இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களுக்கும் ஓர் அமைப்புக் கட்டணம் ரூபா 1,500/- அறவிடப்படும். |
அறவீட்டு முறை | 5% கட்டாய அறவீட்டுக்கான நிலையான அறிவித்தல் வழங்கப்படுதல் வேண்டும். |
தீர்வை / பயன்கள் | பொதுவான கடன் அட்டைத் தீர்வை மற்றும் ல்ட் மாஸ்டர் காட் பயன்கள் ஏற்புடையனவாகும். |
DFCC Freelancer இற்கான காப்புறுதித் தீர்வுகள்
DFCC Freelancer இற்கான காப்புறுதித் தீர்வுகள்
- வயதெல்லை: 18 – 70 வயது
- காப்புறுதிக் கொள்கைக் காலப்பகுதி: காப்புறுதிக் கொள்கை ஆரம்பித்த திகதியிலிருந்து ஒரு வருடம்
- புவியியல் வரையறை: இலங்கையினுள் மாத்திரம்
- காத்திருக்கும் காலப்பகுதி: நோய் / சுகவீனம் 90 நாட்கள்
- காப்பீடு செய்யப்படாத பாரதூரமான நோய்கள்: 20
காப்பறுதி செய்யப்படும் காப்பீடு / தொகை
பயன் | திட்டம் A | திட்டம் B | திட்டம் C | திட்டம் D | திட்டம் E |
---|---|---|---|---|---|
இலங்கையினுள் வைத்தியசாலை அனுமதிக்கான பயன்கள் – வருடாந்த / நிகழ்வுக்கான வரையறை (பாரதூரமான நோய்கள் மாத்திரம்) | 100,000 | 200,000 | 300,000 | 400,000 | 500,000 |
பிரிவு 01 | |||||
ஒரு நிகழ்வுக்கான அனுமதிக் கட்டணத்தை உள்ளிட்ட மொத்த வைத்தியசாலை அறைக் கட்டணங்கள் (பாரதூரமான நோய்களுக்கு மாத்திரம்) | 30,000 | 60,000 | 90,000 | 120,000 | 150,000 |
பிரிவு 02 | |||||
ஒரு நிகழ்வுக்கான விசேட சேவைகள் | 20,000 | 40,000 | 60,000 | 80,000 | 100,000 |
பிரிவு 03 | |||||
ஒரு நிகழ்வுக்கான சத்திரசிகிச்சை நிபுணர் மற்றும் வைத்தியருக்கான கட்டணங்கள், தொழிற்பாட்டுச் செலவுகள், மருத்துவச் செலவுகள் மற்றும் அவசர போக்குவரத்துச் செலவுகளை உள்ளிட்ட எல்லா ஏனைய செலவுகள் | 50,000 | 100,000 | 150,000 | 200,000 | 250,000 |
வரியுடன் தவணைக்கட்டணம் (ரூபா) | 1,000 | 1,500 | 2,000 | 2,750 | 3,250 |
DFCC Freelancer பற்றி அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
DFCC Freelancer பற்றி அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
- DFCC Freelancer என்றால் என்ன?
- DFCC Freelancer என்பது உள்நாட்டு நாணயத்தில் ஒரு வருவாய் ஈட்டும் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கும் இணையத் தளங்களின் நாணயம் ஊடாக ஒரு வருவாய் ஈட்டும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்குமான (உதாரணமாக, Fiverr, Uber, Upwork போன்ற ஏனைய நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் கொடுப்பனவுக்குப் பதிலாக குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது குறித்த சேவைகளை வழங்குவதற்கு இணையத் தளத்ததைப் பயன்படுத்தும் தனிப்பட்ட நபர்கள்) சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள தனிப்பட்ட நபர்களின் தேவைகளை நிறைவேற்றும் தளத்தைப் அடிப்படையாகக் கொண்ட பணியாளர்களாகிய வாடிக்கையாளர்களைக் குறிக்கோளாகக் கொண்ட ஒரு முன்மொழிவாகும்.
- DFCC Freelancer இன் கீழ் நான் ஒரு கணக்கை எவ்வாறு திறக்கலாம்?
- நீங்கள் ஒரு வங்கிக் கிளைக்கு வருகை தரலாம் அல்லது DFCC Digital Onboarding platform ஐப் பயன்படுத்தி இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.
- DFCC Freelancer பிரிவின் கீழ் ஒரு கணக்கை வைத்திருப்பதன் பயன்கள் யாவை?
- தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (PFCA) மற்றும் வணிக வெளிநாட்டு நாணயக் கணக்கு (BFCA) ஆகியவற்றுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
- உங்கள் வருமானத்தின் அடிப்படையில் DFCC Pinnacle, Prestige, Salary Partner, Salary Plus பயன்கள்
- சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகள் ஆகியவற்றுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
- இணைப்புக் கட்டண விலக்களிப்பு, வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களுக்கு 2% பண மீளளிப்பு மற்றும் 0% இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் ஆகியவற்றுடன் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் கார்ட் மற்றும் கடன் அட்டைகளின் பயன்கள்
- பெண் Freelancer களுக்கு DFCC ஆலோக்கா பயன்கள்
- விசேட காப்புறுதி திட்டங்கள்
நீங்கள் கீழே குறிப்பிடப்படும் பயன்களைப் பெறுவதற்கு உரித்துடையவர்களாவீர்கள்:
- DFCC Freelancer வகுதியின் கீழ் எனது கணக்கின் ஊடாக சர்வதேச வாடிக்கையாளர்களிடம் இருந்து நான் கொடுப்பனவுகளைப் பெற முடியுமா?
- ஆம். நீங்கள் உங்கள் சர்வதேச வாடிக்கையாளர்களிடம் இருந்து கொடுப்பனவுகளைப் பெற முடியும். உதாரணம்: நீங்கள் ஐக்கிய அமெரிக்க டொலர், பிரித்தானிய பவுண் அல்லது யூரோ நாணயத்தில் ஒரு வெளிநாட்டு நாணயக் கணக்கைத் திறந்தால், அத்தகைய நாணயங்களில் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள முடியும்.
- எனது கணக்கு தொடர்பாக எனக்கு ஏதேனும் தகவல்கள் அல்லது கேள்விகள் இருக்குமாயின், எனக்குக் கிடைக்கும் ஆதரவு விருப்பத் தேர்வுகள் யாவை?
- உங்கள் கணக்கு தொடர்பான தகவல்களை நீங்கள் பார்வையிடுவதற்கு DFCC வேர்சுவல் வொலற் அல்லது இணையத்தின் ஊடாக வங்கிச் சேவைக்குப் பதிவு செய்யலாம் அல்லது எமது 24 மணி நேர தொடர்பு நிலையத்துடன் 011 2350000 என்னும் இலக்கத்துக்கு அழைத்து எமது இணையத்தளத்தின் ஊடாக விசாரணைப் படிவம் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்