DFCC ஆசிரியர் கடன்

DFCC ஆசிரியர் கடன்

அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஆசிரியர்களுக்கான விசேட தனிப்பட்ட கடன் திட்டம்.

தகைமை

தகைமை

  • அரசாங்கம், அரசாங்கம்/தனியார் கலந்த அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார்/சர்வதேச பாடசாலையில் ஆசிரியராக இருக்க வேண்டும் அல்லது கல்வி நிர்வாக சேவையில் நிர்வாகி/மூத்த நிர்வாகியாக (தரம் I, தரம் II, தரம் III அல்லது விசேட தரம்) இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.30,000 பெறும் ஆசிரியர்கள் (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள்). குறைந்தபட்ச மாத வருமானம் ரூ. 50,000 பெறும் கல்வி நிர்வாக சேவை தனிநபர்கள் (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள்).
  • குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் நிரந்தர சேவையில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.
  • 18 முதல் ஓய்வு பெறும் வயதுக்குட்பட்ட நபர்கள் மற்றும் ஓய்வு பெறும் திகதிக்கு முன் கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

மீள்செலுத்துகை

  • நபரின் ஓய்வு பெறும் வயதிற்கேற்றவாறு, அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை ஆசிரியர் கடனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் தவணை கணக்கீட்டைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் (தனிநபர் கடன் கணிப்பான்)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து DFCC வங்கி கிளைக்கு சமர்ப்பிக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்வோம்.

மேலும் அருகிலுள்ள DFCC வங்கிக் கிளைக்கு விஜயம் செய்தும் விண்ணப்பிக்க முடியும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளும் நிபந்தனைகளும்
  • தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • பொருத்தமான தொழில்முறை அமைப்பிலிருந்து அடையாளம் அல்லது தொழில்முறை தகுதியின் பிரதி (பொருந்தினால்)
  • DFCC வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தொழில்தருநரிடமிருந்து நிறுவனத்தின் கடித தலைப்பில் சம்பளத்திலிருந்து கடன் தொகையை செலுத்துவதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் கடிதம்
  • கடைசி 3 மாதத்திற்கான அசல்/உறுதிப்படுத்தப்பட்ட சம்பளச் சிட்டைகள்
  • தீர்க்க வேண்டிய கடன் தொகை தொடர்பில் உரிய நிதியியல் நிறுவனங்களிடமிருந்து எழுத்து மூலமான உறுதிப்படுத்தல்

டிஜிட்டல் வங்கிச்சேவை

வட்டி வீதம்

உதவு கருவிகள் மற்றும் ஆதரவு

எங்களுடன் தொடர்பு கொள்வதற்கு

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000